மிதவாதம் பேசும் நஜிப் பிடிஎன்னை கலைக்காவிட்டால், ஹரப்பான் அதைச் செய்யும், கஸ்தூரி கூறுகிறார்


மிதவாதம் பேசும் நஜிப் பிடிஎன்னை கலைக்காவிட்டால், ஹரப்பான் அதைச் செய்யும், கஸ்தூரி கூறுகிறார்

 

KasthuriBTNமிதவாதத்தை தூக்கிப்பிடிக்கும் பிரதமர் நஜிப் ரசாக் அதே வேளையில் இனவாதத்திற்கு தூபம் போடுவதாக கருத்தப்படும் பிடிஎன்னுக்கு (Biro Tata Negara)ஆதரவு கொடுப்பது அவரது கபடவேடதாரித்தனத்தைக் காட்டுகிறது என்று பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகிறார்.

ஒரே மலேசியாவை ஆதரித்து வாதாடும் நஜிப், பிரிவினைவாதத்தையும் வேறுபாட்டையும் வளர்க்கும் ஓர் அரக்கனை பிடிஎன் என்ற பெயரில் அவரது பிரதமர் இலாகாவிலேயே ஊட்டி வளர்க்கிறார் என்று கஸ்தூரி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

நேற்று, நஜிப் பிடிஎன்னை பாராட்டியதோடு பாரிசானின் எதிர்கால பொதுத்தேர்தல்கள் வெற்றிக்கு அந்த அமைப்பு தேவைப்படுகிறது என்று தெரிவித்திருந்த கருத்துக்கு கஸ்தூரி பதில் அளித்து இவ்வாறு கூறினார்.

பிடிஎன்னுக்கு பகிரங்கமாக அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு ஒரு தேசத்தை உருவாக்குவது. ஆனால், அது அதற்கு நேர்மாறானதைச் செய்துள்ளது என்றாரவர்.

பிடிஎன் சகிப்புத்தன்மை, தொழிலியம், நேர்மை மற்றும் தேசப்பற்று ஆகியவற்றுக்கு எதையும் செய்யவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் ஆனால் வெளிப்படையாக சொல்லப்படாத இரகசியமாகும். மாறாக, அது அம்னோ-பிஎன்னின் இன்னிசைக்கு நடனம் ஆடிக்கொண்டு மேலாண்மை, இனவாதம் மற்றும் பிளவுபடுத்தும் கொள்கைகள் ஆகியவற்றை பரப்பிக்கொண்டு மலேசியாவில் ஒன்றுபட்ட, நேர்மையான மற்றும் நியாயமான சமுதாயத்தை அழிப்பதற்கு அதன் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

36 ஆண்டுகளாகியும் பிடிஎன் ஒரு தேசத்தை உருவாக்கும் பணியில் தோல்வி கண்டுவிட்டது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

நஜிப்பின் ஒரே மலேசியா சுலோகம் உண்மையானது என்றால், பிடிஎன்னை கலைக்கும்படி அவர் நஜிப்பை வலியுறுத்தினார்.

நஜிப் செய்யவில்லை என்றால், ஹரப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினால் அதைச் செய்யும் என்று கஸ்தூரி கூறினார்.

“மலேசியன் மலேசியாவில் அமைதியை விரும்பும் மலேசியர்களிடையே பிடிஎன் தொடர்ந்து இருப்பதற்கு இடமில்லை”, என்றார் கஸ்தூரி.

 

 

 

 

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • en thaai thamizh wrote on 17 ஜூலை, 2017, 11:49

  கஸ்தூரி அம்மா அவர்களே- நீங்கள் ம்,உதலில் அரியணை எற முடியுமா என்று பாருங்கள். இப்போது என்ன சொன்னாலும், எடுபடாது.

 • [email protected] wrote on 17 ஜூலை, 2017, 11:58

  திருமதி கஸ்துரி பட்டு அவர்களே வணக்கம் . தங்களின் “பி தி என்” விபர அறிக்கையை நன்கு அறிகிறோம் . பிரதமர் திரு நஜிப் அவர்களின் கபடவேடதாரி செய்கையையும் பல சந்தர்ப்பங்களின் தெளிவாக கண்டு வருகிறோம் குறிப்பாக ‘ கோவில் சிலை உடைபடும்போது, தமிழ் சீனம் ஆரம்பப்பள்ளி உயர்நிலை பள்ளிகளில் நம் இனத்தின் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்களில் தன்கவனிப்பை செலுத்தாமல் மௌனம் காப்பது, அரசாங்க நிலைகளில் நம் இனத்தின் வேளாண்மையை உயர்த்தாதது, ஒரு சில நடவடிக்கையில் அவர் சம்மதம் செலுத்தியபிறகு அவருக்கு கீழே உள்ள இரண்டாம் தரத்தினர், அதிகாரிகள் அவரின் உறுதிமொழியை புறம்தள்ளும்போது அதனை கண்டும் , அறிந்தும் ஏதும் தெரியாதது போல இருப்பது என பல , எனவே தற்போது எதிர்கட்சியில் கூட்டு சேர்ந்து கூட்டணி என நீங்கள் இருப்பது மகிழ்ச்சியே ! ஆனால் அந்த கூட்டணியில் உள்ள முன்னாள் பிரதமர் திரு மகாதீர் , முன்னாள் துணை பிரதமர் முகுடின் இருவரையும் நன்கு நினைவில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக திரு மகாதீர். 48 சதவீதமாக அரசாங்கத்தில் இருந்த நமது வேலைவாய்ப்பினை 0 நிலைக்கு ஆளாகியவர் இவரே , பூமிபுத்ரா என கூறி ஒரு இனத்தை மட்டும் முன்னேற்றி நம்மை பாதாளத்தில் தள்ளியவரும் இவரே , நமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றதை தடுத்தவரும் இவரே , அவருடன் சேர்ந்து திரு முகுடின் நம் பிள்ளைகளின் ஆங்கில மொழிக்கு முற்றுப்புள்ளி வைத்து தேசியமொழி என மலாய்மொழியின் ஆதிக்கத்தை செலுத்தியவரும் இந்த இனவெறியரும் என்பதே . இவை அனைத்தயும் கருத்தில் கொண்டு தாங்கள் கூட்டு சேர்ந்து கூட்டணி மூலம் வெற்றியினை தழுவதற்கு முன்பாக நமக்கு வேண்டியதை , வேண்டப்படுவதை விஷஊசி திரு மகாதீர் , இனவெறியன் திரு முகுடின் மற்றும் பல கூட்டணி தலைவர்களிடம் நன்முறையில் பேசி நம் இனத்திற்கு வேண்டியதை மறுஉறுதி படுத்திக்கொள்ளுங்கள் . நன்று .

 • singam wrote on 17 ஜூலை, 2017, 19:08

  en thaai thamizh அவர்களே! மாண்புமிகு கஸ்தூரி த/பெ பட்டு வை ‘அம்மா’ என்கிறீர்கள்.T.Sivalingam @ Siva அவர்கள், கஸ்துரியை ‘திருமதி’ என்கிறார். நம்ம குமாரி கஸ்துரி இன்னும் ஒண்டி கட்டை, லா. மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருக்கோம். எங்காவது தட்டுப்பட்டா சொல்லுங்க. நல்ல பெண்ணுங்க. என்னா ஒன்னு, அப்பாகிட்ட இருந்த வீரம் இன்னும் இவருக்கு வரவில்லை.  

 • THOVANNA PAAVANNA wrote on 18 ஜூலை, 2017, 11:27

  1969 இல் பெரும்பாலான அரசு சேவைகளின் முதன்மை அதிகாரிகளாக (H .O .D ) மலாய்காரரல்லாதவர்கள்தான் இருந்தனர், பெரும்பாலான பள்ளிகளும் ஆங்கில பள்ளிகளாகத்தான் இருந்தன. அதே ஆண்டில் கல்வித்துறையிலும் மாபெரும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது அனைத்து ஆங்கில பள்ளிகளும் மலாய் மொழியை போதனா மொழியாக்கப்பட்டது. அதற்கும் மேல் அப்பொழுது பெரும்பாலான அரசு சேவையின் HODs மலாய்க்காரரல்லாதவர்களாய் இருந்ததால், அன்றய அரசு அரசு வேலையிடங்களை நிரப்ப ‘operasi isi penoh ‘ ஒன்றை ஆரம்பித்து, ஒவ்வொரு காலி இடத்தையும் மலாய்க்காரர்களால் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்ற ஆணையையும் பிறப்பித்தது. அப்பொழுது இருந்த நமது பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நம்மையே பகடையாக பயன்படுத்திய தலைவர்கள் வாய்மூடி மௌனமாகத்தான் இருந்தனர். ஒரு சிலர், ‘இது நாம் பிழைக்க வந்த நாடு’ என்றுகூட கூறியுள்ளனர். வாய்ப்பிருக்கும்போது நழுவவிட்டு இப்பொழுது குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. அன்று முதல் இன்றுவரை நாம் கை ஏந்தும் சமூகமாகவே இருக்கிறோம். மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் ஆனால் நாம் மாற தயாராக இல்லை. நம்மிடையே ‘தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்’ போன்ற சொற்களால் நாம் நமது சமூதாய சிந்தனை இல்லாமலே மாறிவிட்டோம். நம் இனத்தவரும் மற்ற இனத்தவரும் அருகருகே நமக்கு தேவையான ஒரு பொருளை விற்பனை செய்தால் நம்மவர் பெரும்பாலும் மற்ற இனத்தவரிடமிருந்துதான் அதனை வாங்குவர். நான் நாம் இன வெறியர்களாக வேண்டும் என்று கூறவில்லை. இன உணர்வு இருக்கலாமே. சிந்திப்போம் செயல்படுவோம். மாறுவோம் மாற்றுவோம்.மாற்றம் நமக்கும் நமது சந்ததியினருக்கும் நன்மையை அளிக்கும் என்று நம்புவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: