ஐஜிபி: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் இங்கு வரலாம் ஆனால், அவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை

editorசரவாக்   ரிப்போர்ட்  பத்திரிகையின்    ஆசிரியர்    கிளேர்   ரியுகாசல்-  பிரவுன், பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்    வழக்குரைஞர்    முகம்மட்    ஷாபி    அப்துல்லாவுக்கு   ரிம9.5 மில்லியன்   கொடுத்தார்    என்று  அப்பத்திரிகை    வெளியிட்டிருந்த    செய்தி  தொடர்பான   போலீஸ்     விசாரணைக்கு  உதவ    மலேசியா   வர   வேண்டும்   என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்    காலிட்    அபு   பக்கார்    மீண்டும்   கேட்டுக்கொண்டார்.

ஆனால்,  இங்கு  வந்து   போகும்வரை    அவரின்   பாதுகாப்புக்கு    உத்தரவாதம்    அளிக்க   இயலாது    என்றும்   காலிட்    கூறினார்.

“அவருடைய   பாதுகாப்புக்கு     உத்தரவாதம்   அளிக்க   மாட்டேன்.

“அப்படிச்   செய்தால்   அவர்  சத்தம்   போட்டுக்கொண்டே   இருப்பார்,  அடிப்படையற்ற   குற்றச்சாட்டுகளை    அள்ளி  வீசிக்கொண்டே   இருப்பார்”,  என  இன்று   கோலாலும்பூரில்    செய்தியாளர்    கூட்டமொன்றில்    காலிட்   கூறினார்.