தேமு-க்கு வாக்களித்த 4,000 இந்தியர்களுக்கு மஇகா ஆப்பு வைத்தது

MIC-logoசபாய் சட்ட மன்றம் மஇகா-வின் கையில் இருந்த காலத்தில் தீபாவளி காலங்களில் இந்தியர்களுக்கு பணம் கிடைத்து வந்தது. ஆனால் அது இந்த வருடம் வராது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தேசிய முன்னணிக்கு வாக்களித்த சுமார் 4,000 இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்கிறார் சபாய் சட்ட மன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ.   

12 தேர்தல்களில் சபாய் சட்டமன்றம் தேமு-யிடம் இருந்த்து. 13 வது பொது தேர்தலில் பல போராட்டங்களுக்கு பிறகு மக்கள் கூட்டணி அதை வென்றது.

பஹாங் மாநில முதல்வரிடம்  இரண்டு மஇகா தலைவர்கள் சென்று இந்த முறை காராக் தமிழர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்று வேட்டு வைத்துள்ளதாக தெரிகிறது என்கிறார் காமாட்சி.

Kamache_dap“இதை விடக் கேடு கெட்ட செயல் வேறு யாராளும் செய்ய முடியாது. மசிச-மிக மோசமாக தோல்வி கண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் இனத்தைக் காட்டி கொடுக்கும் கேவலமான செயலை செய்வதில்லை. ஆனால் தமிழர்கள் மட்டும் இதை செய்வது கேவலத்திலும் கேவலம். சபாயில் மக்கள் கூட்டணி வென்றதுக்கு ஒட்டு மொத்த தமிழர்களை அதுவும் வறுமை நிலையில் இருக்கும் பாமர மக்கள்  தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும்?”

மஇகா வேட்பாளருக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட வாக்குகள் கிடைத்தது, அதை போட்டவர்கள் யார்? அரசாங்கத்தின் உதவியை எதிர்ப்பார்க்காமல் நன்கு படித்து வசதியாக இருக்கும் தமிழர்கள் அதிகமாக மக்கள் கூட்டணியை தேர்ந்தெடுத்தனர். ஆனால் வறுமையில் வாடுபவர்களும் வயதானவர்களும்தான் மஇகா- வினரின் மிரட்டள்களுக்கும் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்கும் பணிந்து தேமு-க்கு வாக்களிதுள்ளனர்.

“தீபாவளி அன்பளிப்பு பணம் கொடுக்க வேண்டாம் என்று குத்தி கொடுத்த நீங்கள் அடித்திருப்பது காலகாலமாக உங்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஏழை தமிழர்கள் வயிற்றில் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்” என்கிறார் காமாட்சி.

Najib-Deepavali-03உங்கள் பாட்டன் முப்பாட்டன் உழைத்து சம்பாதித்து வைத்த சொத்திலிருந்தா தீபாவளி அன்பளிப்பு தர போகிறார்கள்? மக்கள் வேர்வையை சிந்தி உழைத்த பணத்தில் அரசாங்கத்திற்கு செலுத்திய வரி பணத்திலிருந்த்து தானே கிள்ளி கொடுக்கிறார்கள்? அதையும் வெண்டாம் என்று தடை செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். உங்கள் மிரட்டல்களை எல்லாம் தூக்கி எரித்துவிட்டு பாமர மக்கள் நல்ல பாடம் சொல்லப் போகும் காலம் விரைவில்வரும் என்கிறார் காமாட்சி.

இது சார்பாக மஇகா தலைமையகம் தலையிட வேண்டும் என்கிறார் காமாட்சி.