நேரடிப் போட்டிகளில் பாஸுக்கு அக்கறை இல்லை- அமனா

amanahபிகேஆர்   பாஸுடன்  பேச்சு   நடத்தும்   விருப்பத்தைக்  கொண்டிருந்தாலும்  பாஸுக்கு   பிஎன்னுடன்  நேரடிப்   போட்டிகளில்    ஈடுபடுவதில்    சிறிதும்   விருப்பமில்லை   என்பதைத்   தெளிவாகவே   காட்டிக்  விட்டது  என  அமனா   நினைவூட்டியுள்ளது.

இரண்டாண்டுகளாக   பக்கத்தான்   ஹரபான்  சகாக்கள்   (பிஎன்னுடன்)  நேரடிப்  போட்டியைத்  தவிர்ப்பதற்கு   பாஸை  வளைத்துப்போட   கடுமையாக  பாடுபட்டுள்ளனர். ஆனால்,  அம்முயற்சி   நிறைவேறாததற்கு   யார்  காரணம்   என்பது   அனைவருக்கும்   தெரியும்   என   அது  கூறிற்று.

“ஹரபான்   தலைவர்     மன்றம்,  இனியும்   பாஸுடன்   பேச்சுகள்  இல்லை   என்ற  முடிவுக்கு   வந்துள்ளது.  அது   மிகவும்  சிரமப்பட்டுத்தான்   அம்முடிவுக்கு   வந்திருக்கும்.

“அது  அவசரப்பட்டோ,  தீர   சிந்திக்காமலோ   எடுக்கப்பட்ட   முடிவு  அல்ல”,  என  ஹரபான்  உதவித்   தலைவரும்   அமனா   துணைத்   தலைவருமான   சலாஹுடின்  ஆயுப்  ஓர்    அறிக்கையில்   கூறினார்.

“எல்லாவற்றையும்   பொறுமையாக   ஆய்ந்து”   செய்யப்பட்ட  முடிவுதான்  அது   என்றாரவர்.

பாஸ்  பலமுறை  வேண்டாம்  என்று  விலகிச்  சென்றாலும்   அதனுடன்   பேச்சு   நடத்த   பிகேஆர்   தொடர்ந்து   ஆர்வம்   கொண்டிருக்கிறது.

ஆனால்,  நேரம்  ஓடிக்கொண்டிருக்கிறது   என்பதை    சலாஹுடின்    ஹராபானுக்கு  நினைவுறுத்தினார்.

14வது  பொதுத்  தேர்தல்   எந்த  நேரத்திலும்    வரலாம்.  அதில்  வெற்றிபெற   உயர்த்  தலைவர்கள்  ஒன்றுகூடி  முக்கியமான  முடிவுகளை   எடுக்க   வேண்டும்   என்றாரவர்.