மலாய்க்காரர்கள் என்றால் மற்றவர்களைத் தாக்கிப் பேசலாம் எனப் பொருள்படாது

deleபாஸ்   பேராளர்   ஒருவர்   தம்   கட்சியினர்    இதர   இனங்களையும்   சமயங்களையும்   இடித்துரைப்பதை    நிறுத்திக்  கொள்ள   வேண்டும்    எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கூட்டரசு   அரசமைப்பு   மலாய்க்காரர்களுக்கும்   இஸ்லாத்துக்கும்   தனி  இடம்  அளித்திருப்பது   உண்மைதான்  என்றுரைத்த   நெகிரி   செம்பிலான்   பேராளர்   அபு   ஸரிம்   அப்துல்   ரஹ்மான்,    அதை  வைத்து   மற்றவர்களைத்  தாக்கிப்   பேசுவது  முறையல்ல   என்றார்.

“அது  இந்நாட்டில்  உள்ள   மற்ற   இனங்களையும்   சமயங்களையும்   தாக்கிப்  பேசுவதற்கு   அளிக்கப்பட்ட   உரிமம்  அன்று”,  என   அபு  ஸரிம்   கெடா,  அலோர்   ஸ்டாரில்   பாஸ்   முக்தாமாரில்    கூறினார்.

“கோபத்துக்கு   இடமளித்து    இன  உணர்வுகளைத்   தூண்டி  விடுவதற்கு    மாறாக,  அப்படிப்பட்ட    செயல்களில்   ஈடுபடுவோரைக்   கண்டிப்பதற்குக்  கட்சியைப்  பயன்படுத்திக்கொள்ள    வேண்டும்.

“மற்ற   இனங்களையோ   சமயங்களையோ    குற்றஞ்சொல்வது    அவசியமற்றது”,  என்றார்.