சாது மிரண்டால் காடு கொள்ளாது.. இதன் அர்த்தம் பாஜகவுக்கு இப்போது…

சென்னை: சாது மிரண்டால் காடு கொள்ளாது - இதன் அர்த்தம் ஆளும் பாஜகவுக்கு இப்போது புரிந்திருக்கும். கடந்த ஒருமாத காலமாக காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதித்து போயுள்ளது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா? தெரிந்தும் தமிழகம் வர துணிந்ததன் காரணம்? வடக்கு வாழ தெற்கு எப்போதும்போல தேய்வதுதானே என்ற…

16-ந்தேதி முதல் தமிழக வாகனங்களை நுழைய விடமாட்டோம்- வாட்டாள் நாகராஜ்..

பெங்களூருவில் கன்னட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கோ‌ஷமிட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை…

கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை…

சென்னை: கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இரவுவ 9 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி…

தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத் தலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். நாம் தமிழர் கட்சியை தற்போது…

பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த…

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. மாமல்லபுரத்துக்கு அருகில்…

கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- நாம் தமிழர் கட்சியினர்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் பசவராஜ்(வயது 30)…

அண்ணா சாலை புரட்சி வெற்றி.. சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு…

டெல்லி: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும் ஐபிஎல்லுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த…

‘தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை’ 80 வயது…

திருப்பூரில் 80 வயது முதியவர் முத்துசாமி மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் பனைமரம் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தன் பேச்சை நிறுத்திக்கொண்டார் . தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை இனி பேசப் போவதில்லை என்பதே முதியவர் முத்துசாமி எடுத்துக்கொண்ட…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலணிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்த நாம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி தொடங்கியது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பதட்டமான நிலை…

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு..

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த 60 நாட்களாக ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய உரிமம் சமீபத்தில் காலாவதி…

ஹாங்காங்கில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியை கைது செய்ய சீன அரசு…

பன்னாட்டு வைர நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர்களும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி…

போராட்டக்களமாக மாறிய அண்ணாசாலை: போக்குவரத்து கடும் பாதிப்பு

சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மறியல் போராட்டமும், இன்னும் பல அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தி…

‘கர்நாடகத்துக்கு மின்சாரம்’ – நெய்வேலியில் அனல் மின்நிலையம் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது என்ற கோஷத்துடன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தை இன்று (செவ்வாய்கிழமை) முற்றுகையிட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன. ரயில் மறியல்,…

நெல்லையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து…

நெல்லை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஓடும் பேருந்தில் இருந்து குதித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பாளையங்கோட்டை அருகே உள்ள கோவைகுளத்தை சேர்ந்தவர் 40 வயதான செல்வம். கூலி தொழிலாளியாக பணியாற்றும் இவர் சில நேரங்களில் டிரைவர் வேலையையும் செய்து வந்தார். ஆனால் செல்வம் தினமும் மது…

காவிரி வாரியம் அமையாது.. உச்சநீதிமன்றமே கூறிவிட்டது.. கர்நாடக தரப்பு வழக்கறிஞர்…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்தவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜராகும் சீனியர் வழக்கறிஞர்களில் ஒருவரான மோகன் காதர்க்கி கூறியுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள்…

காவிரி – வரைவு செயல் திட்டத்தை மே 3-க்குள் வகுக்க…

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு…

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை – சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தகவல்..

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

‘ரெயில்களை நடுவழியில் மறித்து போராட்டம்’

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில்களை நடுவழியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. அந்த நாளிதழ், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை…

காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!

நாகூர் : காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது.…

கர்நாடகத்திற்குள் தமிழக வாகனங்கள் செல்லாது!

கர்நாடகம் மற்றும் தமிழகத்திற்கு இடையில் காவிரி விவகாரம் தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை கர்நாடக மாநிலத்திற்கு வாகனத்தை இயக்க மாட்டோம் என தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் நந்து தெரிவித்துள்ளார். -60secondsnow.com

குமரியில் 1,000 வள்ளங்களுடன் கடல் முற்றுகை: சரக்குப் பெட்டக முனைய…

சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டம் முகிலன் குடியிருப்பு கடல் பகுதியில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடல் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்திற்கும், மணக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று…

சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் வாழ்த்து… ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை…

சென்னை: காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷின் சாதனையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்று…

காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, காவிரி ஆற்றில் மணலில் புதைந்து,…

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில  அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்களும், போராட் டத்தில் குதித்துள்ளனர். காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தொிவிக்கும் விதமாக தமிழகம்…