மலாக்கா முத்துக்கிருஷ்னன் அராஜகமாகத் தாக்கப் பட்டார்


மலாக்கா முத்துக்கிருஷ்னன் அராஜகமாகத் தாக்கப் பட்டார்

muthukrishnanதமிழ் மலர் நாளிதழில் அரசியல் விமர்சன படைப்புகளை எழுதுபவரும், மூத்த எழுத்தாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்னன் (வயது 69) நேற்று கடுமையாக தாக்கப்பட்டதாக பெரித்தா டெய்லி என்ற இணைத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

நேற்றுக் காலை சுமார் 10.30 மணியளவில், சில நபர்களால் அவர்  தாக்கப்பட்டார். இந்த அராஜகம் பேரக், புந்தோங்கில் நடந்தது.

காலையில் சிற்றுண்டி அருந்திக்  கொண்டிருந்த போது மூன்று நபர்கள் அவரிடம் சென்று தகாத வார்த்தைகளால் சாடினர். தேசிய முன்னணிக்கு எதிராக எழுத வேண்டாம் என்று மிரட்டிய அவர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

Muthukrishnanஇந்த சம்பவத்தை தமிழ்மலர் நாளிதழின் நிருவாக ஆசிரியர் பெரியசாமியும் கடுமையாகக் கண்டித்தார். “பத்திரிக்கையாளர்கள் விமர்சன கண்ணோட்டம் உள்ளவர்கள், அதை ஏற்க மறுப்பவர்கள் சட்டத்தின் வழியும், மாற்று கருத்துக்கள் வழியும் தகுந்த நடவடிக்கயை எடுக்கலாம். அதை விடுத்து வன்முறையில் இறங்குவது அராஜகமாகும். இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டத்திற்குறியது”, என்றார்.

கடுமையான காயங்களுக்கு உள்ளான முத்துக்கிரு‌ஷ்னன், 16 தையல்கள் போடப்பட்டு, ஈப்போ பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மலாக்கா முத்துக்கிருஷ்னன் பற்றிய தகவல்கள்  

மலேசியாவைச் சேர்ந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் பவனி வருகின்றார். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். பின்னர் கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர்.

மலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மூன்று நாட்கள் கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரைஞராகவும் செயலாற்றுகின்றார்.

2009 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார்.தற்சமயம் இவர் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். ‘கணினியும் நீங்களும்’ பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். மற்ற நேரங்களில் கணினி பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இவருடைய மனைவி ருக்குமணி முத்துக்கிருஷ்ணன். மலேசியாவில் முத்திரை பதித்த எழுத்தாளர்களில் ஒருவர். நிறைய வானொலி நாடகங்களை எழுதியவர். நான்கு பிள்ளைகள்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 22 ஆகஸ்ட், 2017, 20:37

  இக்காட்சியைக் கண்டவுடன் மனம் நோகின்றது. ஒருவரின் எழுத்தில் உண்மை இருந்து அதனைத் தடுக்க எவரேனும் இவ்வகை காட்டுமிராண்டித் தனத்தைக் கையாண்டால் அவர் எழுதியது உண்மை என்றே மக்கள் நினைக்கத் தோன்றும்.

  மலாக்கா முத்துகிருஷ்ணன் அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன். சிவசிவ.

 • singam wrote on 22 ஆகஸ்ட், 2017, 21:08

  ஒரு மலாய் எழுத்தாளனுக்கு இப்படி நேருமானால், பிரதமர் முதற்கொண்டு வாயை திறப்பார்கள். ஆனால் பண்பட்ட எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டதால் எத்தனை “தமிழன்” வாயை திறந்து சத்தம் போடுகிறார்கள் என பார்ப்போம்.

 • நவின் பாரதி wrote on 22 ஆகஸ்ட், 2017, 21:12

  ஆறுதலும் தேருதலும் இங்கே உதவா…பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும். அந்த உணவக கேமராவில் காணொளி பதிவாகியிருக்கும். அந்த குண்டர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கவும் முடியாது. எனவே காவல் துறையினர் விரைந்து செயல்பட வேண்டும். தாக்கியவர்களை கைது செய்து விசாரணை ஏதும் இன்றி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிட வேண்டும். அதற்கு முன் தாக்குதலுக்குள்ளானவருக்கும் தாக்கியவர்களுக்கும் முன் பகை உண்டா என்பதை விசாரிப்பதும் அவசியம்.

 • Dhilip 2 wrote on 22 ஆகஸ்ட், 2017, 21:21

  மா இ கா வை என்ன செய்யலாம் ? இல்லை என்றால் பல முத்து கிருஷ்ணன் தாவை உடையும் ! இதற்கு முன்னும் அ. பெரு. தமிழ்மணி ….

 • [email protected] wrote on 22 ஆகஸ்ட், 2017, 23:00

  குண்டர் கும்பல் இன்னும் ஒழிக்கப்படவில்லை, நியாமான வழக்கறிஞர் என போற்றப்பட்ட வழக்கறிஞர் திரு சுரேந்திரன் , பல அநீதி வழக்குகளில் தன் பார்வையை செலுத்திவரும் அவர் , இதுபோன்ற சம்பவத்திற்கு என்ன பதில் வைத்துள்ளார் ? வழக்கறிஞர்களே தயவுசெய்து நேர்மையான , உண்மையான விபரங்களுக்கு வழக்காடி நீதியை நிலைநாட்டுங்கள் .

 • loganathan wrote on 22 ஆகஸ்ட், 2017, 23:33

  69 வயதுடைய நிருபர் அதுவும் 3 பேர்கள் தாக்கியுள்ளனர் மானம் இல்லாத கட்சி கேவல நாய்கள் க்க்க்க்க்ரா tui .

 • siva wrote on 23 ஆகஸ்ட், 2017, 7:26

  பணம் செய்யும் மாயம். உண்மை எப்போதும் இப்படித்தான் காயப்படும்.

 • PalanisamyT wrote on 23 ஆகஸ்ட், 2017, 9:16

  1. அன்று தமிழ்மணி; நேற்று வேதமூர்த்தி; இன்று இவர்; நாளை யாரோ?

 • raja wrote on 23 ஆகஸ்ட், 2017, 9:19

  நேற்று வேதமூர்த்திய இன்று மலாக்கா முத்துக்கிருஷ்னன்..
  ..இந்தியர்களில் நல்ல முண்டேற்றம் …

 • மு.சுகுமாரன்  wrote on 23 ஆகஸ்ட், 2017, 9:48

  ம இ க போராடுகிறது.மக்களுக்காக 

 • PalanisamyT wrote on 23 ஆகஸ்ட், 2017, 9:51

  2. தேசியமுன்னணியில் நம்மை பிரதிநிதித்திருக்கும் நம்மவர்கள் இனிமேல் இந்திய இளைஞர்களிடையே வளர்ந்துக் கொண்டிருக்கும் சமுக சீர்க்கேடுகளைப் பற்றியோ, வன்முறைகளைப் பற்றியோ பேசுவதற்கான தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார்கள்; அவர்களிடம் உண்மையிருந்திருந்தால் இந்தக் காட்டுமிராண்டித்தனமானச் செயல்களை அவர்கள் உடனே கண்டித்திருக்க வேண்டும்; இதுநேரம் வரை கண்டிக்கவில்லை; கண்டிக்காததின் விளைவு தங்களின் உண்மையான முகத்தை நாடறிய வெளிப் படையாக மக்களுக்குக் காட்டிவிட்டார்கள்; இப்படித்தான் அன்று மைக்கா பங்குதாரர்கள் கூட்டத்தில், பங்குதாரர்கள் தாங்கள் போட்டப் பணத்திற்கு நியாயம் கேட்டப் போது, பங்குதாரர்கள் அடியோடுச் சேர்ந்து உதையும் வாங்கினார்கள்; அங்கேயும் வன்முறை; பங்குதாரர்களின் சார்பாக, நியாயம் கேட்டு, அன்று தமிழ்ப் பத்திரிக்கை ஆசரியரான அமரர் ஆதிக் குமணன் அவர்கள் எழுதியதை நாம் மறக்க முடியுமா? இனிமேல் நாம் நம்மை நம்பித்தான் வாழவேண்டும்; இவர்களை இனிமேல் நம்புவது கொஞ்சமும் மரியாதையில்லை; அதற்க்காகத்தான் நம் மக்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்; நம் நியாயமானத் தேவைகளை பெறுவதற்கு வாக்குச் சீட்டு மூலமாகத்தான் நாம் அவர்களிடம் பேசவேண்டும்; அவர்களை நாம் ஆதரிக்கவும் கடமைப் பட்டுள்ளோம். தேசியளவில் நாம் வலிமையான வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதுநாள் வரை பதிவுச் செய்யாதவர்கள் தபால் நிலையம் சென்று உடனே வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ளுங்கள்; ஒருமுறை மட்டும் செய்தால் போதும். அதையும் இந்த நல்லக் காரியத்தை இன்றேச் செய்யுங்கள். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தியர்களின் ஆதரவும் இருந்தால்தான் ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. “தோட்டத்திற்கு விவசாயி கட்டாயம் வேலிப் போடவேண்டுமையா! இல்லையென்றால் கணடவனெல்லாம் தோட்டத்தை மேய்ந்துவிடுவார்களப்பா! நமக்கும் தேசியளவில் வலிமையான வாக்கு வங்கியென்ற வேலியை அமைத்துக் கொள்ளவேண்டுமய்யா; இதை மட்டும் கட்டாயம் நினைவில் கொள்ளுங்களய்யா!.”

 • abraham terah wrote on 23 ஆகஸ்ட், 2017, 10:12

  அந்த நாளிதழை நான் படிப்பதில்லை என்றாலும் அவருடைய இணைய தளத்தை அடிக்கடி வலம் வருபவன். நிறைய ஆராய்ச்சிகளை செய்து பல சரித்திர கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஒன்று மட்டும் புரிகிறது. தேசிய முன்னணியை தாக்கி எழுதினால் அவர்கள் தாக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ம.இ.கா. என்று சொல்லுவதற்கு கூட தைரியம் இல்லாதவர்கள்! வெறும் ரௌடிகளை வைத்து ஆட்டம் காட்டுகிறார்கள்! இந்த ம.இ.கா.நாதாரிகளுக்கு இம்முறை டெபாசிட் கூட கிடைக்காது என்பது மட்டும் உண்மை! வருந்துகிறேன்.

 • RAHIM A.S.S. wrote on 23 ஆகஸ்ட், 2017, 10:30

  இப்படிப்பட்ட அளப்பரிய சேவையை இந்திய சமுதாயத்திற்கு   செய்வதுதான் MIC ஈன பிறவிகளுக்கு கை வந்த கலையாயிற்றே.
  என்ன ஒரு வருத்தம் என்றால், கொடுத்த வேலையை ஒழுங்காக செய்யாததினால் MIC துணை அமைச்சரை ஒரு மலாய்க்காரன் அறைந்தபோது, அறையும் வாங்கி கொண்டு அம்மலாய்க்காரனின் கையை பிடித்து அம்மலாய்க்காரனின் கையை நக்கி முத்தமிட்ட  
  MIC-யின் பெருந்தன்மையை இந்த முத்துக்கிருஷ்னன் விவகாரத்திலும் காட்டி இருக்கலாம். 

 • புலி wrote on 23 ஆகஸ்ட், 2017, 11:59

  மானங்கெட்டவர்கள் , ஆண்மையற்ற அடிமைகள் ம.இ.கா , பிபிபி, ஐ.பி.எப் போன்ற பாரிசான் அடிவருடிகள், தங்களின் பலத்தை ஒரு முதியவரிடம், சமூக நன்மையை கருதி பல அரிய விவகாரங்கள் பற்றி எழுதுபவரிடம் காட்டியுள்ளனர். குறிப்பாக ம.இ.கா திருந்தாது, இன்னும் எத்தனை தலைவர்கள் வந்தாலும் அது திருந்தப்போவதில்லை, துன் சம்பந்தன் போன்ற நியாயமான, நாணயமான மனிதர்கள் அக் கட்சியை விட்டு ஒதுங்கி இருக்கவும், பல லட்சம் இந்தியர்கள் அக்கட்சியை இன்றும் புறக்கணிக்கவும் அதில் நிலவும் முஷ்டி கலாச்சாரமே காரணம். ம.இ.கா தலைவர் கையாடிய மைக்கா-டெலிகம் 90 லட்சம் பங்குகள் விவகாரத்தில் 1992 ல் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய அன்று தொடங்கி மைக்காவை மூடும்வரை பெரியவர், சின்னவர், என்ற எந்த மரியாதையும் இல்லாமல் கேள்விக் கேட்பவர்களை நைய முடைக்கும் கலாச்சாரம் அன்றைய தானைய தலைவனுடன் அழியவில்லை, அவனின் வழி தோன்றல்கள் அங்கு வேரூன்றி நிற்கும் வரை ம.இ.கா திருந்தாது என்பதனையே இது உணர்த்துகிறது.

 • en thaai thamizh wrote on 23 ஆகஸ்ட், 2017, 12:50

  ஐயா loganathan அவர்களே- நாய்களை கேவல படுத்தாதீர்கள். நாய்கள் நன்றி உள்ளவை. ஈன ஜென்மங்கள் ஈன செயல் அது. இது தமிழ் படங்களில் வரும் காட்சிகள்– நம்மவர்களின் புத்தி பல தமிழ் நாட்டு தமிழர்கள் போல் கீழ்த்தரமாக இருக்கக்கூடாது. தற்போது தமிழ் நாட்டில் நடப்பதை பார்க்கும் போது அங்கு விடிவே வருமா என்பது சந்தேகமே. நீதிமன்றத்தினால் ஊழல் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பின்பு இன்றும் அம்மா அம்மா என்று மாரியம்மன் போல் அவ்வளவு பக்தியுடன் துதி பாடி அவளை கும்பிடுவதை என்ன என்று சொல்வது என்றே தெரிய வில்லை. தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் உருட்டு கட்டை போராட்டம் தண்ணீர் போராட்டம் தின சரி போராட்டம் குடிகாரன் போராட்டம் -எண்ணில்லா போராட்டம் . அங்கு தமிழ் நாடு தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்று எவனுக்கும் அக்கரை இல்லை. எப்படி எவ்வளவு சுருட்டலாம் இவனுடன் சேர்ந்தால் கொள்ளை அடிக்கலாம் என்றே எல்லாம் நடக்கிறது. சின்னம்மா தன்னுடைய சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தில் இன்று வருகிறது. பார்ப்போம்.

 • TAPAH BALAJI wrote on 23 ஆகஸ்ட், 2017, 14:09

  வருத்தமாகவும் அதேசமயம் ஆத்திரமூட்டும் செய்தியாக இருக்கிறது. கணினி நிபுணத்துவம் பெற்ற இவரிடம்தான் நான் blog செய்வதை கற்றுக்கொண்டேன்! அந்த blog குக்கு TAPAH BALAJI என்று பெயர் சூட்டியவரும் அவரே. பழகுவதற்கு மிகவும் அருமையானவர். மிகச்சிறந்த கட்டூரையாளர். 69 வயதான ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கியது நிச்சயமாக மிருகமாகத்தான் இருக்கவேண்டும்.

 • Dhilip 2 wrote on 23 ஆகஸ்ட், 2017, 17:49

  கண்டனம் தெரிவித்தால் போதுமா ? பூனைக்கு யார் செருப்படி கொடுப்பது ? அதுவும் எப்படி ? இல்ல வழக்கம் போல வாயால வடை சுட்டுட்டு தெரியாத மாதிரி இருப்பதா ?

 • Beeshman wrote on 23 ஆகஸ்ட், 2017, 17:57

  இந்த மூன்று அம்புகளும், இவற்றை எய்தவர்களும் அரக்கர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளத் திறனற்றப் பேடிகள். கர்மவினையிலிருந்து “எப்பேர்பட்டவனும்” தப்ப இயலாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அன்பர் முத்துக்கிருஷ்ணன் விரைவில் நலமடைய ஆண்டவனுக்கு நன்றி.

 • seliyan wrote on 23 ஆகஸ்ட், 2017, 19:53

  . நாட்டில் இதுபோன்ற அநாகரிக செயல் அதிகரித்துள்ளது வருத்தப்பட வேண்டிய காலம்.

 • singam wrote on 24 ஆகஸ்ட், 2017, 8:11

  நண்பர் முத்துக்கிருஷ்ணன் ஈப்போ பெரிய மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிவிட்டார். பயப்படும்படி ஒன்றுமில்லை. வாய்ப்பகுதியில் மட்டுமே பலத்த அடி. 16 தையல்கள்.எங்களிடம் பேசும்போது சரியாக பேச முடியவில்லை. எத்தனை தடங்கல்கள் வரினும், தன் பணியை தொடர  போவதாக உறுதியளித்தார்.

 • கோவிந்தசாமி அண்ணாமலை wrote on 24 ஆகஸ்ட், 2017, 10:51

  வேதனை வெட்கம் தலைகுனிவு . தமிழருக்கு தன் மானம் இல்லையா ?
  மூத்த நிருபரை தாக்கும் அளவிற்கு தமிழன் தரங்கெட்டு விட்டானா ?

 • Dhilip 2 wrote on 24 ஆகஸ்ட், 2017, 17:43

  மலாக்கா முத்துக்கிருஷ்னன் அவருடைய தொலைபேசி என் கிடைக்குமா ?

 • singam wrote on 24 ஆகஸ்ட், 2017, 19:41

  Dhilip 2 ! நண்பர் முத்துகிருஷ்ணனால் தற்சமயம் சரியாக பேசமுடியவில்லை. சில நாட்கள் கழித்து அவருடன் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0129767462

 • Dhilip 2 wrote on 24 ஆகஸ்ட், 2017, 23:02

  நன்றி சிங்கம் அவர்களே ! 2 வாரம் கழித்து சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன் ! நன்றி நன்றி !

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 31 ஆகஸ்ட், 2017, 22:37

  எனக்கு பிடித்த மலேசியா தமிழ் எழுத்தளார்களில் இவரும் ஒருவர். மிகவும் வேதனை அடைகிறேன். சீக்கிரம் குணமடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்
  .

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: