“துணைப் பிரதமர் கிட் சியாங்” பெரும் அதிகாரமுள்ளவராக இருப்பார், நஜிப் கூறுகிறார்


“துணைப் பிரதமர் கிட் சியாங்” பெரும் அதிகாரமுள்ளவராக இருப்பார், நஜிப் கூறுகிறார்

 

najibபுத்ராஜெயாவை பின் இழக்க நேர்ந்தால், டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமராவது நிச்சயம் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.

யார் பிரதமராக வேண்டும் என்பதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், துணைப் பிரதமர் யார் என்பதில் லிம் மற்றும் மகாதிர் ஆகிய இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று நஜிப் நேற்று சாபா சின்டுமின்னில் பேசிய போது கூறினார்.

இந்த “அலி பாபா” ஏற்பாடு வெற்றி பெற்றால் லிம் நம்பமுடியாத அளவுக்கு சக்தி வாயந்தவராகி விடுவார், ஏனென்றால் யார் பிரதமர் என்பதை அவர் தேர்வு செய்ய முடியும் என்றார் நஜிப்.

“இதில் விசித்திரம் என்னவென்றால் பக்கத்தன் ஹரப்பான் துணைப் பிரதமர் பதவி விவகாரத்தில் மட்டும் ஒப்பந்தம் கண்டுள்ளது, பிரதமர் பதவிக்கு அல்ல. அது யாராக இருக்கும்? வான் அஸிசா? அன்வார்? முகைதின்?

“இன்னும் விசித்திரம் என்னவென்றால் துணைப் பிரதமர் பிரதமரை நியமிப்பார். இது ‘அலி பாபா’. எதிர்க்கட்சி ஓர் ‘அலி பாபா’.

“இது பிஎன்னுடன் ஒப்பிடும் போது கூட்டணி என்ற முறையில் பக்கத்தான் ஹரப்பான் தோல்வி கண்டுவிட்டது என்பதை நிருபிக்கிறது. பிஎன் அதன் 13 பங்காளித்துவ உறுப்பினர்களிடையே இணக்கம் கண்டுள்ளது”, என்று நஜிப் கூறியதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 5 மார்ச், 2017, 21:23

  புலி வருது! புலி வருது!

 • வெற்றி தமிழன் நந்தா wrote on 5 மார்ச், 2017, 21:42

  எல்லா அலிபாபா வேலைகள் நீங்கள் செய்துவிட்டு ,யாரையோ கை காட்டுவது உங்களுக்கே நியாயமா படுகிறதா ?

 • மு.த.நீலவாணன் wrote on 6 மார்ச், 2017, 0:33

  பதவி , அதன் வழி கிடைக்கும் அதிகாரம் , இவைகள்தான் , இந்த ஆசைதான், இந்த வெறிதான் இவரை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.

 • மிஸ்டர் ஜோக்கர் wrote on 6 மார்ச், 2017, 8:42

  அவங்க பக்கம் அலிபாபா இருகார். ஆனால் அந்த நாற்பது திருடனுங்னுங்க அவங்க பக்கம் இல்லே அப்படினா…?
  அடடே அரசியல் சதுரங்கத்திலே நடக்கறத பார்க்கும்போது இப்பவே வயித்த கலக்குதே ஒரு சீட்டாவது கிடைக்குமாங்கற பயத்திலே என்னென்னவோ உளற வைக்குதே…

 • மு.சுகுமாரன்  wrote on 6 மார்ச், 2017, 8:46

  தோற்க்கப் போகிறீர்கள் என்று உறுதியாய் தெரிந்து விட்டதா ?

 • en thaai thamizh wrote on 6 மார்ச், 2017, 10:16

  பெரிய பேச்சு பேசும் இவனுக்கு சீனர்கள்/மற்ற இனத்தவர்கள் மலாய்க்காரனுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும். இவன் திறமையோடு ஒழுங்காக செயல்பட்டால் -எல்லா இன த்தவர்களுக்கும் பிரதமனாக இருந்தால் இவனை தூக்கி எரிய வேண்டிய அவசியமில்லையே? அவனுக்கும் இது தெரியும் ஆனாலும் ஊழல் வாதி இதைப்பற்றி எல்லாம் கவலை படுவது கிடையாது– தன்னை அசைக்க யாரும் கிடையாது என்று இவனுக்கு தெரியும் –மலேசியர்கள் குறிப்பாக அவன் -பெரும்பாலோர்- இனம் நீதி நியாயம் பற்றி அக்கறை கிடையாது–அதிலும் மத வெறி பிடித்து பொறாமையில் இருப்பவர்களுக்கு வேர்த்தா வடியுது.

 • அலை ஓசை wrote on 6 மார்ச், 2017, 11:28

  நம்பிக்கைநாயவாதியென்றால்,
  இந்தோநிசிய குடியேறி துணைப்பிரதமராக
  இருக்கும்போது,மண்ணின் மைந்தன் துணை
  பிரதமராக வந்தால் நாடு அழிந்துடுமா என்ன!

 • நாம் தமிழர் டெங்கில் wrote on 6 மார்ச், 2017, 18:31

  வணக்கம். அப்படியென்றால் மலாய்காரர் அல்லாதவர் துணைப்பிரதமர் பதவிக்கு வரக்கூடாதுன்னு சொல்லாமல் சொல்கிறார்.

 • 'நக்கல்' நக்கீரன் wrote on 7 மார்ச், 2017, 13:19

  துணைப்பிரதமர் மட்டுமா ? 79.99 சதவீதம் எம்பிக்கள் இந்தோனீசிய குடியேறியாக இருந்தாலும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பிரதமரே இந்தோனீசிய குடியேறிதானே

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: