இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணை சிங்கப்பூர் கைது செய்துள்ளது

 

Sporearrestsislamistwomanஇஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) சேர்ந்து கொள்வதற்கான முயற்சியிலும் சிரியாவில் ஒரு தீவிரவாத கணவரைத் தேடுவதில் ஈடுபட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்பட்ட ஒரு சிங்கப்பூர் குடிமகளை அந்நாட்டின் மிகக் கடுமையான, விசாரணையின்றி தடுத்து வைக்க வகை செய்யும் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் தடுத்து வைத்துள்ளது.

இப்பகுதியில் ஐஎஸ் சித்தாந்தம் பரவி வருவது குறித்து கவலையடைந்திருக்கும் வேளையில், இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் முதல் சிங்கப்பூர் பெண்ணை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ளது.

சிங்கப்பூரும் அதன் அண்டைநாடுகளும் தீவிரவாதிகள் அந்நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் சிங்கப்பூரை இலக்காகக் கொண்டுள்ளனர் என்றும் சிங்கப்பூர் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் அதன் மக்களை கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளது.

சைஹா இஸ்ஸா ஸாரா அல் அன்சாரி, 22, என்ற அப்பெண் இம்மாதத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் தமது குழந்தையுடன் சிரியாவுக்குச் சென்று ஈராக்கின் ஐஎஸ்சுடன் சேர்ந்துகொள்வதற்கான நோக்கம் கொண்டிருந்ததாக சிங்கப்பூர் உள்துறை அமைச்சு அதன் நேற்றைய அறிக்கையில் கூறியது.

இஸ்ஸாவின் நடவடிக்கையை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தடுத்த நிறுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. ஆனால். இஸ்ஸாவுக்கு எதிர்கான சாட்சியங்களை அவர்கள் அழித்து விட்டனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சு ஆலோசித்து வருவதாக அது கூறியது.