பெர்சே 4 காரணமாகத்தான் கித்தா லவான் ஆர்ப்பாட்டக்கார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது

kitaஆண்டுத் தொடக்கத்தில்  நடந்த  கித்தா  லவான்  ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது  போலீஸ்  திடீர்  நடவடிக்கை  எடுத்திருப்பதற்கு  அண்மையில்  நடந்த  பெர்சே 4  பேரணிதான்  காரணம்  என்று  மனித உரிமை  கண்காணிப்பு அமைப்பு (HRW) கூறுகிறது.

“ஒரு  அமைதிப்  பேரணி  நடந்து  ஆறு  மாதங்கள்  ஆன  பின்னர்  அதன்  ஏற்பாட்டாளர்கள்மீது  குற்றம்  சுமத்தப்படுகிறது  என்றால்,  அது  அண்மையில்  நடந்த  மிகப்  பெரிய  பெர்சே  பேரணிக்காக  மேற்கொள்ளப்படும் ஒரு  பழிவாங்கும்  முயற்சிதான்  என்பது  வெளிப்படையாக  தெரிகிறது”, என  HRW-வின் ஆசிய  இயக்குனர்  பில்  ரோபர்ட்சன்  கூறினார்.

பிப்ரவரி  28-இலிருந்து மார்ச் 28வரை  எதிரணித் தலைவர்  அன்வார்  இப்ராகிமைச்  சிறையிட்டதை  எதிர்த்து  நடைபெற்ற  கித்தா  லவான்  ஆர்ப்பாட்டங்களில்  பங்கேற்றதாகக் குற்றம்  சுமத்தப்பட்டவரக்ளில்  பலர்  ஆகஸ்ட்29-30  பெர்சே  பேரணியிலும்  சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

சமூக  ஆர்வலர்களும்  அரசியல்வாதிகளுமான  அந்த  ஒன்பதின்மர்மீது  சுமத்தப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுகள்  கைவிடப்பட  வேண்டும்  என  ரோபர்ட்சன்  கேட்டுக்கொண்டார்.

“மலேசிய  அரசாங்கம்  அமைதி  ஆர்ப்பாட்டங்களில்  கலந்துகொள்வோரை  போலீஸ்  லாக்-அப்களில்  பூட்டிவைத்துக்  குற்றஞ்சாட்டுவது  என்று   முடிவெடுத்திருப்பதுபோல்  தெரிகிறது”, என  அவர்  ஒர்  அறிக்கையில்  கூறினார்.