அல்டான்துயா ஷரீபூ கொலை பற்றி நிகழ்ச்சி தயாரித்த செய்தியாளர் நாடு கடத்தப்பட்டார்

journaமங்கோலிய  நாட்டவரான அல்டான்துயா ஷரீபூ கொலை  தொடர்பில் புலனாய்வு ஆவணப்படம்  தயாரித்த  அல் ஜசீரா  செய்தியாளர்  நிகழ்ச்சி  தயாரிப்பில்  ஈடுபட்டிருந்தபோதே  நாடு கடத்தப்பட்டார்.

அல் ஜசீராவின்  வாராந்திர  நிகழ்ச்சியான  101 East-இல்  இத்தகவல்  தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய  செய்தியாளரான  மேரி  என் ஜோலியின்  நடவடிக்கை “மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும்” என உள்துறை அமைச்சு   கருதியதால் ஜூன்  14-இல்  அவர்  நாடு  கடத்தப்பட்டார்.

ஆனால்,  அது   அவர் அல்டான்துயா  கொலை  பற்றிய  ஆவணப் படத்தைத்  தயாரிப்பதைத்  தடுக்கவில்லை.  ஜோலி,  ஆஸ்திரேலியாவில்  உள்ள சிரூலைக் கண்டு  பிடித்து அவரிடம்  அல்டான்துயா  கொல்லப்பட்ட  அன்றிரவு  நடந்தவற்றையெல்லாம்  கேட்டறிந்தார்.

‘Murder in Malaysia (மலேசியாவில்  கொலை)  என்னும் அந்த   ஆவணப்படம்  இன்று  காலை  மணி  6.30க்கு  ஒளியேறியது. இன்று  மாலை 5.30க்கு  அது மறுஒளிபரப்பாகும்.   அல் ஜசீரா அகப் பக்கத்திலும்  இந்த  ஆவணப்  படத்தைப்  பார்க்கலாம்.