அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்: ஈரான் மிரட்டல்

தெஹ்ரான், அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் விலகிக்கொண்ட அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ஈரானின் வளர்ச்சிக்கும், அணு ஆயுதம்…

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது..

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூர்…

10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் வாங்கலாம்.. வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும்…

கராகஸ்: வெனிசூலாவில் நிலவும் மோசமான பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அந்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணங்களை செல்லாது என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிக்க இருக்கிறார். வெனிசூலா தற்போது மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. அந்நாட்டின் பணவீக்கம் தற்போது 10 லட்சம் சதவிகிதத்தை தாண்டி இருக்கிறது.…

அனல் காற்றுக்கு 65 பேர் பலி – தேசிய பேரிடராக…

ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் 200-க்கு மேற்பட்டோர் பலி..

சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக…

முக்கிய ராக்கெட் ஏவுதளம் அகற்றம்: வாக்குறுதியை நிறைவேற்ற வட கொரியா…

தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோள் படங்கள் கடந்த ஜூன் மாதம் நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பின்போது…

காட்டுக்கு பட்டா போட்ட வைர கம்பெனி; நாடு கடத்தப்படும் யானைகள்

தென்னாப்பிரிக்காவில் தங்களுக்கு சொந்தமான இயற்கைக் காப்பகத்தில் இருந்து 200 யானைகளை, அண்டை நாடான மொசாம்பிக்கில் உள்ள பூங்கா ஒன்றிற்கு இடம்மாற்றும் நடவடிக்கையை தொடங்கிவிட்டதாக வைர சுரங்கத் தொழில் நிறுவனமான டீ பீர்ஸ் (De Beers) தெரிவித்துள்ளது. யானைகள் அதிகமாக இருக்கும் வெனிஷியா லிம்போபோ காப்புக்காடுகளில் இருந்து, மொசாப்பிக்கின் ஜினாவே…

லாவோஸ்: அணை உடைந்து விபத்து; நூற்றுக்கணக்கானோர் மாயம்

தென் கிழக்கு லாவோஸில் உள்ள ஓர் அணை உடைந்ததில் நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை என்கிறது அந்நாட்டு ஊடகம். தென் கிழக்கு லவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில் நீர்மின் அணை ஒன்று உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை மாலை உடைந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அணை அருகே உள்ள ஆறு கிராமங்கள்…

சோமாலியாவில் ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்; 27 வீரர்கள் கொன்று…

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தாவின் இணை இயக்கமான அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் சோமாலியாவுக்கு வரும் அயல்நாட்டினரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க சோமாலியா ராணுவம் கடுமையாக…

தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு..

ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு…

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தென்கொரியாவை வலியுறுத்தும்…

கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த சந்திப்பின்போது, 65 ஆண்டுகளாக நீடித்து வந்த கொரிய போரை முடிவுக்கு கொண்டு வரவும், கொரிய தீபகற்பத்தினை அணு ஆயுதமற்ற பிரதேசம் ஆக்கவும் உறுதி பூண்டனர். இந்நிலையில், கொரிய…

பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள்

கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி…

காபூல் விமான நிலையத்தில் தற்கொலை படை தாக்குதலில் 11 பேர்…

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டின் துணை அதிபராக இருக்கும் அப்துல்…

சிரியா: ஐ.எஸ் படைகளிடமிருந்து 422 பேர் மீட்பு

தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் 'வைட் ஹெல்மெட்ஸ்' எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வைட் ஹெல்மெட்ஸ் குழுவை சேர்ந்த சுமார் 422 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழுள்ள கோலன் ஹைட்ஸ் வழியாக ஜோர்டானுக்கு இரவு முழுவதும்…

வெப்ப அலை, எச்சரிக்கும் அரசு

ஜப்பானில் வெப்ப அலை காரணமாக ஏறத்தாழ 30 பேர் பலியானார்கள். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக் கோளாரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மத்திய ஜப்பானில் வெப்ப அளவு 40.7 டிகிரி செல்சியஸை எட்டி…

வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே – உறுதி அளித்த அதிபர்

வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்றுமைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜிம்பாப்வேயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி நடந்த பொது கூட்டத்தில் அவர் இவ்வாறாக பேசி உள்ளார். ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே…

சத் நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்குதல்: 18 பேர்…

என்டிஜமீனா, நைஜீரியா நாட்டின் எல்லையை ஒட்டிய சத் நாட்டின் தபவுவா நகரின் தெற்கே கிராமம் ஒன்றில் போகோ ஹரம் அமைப்பினை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த 18 பேரை கொன்றுள்ளனர்.  இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.  10 பெண்கள் கடத்தப்பட்டு உள்ளனர். நைஜீரியாவில் கடந்த 2009ம்…

இஸ்ரேல் – பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலி

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் நான்கு பாலத்தீனர்கள் வெள்ளிக்கிழமையன்று கொல்லப்பட்ட பெரிய சண்டைக்குப் பின்னர், காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகளால் முயற்சி…

113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லியன் டாலர் பெறுமதியான…

தென்கொரியாவின் உள்ளேஉங்டோ என்ற தீவுக்கு அண்மைய கடற்பரப்பில் 420 மீட்டர் ஆழத்தில் 113 ஆண்டுகள் பழமையான மிகவும் பெறுமதியான ரஷ்யப் போர்க் கப்பல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இப்போர்க் கப்பல் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 1904 முதல் 1905 ஆமாண்டு வரை போர் நடைபெற்ற போது மூழ்கடிக்கப் பட்ட…

பூஜ்டிமோன் மீதான பிடியாணை ரத்து

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தின் முன்னாள் அதிபரான சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள அவரது நான்கு ஆதரவாளர்கள் மீதான ஐரோப்பிய கைதாணையை திரும்ப பெறுவதாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கேட்டலோனியா சுதந்திரத்துக்காக கிளர்ச்சியை உண்டாக்கியதாக பூஜ்டிமோன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்வதற்காக அவரை ஸ்பெயினிடம் ஒப்படைக்க…

மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்?

கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள்…

4200 ஆண்டுகளுக்கு முன்பு.. நாம் நடந்து வந்த புதிய பாதை..…

லண்டன்: மனித குல வரலாற்றில் புதிய காலம் (Age) ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கற்காலம், இரும்புக்காலம் ஆகியவற்றின் வரிசையில் புதிய காலம் ஒன்றை விஞ்ஞானி்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலகட்டத்தின்போது மிகப் பெரிய வறட்சியை பூமி சந்தித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த காலத்திற்கு இந்தியாவின் ஒரு…

32 கி.மீ நடந்து வேலைக்கு வந்த இளைஞர் – கார்…

பணிக்கு சேர்ந்த முதல் நாளில் 32 கி.மீ நடந்த இளைஞரின் கதையை கேட்ட முதலாளி கார் ஒன்றை பரிசளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாம் நகர் அருகே உள்ள பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22). கல்லூரியில் படித்து வரும் இவருக்கு…