UEC அங்கீகாரம்: அரசாங்க நிலைப்பாடு என்ன?

பொதுத் தேர்ச்சி சான்றிதழ் (UEC) அங்கீகாரம்: அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் - ப. இராமசாமி, உரிமை தலைவர் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளின்  யுனைடெட் எக்ஸாமினேஷன் சர்டிபிகேட் (UEC) அங்கீகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்தப் பள்ளிகள் தேசிய கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லையென்பதையே காரணமாக முன்வைக்கின்றனர்.…

அகதிகள் பதிவுத் திட்டம் நிரந்தரமாக தங்குவதற்கு உத்தரவாதம் அளிக்காது –…

மலேசியாவின் அகதிகள் பதிவு ஆவணத் (DPP) திட்டம், நாட்டில் அகதிகள் நிரந்தரமாக தங்குவதற்கு உத்தரவாதம் அளிக்காது; ஏனெனில் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரின் மேலாண்மை இறுதியாக மூன்று விளைவுகளில் ஒன்றில் மட்டுமே முடிவடையும்: தாயகம் திரும்புதல், மூன்றாம் நாட்டில் மறுகுடியமர்த்தம் செய்யப்படுதல் அல்லது நாடு கடத்தப்படுதல். இந்த ஆண்டு…

தேவராஜனின் போதனா முறை ஓர் எடுத்துக்காட்டு

இராகவன் கருப்பையா-ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை தினந்தோறும் பள்ளிக்குச் செல்லும் போது மறக்காமல் தனது சட்டைப் பையில் சிறிய மிட்டாய் பொட்டலம் ஒன்றை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்ட ஆசிரியரைப் பற்றி நாம் கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் 'அடிக்கிற கைதான் அணைக்கும்,' எனும் சொற்றொடருக்கு ஏற்ப அந்த மிட்டாய்களைக் கொண்டுதான்…

கோயில் வழிபாட்டுத் தலங்கள் – அமைச்சரவை செயல்முறைப்படி கையாளப்படும்

கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடந்த வாரம் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறைப்படி இனி கையாளப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உறுதியளித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அந்தந்த அதிகார வரம்புகளுக்கு…

பள்ளி சென்றிராத அம்மா எங்கள் கல்விக்கு பாடுபட்டார்

அன்னையர் தினக் கட்டுரை:  இராகவன் கருப்பையா தனது தாயை நினைவுக் கூறுகிரார் - ஆர்- பள்ளிக்கூடம் சென்று அடிப்படைக் கல்வி கூட கற்கவில்லை எனும் போதிலும் தமது பிள்ளைச் செல்வங்கள் எல்லாருமே முறையாகக் கல்விக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த என் அன்னை ராஜம்மாவின் தியாக உணர்வை…

உணவகங்களில் புகைப்பிடித்தல்: சட்ட அமலாக்கம் என்ன ஆனது?

இராகவன் கருப்பையா - உணவகங்களில் புகைப்பிடிக்கக் கூடாது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை முறையாக அமலாக்கம் செய்யாததால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அண்மைய மாதங்களாக ஒரு சில உணவகங்களில் வாடிக்கையாளர்களிடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை சற்று மோசமாகி வருகிறது. ஆகக்கடைசியாக சிலாங்கூர்,…

உயிர் பலியாகும் விபத்துகள்: தண்டனை கடுமையாக வேண்டும்

இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக உயிருடற்சேதத்தை ஏற்படுத்திய சாலை விபத்துகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதை நம்மால் காணமுடிகிறது. சாலை விபத்துகளுக்கு எதிராக போதிய அளவு சட்ட விதிகள் இருப்பதாகத் தோற்றமளிக்கிற போதிலும் அவை ஆக்ககரமாக அமலாக்கம் செய்யப்படுகின்றனவா அல்லது அவை போதிய அளவு கடுமையாக இல்லையா எனும் ஐயப்பாடு…

உலகளாவிய எரிசக்தி நிச்சயமற்ற தன்மை, மலேசியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்தின்…

புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளால் தூண்டப்பட்ட உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், மலேசியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்றங்கள்…

விபத்து வீடியோவில் பதிவானால் குற்றவாளிக்கு என்ன தண்டனை?

இராகவன் கருப்பையா - கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் சிலாங்கூர், கிளேங் பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மூர்க்கத்தனமாக மோதப்பட்ட காட்சிகள் சமூக வலைத் தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன. மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த மோட்டார் சைக்கிளோட்டி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்த வேளையில்,…

ம.இ.கா-வின் எதிர்காலம் –  அம்னோவை இனி மிரட்ட முடியுமா?

இராகவன் கருப்பையா-  தேசிய முன்னணியிலிருந்து வெளியாகப் போகிறோம் என கடந்த பல மாதங்களாகவே மிரட்டி வந்த ம.இ.கா., ஆகக் கடைசியாக எடுத்துள்ள முடிவு அக்கட்சிக்கு எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது பெரிய கேள்விக்குறிதான். அந்த கூட்டணியை விட்டு தற்போதைக்கு வெளியாக மாட்டோம் என அக்கட்சி அறிவித்துள்ள போதிலும் அம்னோவை…

தியோ பெங் ஹொக் விவகாரம்: மலேசியாவுக்கு அவமானம்

இராகவன் கருப்பையா - சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மரணமடைந்த அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக்கின் இறப்பு தற்போது நம் நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது வருத்தமான விஷயமாகும். கடந்த பல ஆண்டுகளாக நம் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் சஞ்சலம் பீடித்த மர்மங்களுக்கும் மரணங்களுக்கும் இன்னமும் தீர்வு…

சாதனையாளர்களை போற்றுவோம் கயவர்களை அலட்சியம் செய்வோம்

இராகவன் கருப்பையா - நம்மில் சிலர் பல வேளைகளில் எம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை உணராமல் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு தொடர்ந்தாற் போல எரிச்சலூட்டி வருபவர்களைப் பற்றி அதிகமாக சிந்திப்பதால், உணர்ந்தோ உணராமலோ மகிழ்ச்சி தரக்கூடிய மற்றவர்களை மறந்துவிடுகிறோம். கடந்த சில வாரங்களாக ஸம்ரி வினோத் காளிமுத்து…

சட்டஅமுலாக்கம் பல்லில்லா புலியானால் தடியெடுத்தவன் தண்டல்தான்

இராகவன் கருப்பையா - சட்டத்தை கையிலெடுப்பவர்கள் பல வேளைகளில் முன் கோபத்திற்கு இடமளித்து பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவசரப்பட்டு குற்றம் புரிந்துவிடுகின்றனர். மற்ற பல வேளைகளில்  சட்டம் அதன் கடப்பாட்டை மறந்து 'ஏனோ தானோ' எனும் நிலைப்பாட்டில் செயலாற்றத் தவறினாலும் இத்தகையச் குழல் ஏற்படத்தான் செய்கிறது. அப்பட்டமாக நிகழும்…

இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சம்பவங்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க…

மலேசியாவின் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் மூன்று சமீபத்திய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார். செகு சந்திரா என்ற ஆர்வலருக்குச் சொந்தமான மூன்று வாகனங்களுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவம், இந்து…

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களை வாங்க…

மத்திய கிழக்கு மோதல்கள் இறக்குமதியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை, ஏனெனில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் போதுமானதாக உள்ளது. மோதல் காரணமாக எந்தவொரு ஏற்றுமதி நாடும் ஏற்றுமதியை நிறுத்தினால், அரசாங்கம் மாற்று விநியோக ஆதாரங்களை அடையாளம் காணும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும்…

இந்து மதம் இழிவுபட்டாலும் கண்டனக் குரல் வேண்டும்.

இராகவன் கருப்பையா நம் நாட்டில் இஸ்லாம் மட்டுமின்றி, எந்த சமயத்தையும் யாரும் இழிவுபடுத்தக் கூடாது எனும் நிலை வந்தால் நாம் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம். அண்மையில் 'குர்ஆனை' இழிவுபடுத்திய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ள விவகாரம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். பஹாங்ஙில் உள்ள ஒரு…

மஸ்ஜிட் இந்தியா விபத்து: அரசின் அலட்சியப் போக்கு

-இராகவன் கருப்பையா சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் திடீரென புதையுண்டு காணாமல் போன இந்திய சுற்றுப் பயணி விஜயலட்சுமியின் குடும்பத்திற்கு மலேசிய அரசாங்கம் இன்னமும் இழப்பீடு வழங்கவில்லை என்பது நமக்கு அதிர்ச்சித் தகவல். இவ்விவகாரத்தில் நம் அரசாங்கம் ஏன் இத்தகைய அலட்சியப் போக்கைக்…

விடிந்தும் விடியாத நிலைதான்: என்று தனியும் சுதந்திர தாகம்?

~இராகவன் கருப்பையா நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. அண்மைய காலமாக நம் சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக இந்து ஆலயங்கள் தொடர்பாக அப்பட்டமாக, அதிகாரப்பூர்வமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அட்டூழியங்கள் நம் மனங்களை அதிக அளவில் வருத்துகிறது. 'பழைய குருடி கதவைத்…

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்பதை அன்வார் வாபஸ்…

அனுமதியியில்லாத கோயில்கள் அகற்றப்பட வேண்டும் – என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும்  அம்பிகா மற்றும் , சுரேந்திரன் ஆகியோர் பிரதமர் கோயில்களை ‘clean up’ ' அதாவது  அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை அன்வார் வாபஸ் பெற வேண்டும் என்று கோருகின்றனர். பிரதமர் அன்வர் இப்ராஹிம்…

நமது அரசியல் பிரதிநிதிகள் மோடியிடம் பேசியது என்ன?

இராகவன் கருப்பையா- அண்மையில் மலேசியாவுக்கு குறுகிய கால வருகை மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். 'குலோஸ்ட் டோர் மீட்டிங்'(Closed Door Meeting) எனப்படும் அந்த ரகசிய சந்திப்பை யார் ஏற்பாடு செய்தது, எந்த தேதியில் எங்கு…

அன்வார் ஏன் தைப்பூசத்தன்று பத்துமலைக்கு செல்வதில்லை?

இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…

இந்திய சமூகத்தை கவர்வதில் நஜிப்பை போல யாருமில்லை

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் இந்திய சமூகத்தின் ஆதரவை ஈர்ப்பதில் மற்றத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், முன்னாள் பிரதமர் நஜிப் தனித்துவம் வாய்ந்த திறமையைக் கொண்டிருந்தார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. குறிப்பாக தைப்பூசத் திருவிழாக்களின் போது பல தடவை அவர் பத்துமலைக்குச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்த விதத்தை யாரும்…