ரஃபிஸியை விடுவிக்கப் போலீஸிடம் மக்களவைத் தலைவர் கோரிக்கை விட வேண்டும், குலா

 

Rafiziarrestedநேற்று நாடாளுமன்ற கட்டட முன்வாயிலில் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரமலி போலீசாரால் கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு அது வன்முறையான செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

போலீசாரின் அந்நடவடிக்கை நாடளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் வரவும் வெளியேறவும் எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது என்று போலீஸுக்கு அறிவுறுத்தி நாடாளமன்றம் அதன் தற்போதைய கூட்டத்தின் தொடக்கத்தில் எடுத்திருந்த தீர்மானத்தை மீறியதாகும் என்பதை குலா சுட்டிக் காட்டினார்.

நேற்று இச்சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.

kulaunilateralconversionஅப்போது நாடாளுமன்ற அவையிலிருந்த துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் எழுந்து நின்று போலீசாரின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று குலா மேலும் கூறினார்.

இது போன்ற சம்பவம் இதர வளர்ச்சி கண்ட மக்களாட்சி நாடுகளில் நடந்திருக்காது. அப்படி நடந்திருந்தால் உள்துறை அமைச்சரும் போலீஸ் படைத் தலைவரும் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும், ஏன், பதவிகூட    துறக்க வேண்டியிருந்திருக்கும் என்றாரவர்.

இச்சம்பவம் குறித்து தாம் விசாரிக்கப் போவதாக மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் உறுதியளித்திருந்ததை குலா வரவேற்றார்.

ஆனால், இச்சம்பவம் நாடாளுமன்றத்தின் எல்லைக்குள் நடந்ததா அல்லது அதற்கு வெளியிலா என்று கண்டறியப் போவதாகவும் அவைத் தலைவர் கூறியிருந்தார்.

இது தேவையற்ற ஒன்று என்று கூறிய குலா, இச்சம்பவம் நாடாளுமன்றத்தின் வாயிற்கதவுக்கு வெளியில் நடந்தது என்பது தெளிவானது. இக்கைது தேவையற்றது என்பதோடு வன்முறையானதாகும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

போலீசாரின் நடத்தை நாடாளுமன்றத்தையும் அவைத் தலைவரையும் அவமதிப்பதற்கு ஒப்பாகும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும்yrsaynosandiwara இப்படி கைது செய்யப்படுவதை நாடாளுமன்ற அவைத் தலைவர் அனுமதிக்கவும் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது என்றார் குலா.

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. அதில் போலீசும் அடங்கும் என்று கூறிய குலசேகரன், போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அழைக்கப்பட்டு, கண்டிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

நாடாளுமன்ற மக்கள் அவைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரமலி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐஜிபியிடம் கோர வேண்டும் என்றும், ஐஜிபி கோரிக்கைக்கு இணங்க மறுத்தால், ஐஜிபி மீது நாடாளுமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்துவதற்கு நாடாளுமன்றம் தயாராக இருக்க வேண்டும் என்று மக்கள் அவைத் தலைவரை குலா கேட்டுக் கொண்டார்.