காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Manikasuspendedபிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அவதூறாகப் பேசியதற்காக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் அக்கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாணிக்கவாசகத்திடம் கொடுக்கப்பட்ட இடைநீக்கம் கடிதத்தில் அவரை காப்பார் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நியமிக்கக்கூடாது என்பதற்காக ஓம்ஸ் தியாகராஜனிடமிருந்து ரிம300,000-400,000 ரொக்கமாக பெற்றுக்கொண்டதாக அன்வார் மீது குற்றம் சாட்டியிருந்ததற்காக அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஏப்ரல் 8 இல். காப்பாரிலுள்ள ஒரு கோயிலில் பேசும் போது மாணிக்கவாசகம் இதைக் கூறியதாக அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகம் இக்கடிதத்தின் நகலை அவரது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் இடைநீக்கம் கடிதம் மாணிக்கவாசகத்திற்கு கொடுக்கப்பட்டதை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.