தமிழ் மலர் உரிமையாளர், தலைமை ஆசிரியர் ‘தாக்கப்பட்டனர்; ‘அப்படி ஏதும் இல்லை’ என்கிறார் துணை அமைச்சர்

 

Dailyattacked1துணை அமைச்சர் எம். சரவணனுடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தினர் ஒரு நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் ஆகியோரைத் தாக்கியதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மஇகா தலைவர் அவ்வாறான சம்பவம் நடந்தது என்பதை மறுத்துள்ளார்.

“நான் ஒட்டுமொத்தமாக அதை மறுக்கிறேன், அவ்வாறான சம்பவம் நடக்கவில்லை.

“கடந்த இரண்டு நாள்களில், தமிழ் மலர் கூட்டரசுப் பிரதேச மஇகாவைப் பற்றி போலியான செய்திகளை வெளியிட்டுள்ளது. இன்று, சில மஇகா இளைஞர்கள் அந்தப் பிரச்சனை பற்றி விளக்கம் பெற விரும்பினர் (அந்த நாளிதழிடம்).

“அவர்கள் தெருவில் வாதிட்டுக் கொண்டனர்., அவர்கள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர் ஆனால் அது ஒரு கடுமையான தாக்குதல் அல்ல”, என்று சரவனன் மலேசியாகினியிட்ம் கூறினார்.

Dailyattacked3கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவரான சரவணன், இக்கைகலப்பு பற்றி தெரிந்து கொண்டவுடன், சம்பவம் நடந்த இடத்திற்குDailyattacked2 இன்று காலையில் வந்ததாகவும், அங்கிருந்த “அனைவரையும் வீட்டுக்குப் போகும்படி” கூறியதாவும் தெரிவித்தார்.

இரு தரப்பினரும் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதை மலேசியாகினி அறிந்துள்ளது.

செய்தியாளர் சி. கிரிஸ்ட், கோலாலம்பூரில் தமிழ் மலர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த போது, அந்த நாளிதழின் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் கே. சரஸ்வதி ஆகியோர் தாக்கப்பட்டதை அவர் கண்டதாகக் கூறிக்கொண்டார்.

“எனது முதலாளி (ஓம்ஸ்) சரவனனுடன் வாதிட்டுக்கொண்டிருக்கையில் நான் அவரை நோக்கிச் சென்றேன். அப்போது சரவணின் கூட்டத்தைச் சேர்ந்த ‘மஇகா பணிப்படை’ என்ற வாசகத்தைக் கொண்ட டி-சட்டை அனிந்திருந்த ஒருவர், எனது முதலாளியைக் குத்தினார்.

“அங்கு ஒரு சண்டை நடந்தது மற்றும் அவர்கள் எனது முதலாளியின் சட்டையைக் கிழித்தனர்.

“மற்றும் அவர்கள் எனது தலைமை ஆசிரியரின் (சரஸ்வதி) போனைப் பிடுங்கினர் ஏனென்றால் அவர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“எங்களுடைய புகைப்படக்காரர்களில் ஒருவர், பெயர் ஷான். அறையப்பட்டார். அவர்கள் அவருடைய கேமராவையும் பிடுங்கிக் கொண்டனர்.

“நடந்த சம்பவங்கள் அனைத்தும் சுமார் 30 நிமிடங்களுக்கு நடந்தன”, என்று மலேசியாகினிக்கு தெரிவித்தார். மேலும் 70 லிருந்து 80 வரையிலான இளைஞர்கள் அதில் சம்பந்தப்பட்டிருந்தனர்.

டாங் வாங்கி போலீஸ் அதிகாரி சுக்கிரி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இப்போது வாக்குமூலங்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பாதகவும் அவர் கூறினார்.

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் போலீஸ் தலைமையகத்தில் சரஸ்வதியையும் சந்தித்தார்.