1எம்டிபி-ஐபிஐசி தீர்வு குறித்து பிஏசி தலைவர் மெளனமாக இருப்பது ஏன்? புவா கேள்வி

dap1எம்டிபி-க்கும்   அனைத்துலக   பெட்ரோலிய   முதலீட்டு   நிறுவன(ஐபிஐசி)த்துக்குமிடையில்     காணப்பட்ட   தீர்வு   குறித்து   பொதுக்  கணக்குக்   குழுத்   தலைவர்     ஹசன்   அரிப்பின்   வாய்  திறக்காமலிருப்பது   ஏனென்று    டிஏபி   எம்பி   டோனி   புவா    வினவினார்.

பல  பில்லியன்   ரிங்கிட்    சம்பந்தப்பட்ட   விவகாரம்    தொடர்பில்   ஓராண்டுக்   காலமாக    பேச்சு    நடத்திய   பின்னர்    1எம்டிபியும்  ஐபிஐசி-யும்   ஒரு  தீர்வு   கண்டுள்ளன   என்று  புவா   ஓர்      அறிக்கையில்   கூறினார்.

ஆபார்    இன்வெஸ்ட்மெண்ட்ஸ்   பிஜேஎஸ்   லிமிடெட் (பிவிஐ)     ஐபிஐசி-இன்  துணை  நிறுவனம்   என்பதை   உறுதிப்படுத்தும்   கடிதமொன்றை    இரண்டாவது   நிதி     அமைச்சர்     ஜொகாரி    அப்துல்    கனி   கடந்த    வாரம்   வெளியிட்டதையும்    புவா     சுட்டிக்காட்டினார்.

இப்படி    சில      புதிய    நிகழ்வுகளால்    புதிதாக   நியமிக்கப்பட்டுள்ள    தலைமைக்  கணக்காய்வாளர்     மதினா   முகம்மட்டும்    பிஏசியும்    1எம்டிபி  மீதான   புலனாய்வை  மீண்டும்   தொடங்குவது    நல்லது     என   புவா   குறிப்பிட்டார்.

“மீண்டும்  விசாரணையைத்     தொடங்க    வேண்டும்     என்று  பல   தரப்புகள்     கோரிக்கை  விடுத்துள்ள   போதிலும்      பிஏசி    தலைவர்   ஹசன்   அரிப்பின்    வாயைத்    திறக்கவில்லை.

“ரிம15 பில்லியன்   மேற்பட்ட  வரிசெலுத்துவோர்  பணம்   சம்பந்தப்பட்ட   ஒரு    முக்கியமான   விவகாரம்  குறித்து     அவர்    அறிக்கை    எதுவும்  விடுக்கவில்லை     என்பதுடன்   ஊடகங்கள்    அதன்   தொடர்பில்    கேட்கும்  கேள்விகளுக்கும்  பதிலளிப்பதைத்    தவிர்த்து   விடுகிறார்”,  என   அந்த  பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா   எம்பி   கூறினார்.