சீலாட் குழு: எங்கள் பேரணியும் சிகப்புச் சட்டைப் பேரணியும் ஒன்றல்ல

silatபெர்சத்துவான்  சீலாட்  கெபாங்சான்(பெசாகா) தலைவர்  அலி  ருஸ்தம்,   தம்முடைய  அமைப்பு  செப்டம்பர்  16இல்  ஏற்பாடு  செய்திருக்கும்  பேரணிக்கும்  ஹிம்புனான்  மாருவா மலாயு(மலாய்க்காரர் மானம் காக்கும் பேரணி)  அல்லது  சிகப்புச்  சட்டைப் பேரணி  என்று  அழைக்கப்படுவதற்கும்  எந்தச்  சம்பந்தமுமில்லை  என்கிறார்.

சிகப்புச்  சட்டைப்  பேரணியும்  அதே  நாளில்தான்  நடக்கிறது.  அப்பேரணிக்கு சீலாட்  அமைப்புத்தான்  ஏற்பாடு  செய்திருப்பதாக  முதலில்  அறிவிக்கப்பட்டிருந்தது.

இன  வன்செயல்களைத்  துண்டிவிட  நினைப்பவர்கள்  சீலாட்  அமைப்பு  ஏற்பாடு  செய்துள்ள  செப்டம்பர்  16 பேரணிக்கு  வரக்  கூடாது  என்று  அலி  கூறினார்.

“இன  அடிப்படையில்  ஆத்திரம்  அடைந்திருப்பவ்ர்கள், தொல்லை  விளைவிக்க  நினைப்பவர்கள்  பேரணிக்கு  வர வேண்டாம்”, என்றவர்  இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

சீலாட்  அமைப்பின்  பேரணிக்கு  வருவோர்  சிகப்புச்  சட்டை  அணிந்திருக்க  வேண்டியதில்லை.

“உங்கள்  விருப்பப்படி  எதையும்  அணியலாம்….மலேசியர்கள்  அனைவருமே  வரலாம்”, என  அந்த  முன்னாள்  மலாக்கா  முதலமைச்சர்  குறிப்பிட்டார்.