அன்னிய தொழிலாளர்களை ஜூன் 30க்குள் பதிந்து கொள்ள வேண்டும்; தவறினால் பிரம்படி

immigritionபதிவு   செய்யப்படாத   அன்னிய    தொழிலாளர்களை    வேலைக்கு    வைத்திருப்போர்    ஜூன்   30க்குள்   அவர்களைப்    பதிவு     செய்துகொள்ள   வேண்டும்.  அப்படி  செய்யத்   தவறுவோர்  பிரம்படி   தண்டனையை    எதிர்நோக்குவர்.

ஐந்து   அல்லது     அதற்கு    மேற்பட்ட     எண்ணிக்கையில்   சட்டவிரோத    தொழிலாளர்களை    வேலைக்கு   வைத்திருப்போருக்கு   பிரம்படி    தண்டனை   அல்லது      ஒவ்வொரு   தொழிலாளருக்கும்     ரிம10,000  அபராதம்    விதிக்கப்படலாம்     எனக்     குடிநுழைவுத்துறை     தலைமை   இயக்குனர்    முஸ்டபார்    அலி    கூறினார்.

“இப்படிப்பட்ட    தொழிலாளர்களை    பிப்ரவரி  15-இல்   தொடங்கப்பட்ட    இ-கார்ட்   முறையின்கீழ்   பதிவு      செய்ய    வேண்டும்   என    எத்தனையோ     தடவை    எச்சரித்து   விட்டோம்.  ஆனால்  இன்னும்    செய்யாமலிருக்கிறார்கள். ஜூலை   1க்குப்  பிறகு   இவர்களை  விரட்டிப்  பிடிப்போம்”.

கடைசி   நேரத்தில்    வந்து   பதிவிடங்களில்    பெரும்   நெரிசலை   ஏற்படுத்த   வேண்டாம்    என்றும்   முஸ்டபார்    கேட்டுக்கொண்டார்.