ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரம் யார் வசம்?

ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரத்துக்கு தலீபான்கள், ஆப்கானிஸ்தான் அரசு என இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்தநிலையில் அங்கு கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை பிடிப்பதற்கு கடந்த 9-ந்…

சிரியாவில் வான் தாக்குதல் – அப்பாவி மக்கள் 30 பேர்…

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி…

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5…

திக்ரித், ஈராக் நாட்டில் பாக்தாத் நகரின் வடக்கே பைஜி மாவட்டத்தில் உள்ள ஆல்பு ஜுவாரி என்ற கிராமத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில், ஐ.எஸ். அமைப்பின் தீவிரவாதிகள் சிலர் ஹாம்ரின் மலை பகுதியில் இருந்து வந்து டைக்ரிஸ் ஆற்றை கடந்து அதன்பின்னர் இந்த சோதனை சாவடி மீது…

ட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு

துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான லிராவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. துருக்கியின் பணமானது "அமெரிக்காவின் ஸ்திரமான டாலர்" மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான…

ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 5 நாடுகளில் விமான போக்குவரத்து…

டப்ளின், அயர்லாந்தை சேர்ந்த விமான நிறுவனம், ரயனயிர். இந்த விமான நிறுவனம், ஜெர்மனி, சுவீடன், அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த விமான நிறுவன ஊழியர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.…

கனடா: துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்

கனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New Brunswick) நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த…

போகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் பேரிடர் நிறுவனமான நெமாவின் அதிகாரி ஒருவரும் புதன்கிழமையன்று நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான போர்னோவில் ராணுவ தளத்தின் மீது நடத்திய தாக்குதலில்…

அமெரிக்காவின் பொருளாதார தடை ஏற்றுக்கொள்ள முடியாதது: ரஷ்யா கருத்து

மாஸ்கோ, இங்கிலாந்தில்  உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோவிசோக் எனும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா கடந்த…

அமெரிக்க தடைகள் எதிரொலி: ரஷ்ய நாணய மதிப்பில் அதிக வீழ்ச்சி

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்த சில மணிநேரங்களில் டாலருக்கு இணையான ரஷ்ய நாணய மதிப்பில், பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி இதுதான். பிரிட்டனிலுள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீதும், அவரது மகள் மீதும் நரம்பு…

ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதலில் 43 பேர்…

போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,,பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பேருந்து, அப்போது சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 43 பேர்…

அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்லும் நவீன ஹைப்பர்சோனிக் விமானத்தைப் பரிசோதித்தது சீனா

அணுவாயுதங்களைத் தாங்கியவாறு ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஸ்டார்ரி ஸ்கை 2 என்ற அதிநவீன ஹைப்பர் சோனிக் விமானத்தை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. தரையில் இருந்து புறப்படும் ஏவுகணைகளத் துல்லியமாக ஊடுருவித் தாக்கக் கூடிய இந்த ஹைப்பர் சோனிக் விமானத்தை வடமேற்கு சீனாவின் மக்கள்…

’வெனிசுவேலா சட்டமன்ற உறுப்பினரும் மாணவத் தலைவரும் கைதாகினர்’

சட்டமன்ற உறுப்பினர் ஜுவான் றெசன்ஸும் அவரது சகோதரியும் மாணவத் தலைவரொருவருமான ரபேலா றெசன்ஸும் வெனிசுவேலாத் தலைநகர் கராகஸிலுள்ள அடுக்குமாடியொன்றில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வெனிசுவேலாவின் எதிரணி தெரிவித்துள்ளது. கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற ட்ரோன் வெடிப்புகளைத் தொடர்ந்து வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட நிலையிலேயே குறித்த கைதுகள்…

அமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டன..

டெஹ்ரான் : ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான்…

ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை! : ஐ.நா…

அண்மையில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இன்னமும் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து 2 மாதங்கள் கூட ஆகாத…

சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது, வடகொரியா

சியோல், ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் (எல்லையோர கிராமம்) வைத்து எங்களிடம் ஒப்படைத்தது. அவர்…

காசா முனையில் இஸ்ரேல் குண்டு வீச்சு: ஹமாஸ் இயக்கத்தினர் 2…

காசா, பாலஸ்தீனைப் பொறுத்தவ ரயில், அங்கு ஹமாஸ் இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற ஹமாஸ் இயக்கம், பாலஸ்தீன மக்களிடையே செல்வாக்கு பெற்று உள்ளது. பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலை மீட்டுக்கொடுத்து, மேற்குக்கரை, காசா ஆகிய பகுதிகளைக் கொண்ட இஸ்லாமிய குடியரசாக மாற்றுவதே ஹமாஸ்…

ஈரான் மீது இன்று முதல் பொருளாதார தடை; அமெரிக்க உளவியல்…

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது கடுமையான, ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை  இன்று முதல் அமல்படுத்தியது. வரலாற்று ரீதியிலான  கடுமையான அபராதத்தை   மீண்டும் கொண்டு வந்த பல கட்சிகளின் அணுசக்தி உடன்படிக்கை மே மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் கைவிடப்பட்டது. ஈரானியர்கள் அமெரிக்க மறுபடியும் விதிக்கும் தடைய எதிர்பார்த்து புதிய…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்களாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பாலி, லம்போக் மட்டும் இன்றி சுற்றி உள்ள நகரங்களையும் கடுமையாக உலுக்கியது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. நிலநடுக்கத்தை…

கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் – சௌதி அரேபியா…

தனது நாட்டின் உள்விவகாரத்தில் 'தலையிட்ட' கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகளில், கனடாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது குறித்தும், சௌதி அரேபியாவுக்கான கனடாவின் தூதரை நாடு…

19 வயது மாணவனை கொன்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறியாட்டம்..

சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25-ம் தேதி நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.…

அலைபேசி இணையச் சேவைகள் முடக்கம்

மாணவர்களால் பங்களாதேஷில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, நாட்டின் அநேகமான இடங்களில், அலைபேசிகளுக்கான இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. வேகமாகப் பயணித்த பஸ்ஸொன்று மோதியதன் காரணமாக, இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஒன்றுகூடிய மாணவர்கள், கடந்த…

இரண்டாம் உலகப்போர் விமானம் விபத்து: சுவிட்சர்லாந்தில் 20 பேர் பலி

இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி - ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர்…

12 பள்ளிகளுக்கு தீ வைத்த பயங்கரவாதிகள்..

பாகிஸ்தானில் 12 பள்ளிகளுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கில்கிட்-பல்டிஸ்தான்…