ஏஇஎஸ் போராட்டத்தில் பாஸ் கட்சி சட்ட பலவீனத்தைக் கண்டு பிடித்துள்ளது

ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறையின் கீழ் கொடுக்கப்பட்ட குற்றப்பதிவுகள் சட்டப்படி செல்லாதவை. அத்தகைய குற்றப்பதிவுகளை வெளியிடும் அதிகாரமோ அந்த முறையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவோ சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இல்லை. இவ்வாறு அஞ்சல் வழி அனுப்பப்படும் குற்றப்பதிவுகளுக்கு எதிராகப் போராடும் பாஸ்…

சிப்பாங் ஏஇஎஸ் கேமிராக்களைத் ‘திரையிட்டு மூடிவைக்கும்’ பணியை எம்பிஎஸ் செய்யாது

சிப்பாங் முனிசிபல் மன்றம் (எஸ்பிஎஸ்), தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களைத் திரையிட்டு மூடும் பணியைத் தான் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளது. அதைச் செய்யுமாறு குத்தகையாளருக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. சிலாங்கூர் அரசு இதற்குமுன் அறிவித்ததுபோல், முனிசிபல் மன்றம் அந்த வேலையைச் செய்யப்போவதில்லை என்பதை எம்பிஎஸ் தலைவர் முகம்மட் சயுத்தி பின்…

சிலாங்கூர் AES கேமிராக்களை வெள்ளிக் கிழமை அகற்றும்

சிலாங்கூரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் வெள்ளிக் கிழமை அகற்றும். "அது அகற்றப்படும் நேரத்தை நான் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்," என ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார். SKVE என்ற தெற்குக் கிள்ளான்…

ஏஇஎஸ், வேக கேமிராக்கள் மீதான புகார்களை பிஏசி ஆராய வேண்டும்

பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) வேக கேமிராக்கள் ஆகியவை தொடர்பில் தாம் சேகரித்துள்ள புகார்களை  நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு(பிஏசி)விடம் ஒப்படைத்துள்ளார். பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமாஸ், ஏஇஎஸ் குத்தகை ஒப்பந்தத்தையும் குத்தகையாளர், வேக கேமிராக்களின் கொள்முதல் முதலியவற்றையும் பிஏசி ஆராய…

சிலாங்கூரில் ஏஇஎஸ் கேமிராக்களை அகற்ற 14 நாள் காலக் கெடு

சிலாங்கூர் மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு தானியங்கி அமலாக்க முறை (ஏஇஎஸ்) கேமிராக்களை அகற்றுவதற்கு மாநில அரசாங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு இன்று தொடக்கம் 14 நால் காலக் கெடுவை மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது. அமைச்சு அதனைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் 'துணையுடன்' அந்த கேமிராக்கள் அகற்றப்படும் என…

கொங்கின் கொல்லைப்புறத்தில் ஏஇஎஸ்-ஸுக்கு எதிர்ப்பு

பக்காத்தான்-ஆதரவு அமைப்பு ஒன்று, மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)க்கு எதிர்ப்புத் தெரிவித்து சித்தியாவான், லூமுட்டில் உள்ள போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா-வின் நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்துக்குமுன் கண்டனக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியது. பிற்பகல் மணி 2-க்கு நடத்தப்பட்ட அக்கண்டனக் கூட்டத்தில் சுமார் 500…

ஜோகூர் அம்னோவுடன் தொடர்பா? மறுக்கிறது ஏஇஎஸ் குத்தகை நிறுவனம்

மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)யைக் குத்தகைக்கு எடுத்துள்ள பேத்தா தெகாப் சென். பெர்ஹாட், அதற்கு ஜோகூர் அம்னோ அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. “பேத்தா தெகாப்(Beta Tegap)சென். பெர்ஹாட், அந்நிறுவனத்துக்கு அம்னோவுடன் உறவோ தொடர்போ இல்லை என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்புகிறது”, என்று பேத்தா தெகாப்…

சிலாங்கூர் ஏஇஸ்-ஸை நிறுத்தியது, சுயேச்சை ஆய்வு தேவை என்கிறது

போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) அளித்த விளக்கத்தில் திருப்தியுறாத  சிலாங்கூர் அரசு, அம்மாநிலத்தில் ஏஇஎஸ் அமலாக்கப்படுவதற்கு அனுமதி வழங்காது என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று போக்குவரத்துத் துறையின் விளக்கத்தைக் கேட்டபின்னர்  மாநில அரசு அம்முடிவுக்கு வந்ததாக காலிட்(இடம்) கூறினார். “நேற்று ஆர்டிடி தலைமை இயக்குனர் சோலா…

AES சம்மன் பெற்றோருக்கு உதவ பாஸ் முகப்புச்சேவை

தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்) யின்கீழ் சம்மன்கள் பெற்றோருக்கு உதவ பாஸ், கோலாலும்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் அதன் தலைமையகத்தில் ஒரு முகப்புச் சேவையைத் தொடங்க விருக்கிறது. நவம்பர் 21-இலிருந்து அது செயல்படும். சம்மன் பெற்றோர் அவற்றை அங்கு கொண்டுவரலாம் என்று பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். அது…

போக்குவரத்து அமைச்சர் : “AES குத்தகை நிறுவனத்துடன் எனக்குத் தொடர்பில்லை”

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, மிகுந்த குறைகூறலுக்கு இலக்காகியுள்ள தானியக்க அமலாக்க முறையைக்  குத்தகைக்கு எடுத்துள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்றின் மிகப் பெரிய பங்குதாரரின் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் கடப்பாடோ அக்கறையோ தமக்கில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பங்குதாரருடன் தமக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று அவர் தெரிவித்ததாக சீனமொழி…

உள்துறை துணை அமைச்சர்: AES-உடன் போலீசின் அஞ்சல்வழி சம்மனும் தொடரும்

சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)- யுடன் போலீசும் அஞ்சல்வழி Read More

லிம் கிட் சியாங்: ஊழலை ஒடுக்க நஜிப்புக்கு ஏஇஎஸ் (AES)…

போக்குவரத்து அத்துமீறல்களைக் குறைப்பதற்கு சர்சைக்குரிய ஏஇஎஸ் என்ற இயல்பான அமலாக்க முறை மீது விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதில் ஊழலுக்கு அது போன்ற முறை அமலக்கப்பட வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் ஊழலை எதிர்த்துப்…

கெராக்கான்: ஏஇஸ்-இல் ‘பல குறைகள்’, மேலும் ஆய்வு தேவை

பொதுமக்களிடையே “எதிர்ப்புக்குரல்” பலமாக இருப்பதால் அரசாங்கம் “குறைகளுடைய” தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) யை Read More

கொங்: அம்னோ இளைஞர்கள் ஒரேயடியாக ஏஇஎஸ்-ஸை நிராகரிக்கவில்லை

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, தானியக்க அமலாக்க முறை(ஏஇஎஸ்)  விவகாரத்தில் மாற்றரசுக் கட்சி சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கக்கூடாது என்று கூறுகிறார். “பக்காத்தான் சாலைப் பாதுகாப்பை வைத்து அரசியல்  ஆடக்கூடாது.பிறகு, விபத்துகள் நிகழ்ந்தால் நாங்கள்தான் தேவையானதைச் செய்யவில்லை என்பார்கள். “நாங்கள் ஏதாவது செய்தால்…

ஏஇஎஸ் பற்றி விளக்கம் பெற பினாங்கு அரசு விருப்பம்

பினாங்குக்குத் தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்) பற்றி விளக்கம்  தர என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு மாநில அரசு  அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அதற்கான முடிவு செய்யப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். “ஏஇஎஸ் மீது மாநில…