அம்பிகா: அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்

1 ambikaபெர்சே 3.0 பேரணியின்போது  செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் “தாக்கப்பட்டதாக” ஓர் அமைச்சர் கூறிருப்பது, அப்பேரணிமீது மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்கிறது பெர்சே.

உண்மையில், 2012, ஏப்ரல் 28 பேரணியின்போது செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் போலீசார்தான்  எனக் கண்டறிந்து கூறப்பட்டுள்ளது என்றும்   அவ்வாறு கூறப்பட்டது குறித்து கருத்துரைக்கவோ  மறுக்கவோ போலீசார் முற்படவில்லை என்றும்  பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார்.

தொடர்பு,  பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷப்ரி சிக்,  உலக பத்திரிகைச் சுதந்திர தரவரிசையில் மலேசியா 122வது இடத்திலிருந்து 145-ஆவது இடத்துக்கு இறக்கம் கண்டதற்கு, பெர்சே பேரணியில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட சம்பவம்தான் காரணம் என்று கூறியிருப்பது குறித்து கருத்துரைத்தபோது அம்பிகா இவ்வாறு கூறினார்.

ஊடகத் தரம் தாழ்ந்து போனதற்கு அமைச்சர் பெர்சே மீது பழி போட முனைவது அதிர்ச்சியளிக்கிறது.   நாம் அந்த இடத்தில் இருப்பதற்கு உண்மையில் முழுக் காரணம் அரசாங்கம்தான்”.

நாடாளுமன்றத்தில் தப்பான தகவலைத் தெரிவித்த அஹ்மட் ஷப்ரி, அன்று பேரணியில் கலந்துகொண்ட மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாரவர்.

தவறை உணர்ந்து மனமாற மன்னிப்பு கேட்பது, தவறை ஏற்றுக் கொண்டு பதவி துறப்பது போன்றவை அந்நியக் கலாச்சாரம்.