“இனவாதிகளின் அரசன்” என்பதில் பெருமைப் படுகிறேன், இப்ராகிம் அலி கூறுகிறார்

KingAliமலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலி தாம் “மலேசிய இனவாதிகளின் அரசன்” என்று ஒப்புக்கொண்டதோடு அந்த முத்திரை குறித்து பெருமைப்படுவாதாக கூறுகிறார்.

“சீமாட்டிகளே, சீமான்களே, நான் மலேசிய இனவாதிகளின் அரசன் என்பதை ஒப்புக்கொள்வதோடு அதற்காகப் பெருமைப்படுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்”, என்று கோலாலம்பூரில் நேற்று கூட்டரசுப் பிரதேச மலாய் காங்கிரஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில் இப்ராகிம் அலி கூறினார்.

பெடரல் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைத் தமது குழுவினர் தற்காக்கின்றனர் என்றாரவர்.

பாரிசானும் இன அடிப்படையிலானதே

பின் கூட்டணிக் கட்சிகள் அவர்களுடைய இனங்களுக்காகப் போராடும் போது ஏன் பெர்காசா அதனுடைய நிலைப்பாட்டிற்காக குறைகூறப்படுகிறது என்று இப்ராகிம் அலி வினவினார்.

“அவர்கள் நம்மை இனவாதிகள் என்கிறார்கள். அப்படியானால், மசீச, மஇகா மற்றும் கெராக்கான் ஆகியவை இனவாதக் கட்சிகள் இல்லையா? முட்டாள்தனம்”, என்று அந்த முன்னாள் பாஸிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.