எம்பி: பிரதமரின் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புக்கு என்ன செலவானது? முறையான பதில் தேவை

anthonyபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   ஹரி   ராயா    திறந்த   இல்ல    உபசரிப்புக்கு    எவ்வளவு   செலவிடப்பட்டது    என்று    நாடாளுமன்றத்தில்   தாம்   முன்வைத்த    கேள்விக்கு   முறயான   பதில்   கொடுக்கப்படாதது    ஏன்   என்று   வினவுகிறார்   டிஏபியின்   சிரம்பான்  எம்பி   அந்தோனி    லொக்.

அக்கேள்விக்கு  ஜூலை   25-இல்    எழுத்துவடிவில்     பதிலளித்த   பிரதமர்துறை   அமைச்சர்   அஸலினா   ஒத்மான்  சைட்,   ஸ்ரீபெர்டானாவில்    நடந்த   ஹரி  ராயா   திறந்த   இல்ல    உபசரிப்புக்கு    பிரதமரின்    கேளிக்கை   அலவன்சிலிருந்து   பணம்   கொடுக்கப்பட்டது    என்றும்    “மிதமான   செலவுதான்”  ஆனது   என்றும்   கூறினார்.

அந்த  உபசரிப்பில்   ஒவ்வொன்றுக்கும்    என்ன   செலவானது    என்று   விளக்கம்  கேட்டிருந்ததாகவும்    தம்முடைய    கேள்வியை   அஸலினா   புரிந்துகொள்ளவில்லைபோல்   தெரிவதாகவும்   லொக்   கூறினார்.

“அது(பொது  உபசரிப்பு   நடத்துவது)  பிரதமருக்குள்ள   சலுகை   என்பது    தெரியும்.  அது   குறித்து    கேள்வி   எழுப்பவில்லை.

“ஆனால்,     அதற்கு  என்ன    செலவானது  என்று   தெரிந்துகொள்ளும்   உரிமை எம்பிகளான    எங்களுக்கு   உண்டு”,  என  லொக்   இன்று   நாடாளுமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்களிடம்    கூறினார்.