வெடிபொருட்களுடன் விரைந்த வாகனம்: துரத்திப்பிடித்த பொலிசார்

பெல்ஜியத்தில் வெடிபொருட்களுடன் பாய்ந்த வகனம் ஒன்றை பொலிசார் துரத்திச் சென்று அதன் ஓட்டுனரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சின் Molenbeek பகுதியில் இந்த அதிரடி சாகச சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது வாகனம் ஒன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதி வழியாக சென்றுள்ளது.

இதனிடையே பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பதை உறுதி செய்ததை அடுத்து பிரஸ்ஸல்ஸ் பொலிசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்றுள்ளனர்.

பொலிஸார் துரத்துவதை அறிந்ததும் அந்த நபர் அதி வேகமாக அந்த வாகனத்தை செலுத்தியுள்ளார். இதனால் பொலிசார் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்த பொலிசர், அந்த நபரை கைது செய்துள்ளதுடன், வானத்தில் இருந்த வெடிபொருட்களை சோதனையிடும் வகையில் ராணுவ உதவியை நாடியுள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் உள்ள 500கும் மேற்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெடிபொருட்களுடன் சிக்கியுள்ள வாகனமானது ஜேர்மனியில் பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Molenbeek பகுதியானது பிரஸ்ஸல்சில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாவட்டமாகும். மட்டுமின்றி இப்பகுதியை ஐரோப்பாவில் உள்ள ஜிகதிகளின் தலைநகர் என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாரிஸ் தாக்குதலை இப்பகுதியில் உள்ள ஐ.எஸ் ஆதரவு குழு ஒன்று மேற்கொண்டதை அடுத்து இப்பகுதி மிகவும் பிரபலாமனது. நான்கு மாதங்கள் கடந்து பிரஸ்ஸல்ஸ் தாக்குதலிலும் இப்பகுதியில் உள்ள குழு ஒன்று ஈடுபட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com