மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் டிரம்ப் பங்கேற்க விரும்பினால், அவர் நஜிப்பை ஆதரிக்கலாம்

 

Trumpcanendorsenajibஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை அடுத்த மாதம் பிரதமர் நஜிப் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சன் இம்மாத தொடக்கத்தில் கோலாலம்பூருக்கு வருகையளித்திருந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நஜிப் எதிர்வரும் செப்டெம்பர் 12 இல் அமெரிக்க அதிபரை சந்திக்க விருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.

இது நஜிப் அமெரிக்க நிருவாகத்துடன் ஏதோ ஒரு வகையான ஒப்பந்தத்தைச் செய்திருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கு வலுவூட்டியுள்ளது

நஜிப்-டிரம்ப் சந்திப்பு குறித்து கருத்துரைத்த முன்னாள் பிரதமர் மகாதிர், “நமது பொதுத்தேர்தலில் டிரம்ப் பங்கேற்க விரும்பினால், அமெரிக்க நீதித்துறையால் (DOJ) திருடர் மற்றும் கொள்ளைக்காரர் என்று வர்ணிக்கப்பட்ட மனிதருக்கு (நஜிப்) அவர் (டிரம்ப்) ஆதரவு தெரிவிக்கலாம்”, என்று புத்ரா ஜெயாவில் இன்று அவர் கூறினார்.