புவா: 1எம்டிபி காணாமல்போன யுஎஸ்$1.4 பில்லியனுக்கு தான் பொறுப்பல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்

usஅபு  டாபியில்  உள்ள  இண்டர்நேசனல்  பெட்ரோல்  இன்வெஸ்ட்மெண்ட்  நிறுவனத்துக்கு (ஐபிஐசி)  வழங்கப்பட  வேண்டிய  யுஎஸ்1.4 பில்லியன்  காணாமல்  போனதற்கு  1எம்டிபி  பொறுப்பல்ல  என்றால்  அந்நிறுவனம்  அதை  நிரூபிக்க  வேண்டும்  என்று  பெட்டாலுங்  ஜெயா  உத்தாரா எம்பி  டோனி  புவா  கூறினார்.

வால்  ஸ்திரிட்  ஜர்னல் நேற்று  வெளியிட்டிருந்த  செய்தியில்,  1எம்டிபி  கணக்குகளில்  யுஎஸ்$1.4 பில்லியன்  கொடுக்கப்பட்டதாகக்  குறிப்பிடப்பட்டிருந்தாலும்  ஐபிஐசி  கணக்கில்  அது வரவு  வைக்கப்படவில்லை  எனக்  கூறியிருந்தது.

இதற்கு  எதிர்வினையாக, யுஎஸ்$1.4 பில்லியன்  கொடுக்கப்பட்டதை  தன்  கணக்குகள்  காண்பிப்பதைச்  சுட்டிக்காட்டி  அப்பணம்  என்னவானது  என்று  ஐபிஐசி  சார்பில்  தன்னால்  விளக்கமளிக்க  இயலாது  என்று  1எம்டிபி  கூறியிருப்பது  திருப்திகரமாக  இல்லை  புவா  தெரிவித்தார்.

“1எம்டிபி  என்னதான்  மறுத்தாலும்  யுஎஸ்1.4பில்லியன்  காணாமல்போனது  அல்லது  கணக்கில்  இல்லை  என்ற  உண்மை  மாறிவிடாது”, என  புவா  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.