குடிநுழைவுத்துறை கருப்புப் பட்டியல் மிக நீளமானதாம்

குடிநுழைவுத்துறையின்  கருப்புப்   பட்டியலில்   சேர்க்கப்பட    வேண்டிய   பலரது   பெயர்களைக்  கொண்ட   இன்னொரு   பட்டியல்   பிரதமர்  டாக்டர்    மகாதிர்   முகம்மட்டிடம்   கொடுக்கப்பட்டுள்ளது. முதலில்   கொடுக்கப்பட்ட    பட்டியலில்    உள்ளவர்கள்  ஏற்கனவே   கருப்புப்  பட்டியலிடப்பட்டு  விட்டனர்  என   ஒரு   வட்டாரம்   கூறியது. “இரண்டாவது   பட்டியல்  பிரதமரிடம்  ஒப்புதலுக்காக   ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அது  விரைவில்   அமலுக்கு  …

ஏர்ஏசியா பங்குகள் சரிவு

பங்குச்   சந்தையில்   இன்று   வர்த்தகம்   தொடங்கியபோது   ஏர் ஏசியா  நிறுவனப்  பங்குகள்   10 விழுக்காடு   சரிவு  கண்டன.  அந்நிறுவனத்   தலைவர்    டோனி   பெர்னாண்டஸ்    பொதுத்   தேர்தலில்   முன்னாள்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கை   ஆதரித்தது    தப்பு   என்று   ஒப்புக்கொண்டு   மன்னிப்பு   கேட்ட   பின்னரும்   இது    நிகழ்ந்தது. நஜிப்  கடந்த  …

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும் அல்லது 100…

  தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களும் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்களை ஆணையத்திலிருந்து அடுத்த 100 நாள்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பெர்சே கோரியுள்ளது. கிடைக்கப் பெற்ற புகார்கள் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு முன்னால் அந்த ஆணையம் புரிந்த குற்றச்…

எம்ஏசிசி தலைமையகத்தில் வாகனங்கள் சோதனை

புத்ரா    ஜெயாவில்,  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையத்   தலைமையகத்திலிருந்து  வெளியேறும்    வாகனங்கள்    சோதனை    செய்யப்படுவதாக     பெரித்தா   ஹரியான்   கூறியது. அந்நாளேடு  பதிவேற்றம்  செய்த   ஒரு   காணொளி   எம்ஏசிசி   பாதுகாவலர்   ஒருவர்   அக்கட்டிடத்தைவிட்டு    வெளியேறும்   ஒரு   வாகனத்தைச்  சோதனை   செய்வதைக்   காண்பித்தது. ஏன்  இச்சோதனை   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   இயலவில்லை. டாக்டர்  மகாதிர்  …

எம்ஏசிசி தலைவர் பணிவிலகல்; ஏஜி வழக்கம்போல் அலுவலகம் சென்றார்

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)  தலைவர்    சுல்கிப்ளி   அஹமட்   அரசாங்கத்   தலைமைச்    செயலாளரிடம்   பணிவிலகல்   கடிதத்தை      இன்று   காலை   கொடுத்தார். “அவரது   பணிவிலகல்   கடிதம்  ஒப்புதலுக்காக  மகாதிரிடம்  ஒப்படைக்கப்பட்டது. “சுல்கிப்ளியின்   இடத்துக்கு   யாரை  நியமிப்பது   என்பது  இன்னும்   முடிவாகவில்லை”,  என   ஒரு   வட்டாரம்   மலேசியாகினியிடம்   தெரிவித்தது. இன்னொரு   வட்டாரம்   சுல்கிப்ளி   …

நிதி அமைச்சராக விரும்பினேன் என்பதை மறுத்த ரபிஸி, சின் சியு…

  பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலி தாம் நிதி அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பியாதாக கூறியுள்ள சின் சியு டெய்லிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக கூறினார். பிரதமர் மகாதிர் செய்துள்ள அமைச்சரவை நியமனங்கள், டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நிதி அமைச்சராக…

டையம்: ஜிஎஸ்டி அகற்றல், எரிபொருள் மானியம் மீண்டும் வழங்குதல் பொருளாதாரத்தைப்…

  பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றல் மற்றும் எரிபொருள் மானியம் மீண்டும் வழங்குதல் மலேசியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்காது என்பதை மகாதிரின் புதிய அரசாங்கம் உறுதி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான டைம் ஸைனுடின் பெர்னாமாவிடம் சனிக்கிழமை…

அட்டர்னி ஜெனரல் பதவி விலக வேண்டும், கோபிந் சிங் கூறுகிறார்

சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகமட் அபாண்ட் அலி அப்பதவியில் தொடர்வது ஏற்றுக்கொள்ளக்கத்தக்கதாக இல்லாததால் அவர் பதவி விலக வேண்டும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். நாட்டில் இப்போது ஏஜி இல்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். அது ஏஜி…

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படாதவரை புதிய நிதியமைச்சர் நிரபராதிதான் -ஜொகாரி

டிஏபி  தலைமைச்    செயலாளர்  லிம்   குவான்   எங்   நிதி   அமைச்சராக   நியமிக்கப்பட்டிருப்பது     சரியா    என்று   கேள்விகள்   எழுப்பப்படுகின்றன.  அவர்மீது    ஊழல்   வழக்கு    உள்ளதால்   இப்படிப்பட்ட    கேள்விகள்   எழுப்பப்படுகின்றன. இது   குறித்து    முன்னாள்   இரண்டாம்நிலை   நிதி   அமைச்சர்   ஜொகாரி   அப்துல்   கனியிடம்   கேட்டதற்கு,  லிம்   குற்றவாளி    என்று   தீர்ப்பளிக்கப்படாதவரை   நிரபராதிதான்   என்றார்.…

நஜிப்புடன் தொடர்புகொண்ட ஆடம்பர கொண்டோவில் சோதனை நடத்தவில்லை- போலீஸ் மறுப்பு

முன்னாள்   பிரதமர்    நஜிப்    அப்துல்  ரசாக்குடன்    தொடர்புள்ள   ஆடம்பர  அடுக்ககம்  ஒன்றில்      அதிரடிச்   சோதனை   நடத்தப்பட்டதாகக்   கூறப்படுவதை     போலீஸ்   மறுத்தது. போலீஸ்   அந்த  அடுக்ககம்   சென்று       அங்குள்ள  சிசிடிவி   பதிவைச்    சரிபார்த்தது,  அவ்வளவுதான்  என   கோலாலும்பூர்    போலீஸ்    தலைவர்   மஸ்லான்   லாசிம்    தெரிவித்தார். “போலீஸ்  அங்குள்ள  சிசிடிவியைக்  கவனமாக   …

அமைச்சரவை பதவிகள் பற்றிய கூட்டத்திற்கு பிகேஆர் வரவில்லை

  அமைச்சரவை பதவிகள் பற்றிய முடிவுகள் எடுப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு பிகேஆர் தலைவர்கள் வரவில்லை என்று ஹரப்பான் பங்காளித்துவ கட்சிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன. இக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை பட்டியல் பற்றி நான்கு கட்சிகள் நடத்திய கூட்டத்தின் தொடர் கூட்டமாகும். மேலும்…

செள பினாங்கின் புதிய முதலமைச்சர்

டிஏபி  தலைமைச்  செயலாளர்   லிம்   குவான்   எங்,  பாடாங்   கோட்டா  சட்டமன்ற   உறுப்பினர்   செள   கொன்   இயோவை  பினாங்கின்   புதிய   முதலமைச்சராக     அறிவித்தார். நிதி  அமைச்சராக   நியமிக்கப்பட்டிருக்கும்   லிம்,   தம்முடைய  பராமரிப்பு   முதலமைச்சர்   பணி  இன்றுடன்   முடிவுக்கு   வருவதாகவும்   கூறினார். “கனத்த   இதயத்துடன்  பிரிந்து   செல்கிறேன்.  ஆனால்,  பினாங்கு  …

கட்சித் தாவவில்லை: பேராக் பிஎன் பிரதிநிதிகள் விளக்கம்

பேராக்கில்  பக்கத்தான்   ஹரப்பான்   சாதாரணப்  பெரும்பான்மையில்     ஆட்சி  அமைக்க    உதவிய  இரண்டு   சட்டமன்ற   உறுப்பினர்களும்  தாங்கள்   கட்சித்தாவவில்லை    என்றும்  இன்னமும்  பிஎன்   உறுப்பினர்கள்தான்   என்றும்   கூறியுள்ளனர். பேராக்   மாநில  நிலைத்தன்மையின்   பொருட்டு    அஹமட்  பைசல்  அஸுமு   ஆட்சி    அமைக்க    ஆதரவு   வழங்கியதாக   துவாலாங்   செகா   சட்டமன்ற   உறுப்பினர்  நோலி …

பிதற்றுவதை நிறுத்துக, பிகேஆர்-க்கு அம்பிகா வலியுறுத்து

பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, துன் டாக்டர் மகாதிர் முகமட் அந்தக் கட்சியுடன் கலந்தாலோசிக்காமல் மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளதன் அடிப்படையில், வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் பிகேஆரை விமர்சித்துள்ளார். டுவிட்டர் செய்தியின் அடிப்படையில், மலேசியாகினியின் கட்டுரையைப் பற்றிக் கருத்து தெரிவித்த முன்னாள் பெர்சே தலைவரான அம்பிகா,…

பிஎன் உதாரணத்தைப் பின்பற்றி, எதிர்க்கட்சிகளுக்கு ஜொகூர் அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகள் இல்லை

எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி தலைவர்களை அங்கீகரிக்கவில்லை, அவர்களுக்கு நியாயமான ஒதுக்கீடுகளை வழங்கவில்லை என ஜொகூர் மாநில அரசை பக்காத்தான் ஹராப்பான் குறைகூறி வந்துள்ளது. இப்போது பிஎன் எதிர்க்கட்சியாகிவிட்டது, ஹராப்பானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மந்திரி பெசார், ஓஸ்மான் சப்பியன் அந்தக் கொள்கையை மாற்ற தயாராக இல்லை என்று தோன்றுகிறது.…

மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர், பெர்சத்துவின் அஹமட் பைசால் பேராக்…

கடந்த மூன்று நாள்களாக நடந்து வந்த இழுபறிக்குப் பின்னர், பேராக் மாநில பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவர் அஹமட் பைசால் அஸுமூ பேராக் மந்திரி பெசராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவிப் பிரமாண நிகழ்ச்சி இன்று மாலை 6.15 அளவில் கோல கங்சார், இஸ்தானா இஸ்கந்திரியாவில்…

அன்வார் செய்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார்

  சிறையிலிருக்கும் அன்வார் இப்ராகிம் அடுத்த செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்படுவார் என்று அவரது மகள் நுருல் இஸ்ஸா ராய்ட்டரிடம் கூறினார். அன்வாருக்கு பேரரசர் முழு மன்னிப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேகொள்ளப்படும் என்று புதிய பிரதமர் மகாதிர் இவ்வாரம் அறிவித்திருந்தார். ஆம், தமது தந்தை அன்வார் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விடுடிக்கப்படுவார்…

நஜிப் நாட்டை விட்டு வெளியேறாமல் நான்தான் தடுத்தேன், மகாதிர் கூறுகிறார்

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நாட்டை விட்டு வெளியேறாமல் தாம் தடுத்தது உண்மைதான் என்று மகாதிர் கூறினார். நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இமிகிரேசன் இலாகா தடைவிதித்ததற்கு நிலுவையில் இருக்கும் விசாரணைகள் காரணமா என்று கேட்டதற்கு, அவருக்கு எதிராகப் பல புகார்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் விசாரிக்கப்பட…

மகாதிர் அமைச்சரவையின் முதல் மூன்று அமைச்சர்கள்

  பிரதமர் மகாதிரியின் புதிய அமைச்சரவையின் மூன்று உறுப்பினர்களை அவர் இன்று பெர்சத்துவின் தலைமையகத்தில் அறிவித்தார். டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் - நிதி அமைச்சர். அமனாவின் தலைவர் முகமட் சபு - தற்காப்பு அமைச்சர். பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் - உள்துறை அமைச்சர்.…

பேராக்கில் ஹரப்பான் மாநில அரசை அமைக்கும் :பிஎன் பிரதிநிதிகள் இருவர்…

பேராக்கில்   பாரிசான்   நேசனல்   சட்டமன்ற   உறுப்பினர்கள்   இருவர்  கட்சித்தாவி  வந்ததை     அடுத்து   அங்கு   பக்கத்தான்   ஹரப்பான்    ஆட்சி   அமைக்க   சுல்தான்  நஸ்ரின்  ஷா  ஒப்புதல்    அளித்துள்ளார். “இப்போது   எங்களிடம்  பெரும்பான்மை   இடங்கள்   உள்ளன,  விரைவில்   அரசாங்கம்   அமைப்போம். “இரண்டு   பிஎன்  சட்டமன்ற   உறுப்பினர்கள்   எங்கள்   பக்கம்   வந்துள்ளனர். இப்போது  …

பேராக் மந்திரி புசார் இன்று மாலை 5மணிக்குப் பதவி ஏற்பார்,…

பேராக்   மந்திரி  புசாராக  பதவி  ஏற்கப்போகின்றவர்   யார்    என்ற  குழப்பம்   இன்னும்  நீடிக்கிறது.  இதற்கிடையில்,  இன்று   மாலை   மணி   5க்கு  மந்திரி  புசார்   பதவி   உறுதிமொழி    எடுப்பார்   என்றும்   கூறப்பட்டிருப்பதால்  பரபரப்பு   மேலும்   கூடியுள்ளது. பேராக்கின்  மூன்று   பாஸ்   சட்டமன்ற   உறுப்பினர்களும்   இன்று   காலை  9.30  வாக்கில்   இஸ்தானா …

ஜோகூரில் கட்சித் தாவுதல்: மூன்று அம்னோவினர் பெர்சத்துக்கு தாவினர்

இன்று ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் மந்திரி பெசார் பதவி ஏற்கவிருக்கும் வேளையில், மூன்று அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவுக்குத் தாவியுள்ளனர். இதன் வழி ஆளும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பானை கிட்டியுள்ளது. ராஸ்மான் இத்நாயின் (செடிலி), ரோஸ்லி ஜஹாரி (ஜோகூர் லாமா) மற்றும் அல்வியா தாலிப் (என்டாவ்) ஆகிய…

நஜிப்பையும் ரோஸ்மாவையும் இப்போது தடை செய்திருக்கிறோம், இமிகிரேசன் இலாகா கூறுதிறது

  இப்போது ஒரு புதிய திருப்பம். முன்னாள் பிரதமர் நஜிப்பையும், அவரது துணைவியார் ரோஸ்மாவையும் "இப்போதுதான்" கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்று இமிகிரேசன் இலாகா அறிவிப்பு செய்துள்ளது. "Immigration Department wishes to confirm that Dato Sri Najib Tun Abdul Razak and Datin Sri…