காஜாங்கில் அன்வார்தான் போட்டியிடுகிறார்: பிகேஆர்

abdul khalidபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்தான்  காஜாங்கில்  போட்டி  இடுகிறார்.  இதை  அக்கட்சி  இன்று  உறுதிப்படுத்தியது.

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிமே   பிகேஆர்  தலைமையகத்தில்  அம்முடிவை  அறிவித்தார். அன்வார்  பொறுப்பேற்கும்வரை  “இடைக்காலத்துக்கு” மந்திரி  புசார்  பணியைத்  தாம்  தொடரப்போவதாகவும்  அவர்  சொன்னார்.

காஜாங்கில்  இடைத் தேர்தலுக்கு  வழிசெய்து  பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்   லீ  சின்  செ  நேற்று  பதவி  துறந்தார்.

TAGS: