புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேச முடிவு: மாவை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதற்கு விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பில் சர்வதேசத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக அந்தக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனினும்,…

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமல்ல: புனர்வாழ்வு…

வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அசம்பாவித செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எவரும் காரணமில்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள்…

தமிழர்களை குறிவைக்கும் அழிவு சக்திகள் – கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

ஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்பது புரியாத பாதையில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கையின் அடுத்த இலக்கு நல்லிணக்கம் என்பது மட்டுமே. இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆங்காங்கே ஏற்படும் குழப்ப நிலைகள் அனைத்தின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இராணுவப் புரட்சி வெடிக்கப்போகின்றது…

முல்லைத்தீவில் முற்றுகையிட்டுள்ள இராணுவத்தினர்! – அச்சத்தின் மத்தியில் பெண்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாகக் காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி இதனை தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப்பாதை, பெண் தலைமைத்துவக்…

தமிழ் மன்னன் இராவணனின் வீர வரலாறு

நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன. இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட…

அமெரிக்காவின் பட்டியலில் தனி இடம்பிடித்த இலங்கை

இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக ஓரளவு முன்னேற்றம் எற்பட்டு வருகிறது. இதனையே மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பினால் நாடுகளுக்கு உதவி வழங்கும் திட்டத்தினுள் இலங்கை…

நல்லிணக்கம் குறித்து மலேஷிய பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கம்

மலேஷியாவுக்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து மலேஷிய பிரதமருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தேசிய அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்தும் ஜனாதிபதி மலேஷிய பிரதமருக்கு…

விழிப்படையுமா பேரவை?

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலமானது தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஆயுத ரீதியாக அடக்குவதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக தற்காப்பு ரீதியில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரிலும் அடக்குமுறையானது மூர்க்கத்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.…

GSP + இலங்கை அரசுக்கு கொடுக்க வேண்டுமா தமிழர்கள் கைகளில்…

இலங்கை அரசானது யுத்தம் முடிந்து விட்டது என்றும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்று கூறி வருகிறது. ஆனால் இதுவரை கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம் இக்கொலைகளுக்கு தாமே காரணம் என்று கூட கூறவில்லை. இன் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் GSP + சலுகையை பெற்றுக் கொள்ள…

இந்திய மலேசிய இலக்கியவாதிகள் யாழ். இலக்கியவாதிகளுடன் விஷேட சந்திப்பு

உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வருகை தந்த இந்திய மற்றும் மலேசிய நாட்டு அறிஞர்கள்முப்பத்தைத்து பேர் கொண்ட குழுவினர் இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கான வரவேற்பு வைபவமும் யாழ். இலக்கிய ஆர்வலர்களுடனான சந்திப்பும் நல்லூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் தொடக்கமாக…

இலங்கையில் பிரச்சினைகளுக்கு காரணம் புலம்பெயர் தமிழர்களா?? – தாக்கவும் தயார்..!…

நேற்றைய தினம் இனவாதம் பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த மட்டக்களப்பு சுமனரதன தேரர் பிணையில் விடுதலையாகி இருந்தார். எனினும் இந்த விடுதலையின் பின்னரும் மீண்டும் அவர்களுடைய பழைய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் குறிப்பாக முன்னரை விடவும் இப்போது அதிக ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.…

பிரபாகரன் எதிர்பார்த்ததை வழங்க நடவடிக்கை: மஹிந்த குற்றச்சாட்டு

பிரபாகரன் எதிர்பார்த்ததை அரசியலமைப்பில் எழுதி கொடுப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலி யடகல ராஜமஹா விகாரையில் இன்று மாலை இடம்பெற்ற புதிய கட்டடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம்…

வடமாகாணத்தின் அடையாளங்களை மீள்பரிசீலனை செய்யத் தீர்மானம்

வடமாகாணத்திற்கான விலங்கு, பறவை, பூ , மரம் ஆகியவற்றை மக்களுடைய கருத்துக்களை பெற்று மீள்பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றை அமைக்க சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமர்வில் மாகாணசபையின் அடையாளமாக…

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு…! அறிவுரை கூறும் அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி என அடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்ட தீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு…

புலிகளோடு போரிட்டு $200 பில்லியன் டாலர்களை நாசம் செய்த இலங்கை…

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான…

பிரபாகரனைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்திய யு.எஸ்… புதிய புத்தகத்தில்…

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தளபதிகளை யுத்த களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற கடைசிநேரங்களில் அமெரிக்கா போராட்டம் நடத்தியதாக புதிய புத்தகம் ஒன்றிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகளை காப்பாற்ற அமெரிக்காவும், நார்வேயும் முயற்சித்தது; இதை இந்தியா எதிர்த்தது. இந்தியாவின் எதிர்ப்பை தமிழக…

மட்டக்களப்பில் புலிகள்..!! அடுத்தது என்ன?? – மீண்டுமோர் அழைப்பு..!

அண்மையில் மட்டக்களப்பில் ஒரு விதமான பதற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டு பின்னர் அது பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டிருந்தது. இனவாதம் பரப்பும் ஒரு சில கடும்போக்கான சிந்தனையாளர்கள் மட்டக்களப்பு கலவர பூமியாக மாறும் என எதிர்ப்பார்த்து ஏமாந்தே போனார்கள். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் அதனாலேயே பின்வாங்கிவிட்டோம் என்ற ஓர் கருத்தும்…

வட மாகாண சபைக்கு தனியான தேசிய கீதமா? முற்றாக மறுக்கும்…

வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதம் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையில் தனியான தேசிய கீதம் என்ற தலைப்பில் தேசிய பத்திரிகையொன்றில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த…

மஹிந்தவை தொடர்ந்து மைத்திரியை அச்சுறுத்தும் மலேசியா தமிழர்கள்!

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் 15ஆம் திகதி மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு செல்லும் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக மலேசியாவிலுள்ள சில அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல பொதுமக்கள்…

இலங்கையை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பாடல் அமைச்சினால் இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது. "RIGHT TO LIFE AWARENESS RALLY"என்ற தொனிப்பொருளிகள் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்…

யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம்

யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட "இருளுள் இதய பூமி" ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணி முதல் யாழ் ஊடகம் அமையம் அருகிலுள்ள கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற உள்ளது. மணலாறு எல்லைக் கிராமங்கள் பற்றிய…

ஜெனீவா உடன்படிக்கையை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

ஜெனீவா உடன்படிக்கையை அரசு இழுத்தடிப்புக்கள் செய்யாமல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி, மனித உரிமை தினதில் போராட்டத்தில் இறங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார். மனித உரிமை தினமான நேற்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.…

யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர்….! காரணம் என்ன..?

யாழ்ப்பாணம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில் விஷேட அதிரடிப்படையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அண்மைய காலமாக வடக்கில் தலைதூக்கியுள்ள சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.பல்கலைக்கழக…