கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டார் மகாதிர்: ‘நானும் மனிதன்தானே’

முன்னாள்   பிரதமர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்    தம்   அரசியல்  வாழ்க்கையில்   இழைத்த     தவறுகளுக்கு   மன்னிப்பு   கேட்டார். இன்று   பெர்சத்து   கட்சியின்   முதலாவது    ஆண்டுக்   கூட்டத்தைத்   தொடக்கி  வைத்து   உரையாற்றிய    அவர்,  தாமும்  மனிதன்தான்   என்றும்  தவறு    செய்வதைத்   தவிர்க்க  இயலாது  என்றும்   குறிப்பிட்டார். “என்  உரையை   முடிக்குமுன்னர்   நான்  …

கொள்ளையர் என்று சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை

பத்து    மலை,  உலு  யாம்  பாரு,  ஜாலான்  சுங்கை  துவாவில்       கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்பட்ட 3 நபர்களை   போலீசார்   சுட்டுக்கொன்றனர். அம்மூவரும்  கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்    நெகிரி   செம்பிலானிலும்   வங்கிகளில்   பணம்   மீட்டுச்   செல்லும்  வாடிக்கையாளர்களிடம்   கொள்ளையிடுவதை    வழக்கமாகக்   கொண்டவர்கள்   என்று    நம்பப்படுகிறது. போலீசார்   முதன்முதலில்   பண்டார்   பாரு   செலாயாங்கில் …

நாடற்ற சிறார்கள் அதிகமுள்ள மாநிலம் சாபா

சாபாவில்தான்  குடியுரிமையில்லாக்   குழந்தைகள்   அல்லது   இளம்  சிறார்கள்  அதிகம்   என  உள்துறை  அமைச்சு   கூறுகிறது. சாபாவில்  21வயதுக்குக்  குறைந்தவர்களில்  23,154  பேர்   நாடற்றவர்கள்   என்று    தேசிய  பதிவுத்துறை   புள்ளிவிவரங்கள்   காட்டுகின்றன. இவ்வளவுக்கும்    இவர்களின்  பெற்றோரில்   ஒருவர்  மலேசியராக   இருப்பார். அக்டோபர்  13வரையிலான  கணக்கெடுப்பின்படி  நாட்டில்  21வயதுக்கு  உட்பட்டவர்களில்  43,445…

மிட்டி: 2017 முற்பகுதியில் அன்னிய முதலீட்டைப் பெறாத இரண்டு மாநிலங்கள்…

ஆண்டின்  முற்பாதியில்   கிளந்தானுக்கும்   பெர்லிசுக்கும்   அன்னிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)  என்று  எதுவும்   வரவில்லை   என்கிறது  அனைத்துலக  வாணிக,   தொழில்  அமைச்சு(மிட்டி). என்றாலும்  பெர்லிஸ்  எப்படியோ  உள்நாட்டு   வட்டாரங்களிலிருந்து  ரிம525 மில்லியன்  முதலீட்டைப்  பெற்றது.  கிளந்தானால்  ரிம4.2மில்லியன்   முதலீட்டைத்தான்  பெற   முடிந்தது. அந்த  வகையில்  மிட்டியால்  அங்கீகரிக்கப்பட்ட   முதலீட்டைப்  பெற்ற  …

பாஸ்: இடைக்கால பிரதமர் முன்மொழிதல் விரும்பத்தகாதது, அரசமைப்புக்கு முரணானது

  இடைக்கால பிரதமர் நியமனம் பற்றிய முன்மொழிதல் விரும்பத்தாகாதது மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பாஸ் இன்று கூறியது. அவ்வாறான முன்மொழிதல் அமலாக்கப்பட்டால் அது ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தைப் பிரதிபலிக்காது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான் இனறு வெளியிட்ட ஓர் அறிக்கையில்…

டிசம்பர் 31 பேரணி : போராட்டம் தொடங்கும் முன் கைது…

பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம் என, எண்ணெய் விலை குறைப்பு, பிரதமரின் தலைமைத்துவத்தை நிராகரித்தல் அல்லது ‘துருன் துருன்’ டிசம்பர் 31 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் காவல்துறையினரைக் கேட்டுகொண்டுள்ளனர். “…….பேரணியைத் தொடங்குமுன், யாரையும் கைது செய்ய வேண்டாம், ஆத்திரமூட்டும் எந்த செயலும் வேண்டாம் எனக் காவல்துறையினரை நான்…

சைஃபூல் : பிரதமர் பதவிக்குக் கைரி மிகத் தகுதியானர்

பிரதமர் பதவியை அலங்கரிக்க, மிகச் சிறந்த தேர்வாக பல வேட்பாளர்கள் மீது மக்கள் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதைப்போல, அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளரான முகமட் சைஃபூல் புகாரி அஸ்லான், அப்பதவிக்கு மிகச் சரியான தேர்வாக இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறார். அதுமட்டுமின்றி, எந்தவொரு தயக்கமுமின்றி, அப்பதவிக்கு…

ஹரபான் ஜிஇக்குமுன் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும்…

பெர்சத்து  தலைவர்   முகைதின்   யாசின்,   அடுத்த  பொதுத்   தேர்தலுக்குமுன்  பக்கத்தான்   ஹரபான்  அதன்  பிரதமர்   வேட்பாளர்   யார்  என்பதை   அவ்சியம்  அறிவிக்க   வேண்டும்   என்று  வலியுறுத்தினார்.   ஒரு   நேர்காணலில்   அவர்  இதைக்    கூறியதாக   த  மலேசியன்  இன்சைட்   தெரிவித்துள்ளது. தேர்தலில்   ஹரபான்  வெற்றி  பெற்றால்   அரசாங்கத்தை  வழிநடத்தப்போவது   யார் …

பெல்டா நில விவகாரம்: அண்ணனை நினைத்து பரிதாபப்படுகிறார் காலிட்

ஷா  ஆலம்   எம்பி  காலிட்  சமட்,  தம்    அண்ணனும்  பெல்டா   தலைவருமான   ஷாரிர்  சமட்டின்  நிலை  கண்டு   பரிதாபப்படுகிறார். 2015-இல்  பெல்டாவுக்குச்  சொந்தமான  நிலங்களின்  உரிமை   சந்தேகத்துக்குரிய முறையில்   மாற்றப்பட்டிருக்கிறது.  அதில்  ஊழல்  நிகழ்ந்திருக்கலாம்   என்றும்  நம்பப்படுகிறது. “அண்ணனை  நினைத்தால்  பாவமாக  இருக்கிறது. உண்மையில்  மிகக்  கவனமாக  இருக்குமாறும்   …

அன்வார் குடும்பத்தினருக்குப் புதுத் தொகுதிகளா?

பிகேஆர்  உதவித்   தலைவர்   நுருல்  இஸ்ஸா  அன்வார்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  பெர்மாத்தாங்   பாவிலும்   இப்போது  பெர்மாத்தாங்  பாவ்  எம்பியாகவுள்ள   டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயில்   கிள்ளான்   பள்ளத்தாக்கிலும்   போட்டியிடுவார்கள்   எனத்   தெரிகிறது. இரண்டு    தவணைகள்   லெம்பா   பந்தாயில்    போட்டியிட்ட   நுருல்  இஸ்ஸா  இம்முறை   அங்கு  போட்டியிட  …

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் அனைத்துத் தரப்புடனும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே…

எதிரணி  பிரதமர்  வேட்பாளராக   அன்வார்  இப்ராகிமின்  பெயர்  அடிக்கடி  குறிப்பிடப்பட்டாலும்,   அவரைப்  பொருத்தவரை  அவ்விசயத்தில்   பிகேஆர்  தலைமைத்துவம்   பொதுமக்கள்  உள்பட   அனைத்துத்   தரப்பினரிடம்  கலந்து  பேசி  முடிவெடுப்பதையே  விரும்புகிறாராம். பிகேஆர்  தொடர்பு  இயக்குனர்   ஃபாஹ்மி  ஃபாட்சில்   இதனைத்   தெரிவித்தார். டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  பிரதமர்   வேட்பாளராகவும்    டாக்டர்   வான் …

மகாதிர்-அஸிசா கூட்டு, பிகேஆர் ஒப்புதல்

  மகாதிர் முகமட் பிரதமராகவும் வான் அஸிசா துணைப் பிரதமராகவும் நியமிக்க பக்கத்தான் ஹரப்பான் தெரிவித்த கருத்தை பிகேஆர் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டாதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன. வட்டாரங்களின் தகவல்படி, இம்முடிவு டிசம்பர் 19 இல் எடுக்கப்பட்டது. இம்முடிவுக்கு அன்வார் இப்ராகிம் சம்மதம் தெரிவித்துள்ளார். பல பிகேஆர் தலைவர்கள்…

‘உண்மையைப் பேசியதற்காக’ செப் வானுக்கு நன்றி கூறுகிறார் மகாதிர்

செப் வான் என்று அழைக்கப்படும் செப் ரெட்ஸுவான் நாட்டின் விவகாரங்கள் குறித்து பேசியதற்காக மகாதிர் அவருக்கு நன்றி கூறினார். செப் வான் எந்த ஓர் அரசியல் கட்சியிலும், பெர்சத்துவிலும், உறுப்பினராக இல்லை என்பது தமக்குத் தெரியும். எனினும், அவரது கருத்துகளைப் பாராட்டுவதாக மகாதிர் கூறினார். செப் வான் எவர்…

சேவியர்:  முஸ்லிம்-அல்லாதவர்கள் இல்லாத அமைச்சரவையா?, ஹாடியின் கண்டிக்கத்தக்க கருத்து

  பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அமைச்சரவையில் முஸ்லிம் அல்லாதவர்களின் பொறுப்பு மற்றும் அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. இந்நாட்டுச் சுதந்திரம் மற்றும் மேம்பாட்டுக்குப் போராடிய அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களின் தியாகங்களையும், உழைப்பையும் அவர் இழிவுபடுத்துவதாகப் பொருள்படுகிறது.   இந்நாட்டில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உழைக்கலாம்,…

ஜிஇ 14 குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியை நம்பாதீர்:…

நாடாளுமன்றக்  கலைப்பு  மற்றும்  14வது  பொதுத்  தேர்தல்  தொடர்பில்   சமூக  வலைத்தளங்களில்   வைரலாகும்   செய்திகளைப்  பொதுமக்கள்  புறக்கணிக்க   வேண்டும்   எனத்   தேர்தல்   ஆணையம்  (இசி)   கேட்டுக்கொண்டுள்ளது. பிரதமரின்  ஆலோசனையின்பேரில்   மாமன்னரின்  இணக்கத்துடன்  மட்டுமே   நாடாளுமன்றத்தைக்  கலைக்க   முடியும்    என  இசி    தலைவர்   முகம்மட்  ஹஷிம்  அப்துல்லா    தெரிவித்தார். சமூக …

செய்தி: சீன நிறுவனங்கள் 1எம்டிபிக்கு உதவின

1எம்டிபி  சொத்துக்களை   சீன   நாட்டு  நிறுவனங்களுக்கு  விற்றதன்வழி  கிடைக்கப்பெற்ற  பணத்தைக்  கொண்டு    அபு  டாபி   அனைத்துலக   பெட்ரோலிய   முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்துக்கு   ஆண்டு  இறுதிக்குள்  கொடுக்கப்பட   வேண்டிய  யுஎஸ்$602.7 மில்லியன்  கடன்  கட்டி  முடிக்கப்பட்டதாக   சிங்கப்பூர்  ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்   கூறியது. 1எம்டிபி  பினாங்கின்   வட   பகுதியிலும்    போர்ட்  கிள்ளானிலும்  அதற்குச்  …

ஜைட்: என் கருத்துகள் அபாயகரமானவை எனக் காண்பிக்க முயல்கிறது அரசாங்கம்

தம்முடைய     Assalamualaikum (May Peace Be Upon You): Observations on the Islamisation of Malaysia நூலுக்கு  உள்துறை  அமைச்சு   தடை  விதித்திருப்பது  குறித்துக்  கருத்துரைத்த   முன்னாள்  சட்ட   அமைச்சர்  ஜைட்   இப்ராகிம்,  அது தம்மை   “விரும்பத்தகாதவராகவும்”   தம்முடைய   கருத்துகளை  “அபாயகரமானவையாகவும்”   சித்திரிக்கும்    முயற்சி  என்று  நினைக்கிறார்.…

பெட்ரோல் விலை குறைந்தது, டீசல் விலை கூடியது

இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு ஒரு சென் குறைகிறது. ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.26 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.53 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு லீட்டருக்கு மூன்று சென் கூடுகிறது. ஒரு லீட்டர் டீசல் ரிம2.26 க்கு விற்கப்படும்.

ஹாடி என்எஸ்டி மீது வழக்குத்தொடுக்க வேண்டும், எங் குவான் வற்புறுத்துகிறார்

  நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்) வெளியிட்ட செய்தியால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கருதினால், அவர் என்எஸ்டி மீது வழக்குத்கொடுக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வற்புறுத்திக் கூறினார். இது அவசியாமானது என்று கூறிய குவான் எங், அச்செய்தில்…

கட்டியை அகற்ற கிட் சியாங்கிற்கு அறுவைச் சிகிட்சை

  டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங்கின் இடது சிறுநீரகத்திலிருந்த கட்டியை அகற்ற மேற்கொண்ட அறுவைச் சிகிட்சை வெற்றிகரகமாக முடிந்தது. அவர் முதல் கட்ட புற்றுநோயிலிருந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவரது மகன் லிம் குவான் எங் கூறினார். டிசம்பர் 19 இல், 76 வயதான…

அடுத்த வாரம் போலீஸ் இசா சமட்டிடம் விசாரணை

போலீசார்,  ஜாலான்  செமராக்  நில  விவகாரம்   தொடர்பில்   பெல்டா  முன்னாள்  தலைவர்  முகம்மட்  இசா  சமட்டை  அடுத்த   வாரம்  விசாரிப்பார்கள். நில  உரிமை   மாற்றப்பட்ட   நேரத்தில்   பெல்டா   தலைவராக   இருந்தவர்  என்பதால்  இசாவின்   வாக்குமூலத்தைப்  பெறுவது   முக்கியமாகும்    என    போலீஸ்  படைத்   துணைத்    தலைவர்   நூர்  ரஷிட்   இப்ராகிம்  …

தென்கிழக்காசியாவில் வறுமை விகிதம் குறைவாக உள்ள நாடு மலேசியா- சாலே

அமெரிக்க  மத்திய  உளவுத்துறை (சிஐஏ)   வெளியிட்டிருக்கும்  World Factbook 2017   தென்கிழக்காசியாவின்  மற்ற    நாடுகளுடன்   ஒப்பிடும்போது   மலேசியாவில்தான்  வறுமை  விகிதம்  மிகக்  குறைவாக  உள்ளதெனக்   குறிப்பிடுவதாக   தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே   சைட்  கெருவாக்   கூறுகிறார். மலேசியாவில்  வறுமை  விகிதம்  3.8 விழுக்காடுதான்.  வியட்நாமிலும்   தாய்லாந்திலும்  11.3 விழுக்காடு, …

பாஸ் மறுத்தாலும் ஹாடியின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது: மசீச சாடல்

பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்   தாம்    அமைக்கும்   அமைச்சரவை  எப்படி   இருக்கும்   என்று   விளக்கி   அண்மையில்  வெளியிட்ட  அறிக்கை   அவர்  முஸ்லிம்- அல்லாதாரிடம்  பாகுபாடு  காட்டுவதை  வெட்ட  வெளிச்சமாக்கியுள்ளது   என  மசீச   தலைவர்  ஒருவர்  கூறினார். அமைச்சரவையில்    முஸ்லிம்-அல்லாதார்    "kepakaran dan pengurusan" (நிபுணத்துவ,  நிர்வாக)  பணிகளுக்கு …