இணையச் சேவை எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும், அதற்குத்தான் முக்கியத்துவம்

intnetஇணையச்  சேவையில்  வேகத்தைவிட  அது  நாடு  முழுக்கக்  கிடைக்க  வேண்டும்  என்பதற்கே  அரசாங்கம்  முன்னுரிமை  கொடுப்பதாக  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்  கூறினார்.

“ஆசியான்  நாடுகள்  இணையச்  சேவையின்  வேகத்தில்   கவனம்  செலுத்தி  வரும்  வேளையில்  மலேசியா  அது  பரவலாகக்  கிடைக்க  வேண்டும்  என்பதற்குத்தான்  முன்னுரிமை  அளிக்கிறது.

“மற்ற  ஆசியான்  நாடுகளுடன்  ஒப்பிடும்போது  மலேசியாவில்  இணையச்  சேவையின்  வேகம்  குறைவாக இருப்பதற்கு  இதுவே  காரணம்”,  என்றாரவர்.

நாடாளுமன்றத்தில்    இஸானி  உசேனின்  கேள்விக்குப்  பதிலளித்தபோது   அமைச்சர்  இவ்வாறு  கூறினார்.