கொடியைத் தலைகீழாக போட்டதற்கு இந்தோனேசியாவிடம் மன்னிப்பு கோரினார் கேஜே

ளைஞர்,  விளையாட்டு    அமைச்சர்     கைரி    ஜமாலுடின்,   கோலாலும்பூர்   சீ  விளையாட்டுப்  போட்டி  சிறப்பு  மலரில்  இந்தோனியாவின்  கொடி  தலைகீழாக   பதிவிடப்பட்டிருப்பதற்கு   அக்குடியரசின்  விளையாட்டுத்துறை    அமைச்சர்   இமாம்  நஹ்ராவியிடம்   மன்னிப்பு   கேட்டார்.

“பாபாக்  இமாம்,   தயை   செய்து   என்  உளப்பூர்வமான   மன்னிப்பை    ஏற்றுக்கொள்ளுங்கள்.

“அதில்   எந்தத்   தீய  நோக்கமும்   கிடையாது.  தவற்றுக்கு   உண்மையிலேயே   வருந்துகிறேன்”,  என  கைரி  நேற்றிரவு   டிவிட்டரில்   பதிவிட்டிருந்தார்.

அவருக்கு  முன்பே  இமாம்  அச்சம்பவம்  குறித்து    டிவிட்   செய்திருந்தார்.     “ கவனக்குறைவாக”   இந்தோனேசிய  கொடி  தலைகீழாக      அச்சிடப்பட்டிருந்தது   சீ    விளையாட்டுப்  போட்டிகளின்  பிரம்மாண்டமான    தொடக்க  விழாவுக்கு   ஒரு  களங்கமாக   அமைந்து  விட்டது    என்று  அவர்    கூறியிருந்தார்.