சீன தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிப்பு

சீனாவின் தடையால் ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுக்கு உதவுவதாக பிரதமர் உறுதியளித்து உள்ளார். ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தின் கழிவுநீரானது பசிபிக் பெருங்கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலில் மீன்வளம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

ஜோ பைடன் 3-ம் உலகப்போரை நோக்கி அமெரிக்காவை அழைத்துச் செல்வார்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செயல்பாடுகள் நாட்டை 3-ம் உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லும் என்று டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார். இதனிடையே அமெரிக்காவில்…

ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து – 73 பேர்…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென கட்டிடம்…

இம்ரான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: விரைவில் விடுதலையாவார் என…

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5 கோடியே 25…

இந்தோனேசியாவின் பாலி கடலில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில்…

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிமீ (126 மைல்) தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிற்கு கீழே 516 கிமீ (320.63 மைல்) மிக…

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை – சீனா

கொரோனா தொற்று முதன்முதலாக 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பதை…

பிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் குழந்தைகள் ‘அபயா’ அணிந்து வர தடை

பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகள் 'அபயா' எனப்படும் முழு அங்கி ஆடையை அணியத் தடை விதிக்கப்படும். அரசுப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கட்டுப்பாடு அமலுக்குக் கொண்டுவரப்படும்" என்று பிரான்ஸ் நாட்டின் கல்வி அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் எந்தவித மத…

சீனாவில் கன மழையால் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சாயோலா புயல் தென் சீனக்கடல் வழியாக சென்றுள்ளதால் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.…

இங்கிலாந்தில் தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு

இங்கிலாந்தில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச…

புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிரியக்கம் இல்லை: ஜப்பான்…

புகுஷிமா அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கடல்நீரில் எந்தவித கதிரியக்கமும் கண்டறியப்படவில்லை என்று ஜப்பான் அரசு விளக்கமளித்துள்ளது. ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ஜப்பானிலிருந்து ஏற்றுமதி…

3 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகள் தளர்வு: வெளிநாட்டில் சிக்கிய குடிமக்களுக்கு…

கொரோனா பரவலால் வெளிநாடுகளில் சிக்கிய வட கொரிய குடிமக்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தளர்த்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் கடும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்தன.…

அமெரிக்காவின் புளோரிடாவில் இனவாத வெறுப்பால் துப்பாக்கிச் சூடு – மூவர்…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்த படி ஒடினார்கள்.…

48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுங்கள், 4 நாட்டு…

அப்துரஹ்மானே சியானி தன்னைத்தானே புது அதிபராக அறிவித்துக் கொண்டார் நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்கிறது பிரான்ஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே. இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம், ஜன்தா எனப்படும் ராணுவ…

மடகாஸ்கர் மைதானத்தில் நெரிசலில் 12 பேர் பலி, 80 பேர்…

மடகாஸ்கரில் தேசிய ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மடகாஸ்கர் நாட்டில் இந்திய பெருங்கடல் தீவு போட்டிகள் வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அந்நாட்டின் பரியா என்ற தேசிய ஸ்டேடியத்தில் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக…

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை தாக்கிய சுறா மீன்

ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர்களை சுறா மீன் ஒன்று தாக்கியதால், அந்த கடற்கரை உடனடியாக மூடப்பட்டது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள மத்திய-வடக்கு கடற்கரை அருகே மெக்குவாரி என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது. இங்கு சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த ராட்சத சுறா மீன்…

வடகொரியா ஏவிய ராணுவ உளவு செயற்கைகோள் மீண்டும் தோல்வி

வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. வடகொரியாவின்…

புகுஷிமா அணுஉலையின் கதிரியக்க கழிவு நீரை கடலில் திறந்து விட்டது…

புகுஷிமா அணுஉலையின் கதிரியக்க கழிவு நீர் பசிபிக் கடலில் திறந்து விடப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை நிலையத்தில் நிலநடுக்கம் காரணமாக அணுக்கசிவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த கடல் நீர் மற்றும் போரிக் அமில ரசாயனத்தை ஜப்பான் பயன்படுத்தியது. அணுக்கசிவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட கடலில் நீர், கதிரியக்க கழிவு…

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் இணைகின்றன

பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்ஆப்பிரிக்க அதிபர் அறிவித்துள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக,…

உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகள் மீது ரஷியா…

ஒடேசா நகரில் உள்ள தானிய கிடங்குகளின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டன. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த…

சூடானின் உள்நாட்டுப் போர், 500 குழந்தைகள் பட்டினியால் இறந்தனர்

கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 316 குழந்தைகள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சூடானின் ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குநர் ஆரிப் நுவார் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே கடந்த…

எல் நினோ இந்தோனேசியாவின் அரிய வெப்பமண்டல பனிப்பாறைகளை 2026 க்குள்…

இந்தோனேசியாவில் உள்ள உலகின் சில வெப்பமண்டல பனிப்பாறைகளில் இரண்டு உருகி வருகின்றன, அவற்றின் பனி 2026 அல்லது விரைவில் மறைந்துவிடும் அபாயத்தில் உள்ளது, எல் நினோ வானிலை முறை தென்கிழக்கு ஆசிய நாட்டில் வறண்ட காலத்தை நீட்டிப்பதால், அதன் புவி இயற்பியல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. பிரேசில் மற்றும்…

ரஷியாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி

வரும் கல்வியாண்டில் ராணுவ ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் எதிர்கொள்வது என்பதை ரஷிய இளைஞர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று ரஷிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ஏறக்குறைய 17 மாத போர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும் ரஷியா, 2023ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான சோவியத்…

AI உருவாக்கிய கலைப் படைப்புகள் யாவும் காப்புரிமைக்கு தகுதியற்றவை

மனித ஈடுபாடு இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பததால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகளுக்கு அமெரிக்க சட்டத்தின் கீழ் காப்புரிமை பாதுகாப்பு வழங்க முடியாது என அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் உருவாக்கும் கலைப் படைப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வழங்க முடியும் என மாகாண நீதிபதி பெரில்…