டையம்: மக்கள் மடையர்கள் அல்ல


டையம்: மக்கள் மடையர்கள் அல்ல

Diamமுன்னாள் நிதி அமைச்சர்   டையம் ஸைனுடின் தாம் இப்போது அரசாங்கத்தில் இருந்தால், பதவியை விட்டு விலகுவேன் என்று கூறுகிறார்.

செப்டெம்பர் 7 ஆம் தேதி இடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், “நான் அரசாங்கத்தில் இருந்தால், நான் பதவியிலிருந்து விலகக்கூடும். அது எனக்கு சுலபமானது. பதவியைத் துறந்து விட்டு, போய்த் தூங்குவேன்”, என்று அவர் கூறுகிறார்.

அந்த வீடியோ பதிவில் டயம் 1எம்டிபி விவகாரம் கையாண்ட முறை குறித்து அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். மக்களிடம் உண்மையைக் கூறுங்கள் என்று அவர் அதில் வலியுறுத்துகிறார்.

1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி பொதுவுறவு துறையில் சிறந்தவர். ஆனால், 1எம்டிபி பற்றிய மக்களின் கேள்விகளுக்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லை என்றாரவர்.

“1எம்டிபி பற்றிய பிரச்சனையைத் தீருங்கள். 1எம்டிபியில் என்ன நடக்கிறது என்று மக்களிடம் கூறுங்கள். பின்னர், கடவுள் கிருபையால் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

“நீங்கள் தொடர்ந்து மூடிமறைத்தால், மக்கள் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள்.

“இது ஒரு நெருக்கடியானது. நீங்கள் பணம் எங்கே போனது என்றுகூட கூறமுடியாவிட்டால், எப்படி மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள்”, என்று டை யம் மேலும் கூறினார்.

இது ஒரு ‘மலாய் அரசாங்கம்’

“நாம் நமது மக்களுக்கு கல்வி அறிவு கொடுத்துள்ளோம். அதனால், அவர்களை முட்டாள்கள் என்று எண்ணாதீர்கள். என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

“ஒரு பல்லின சமுதாயமாக இருப்பதால் இப்படி இருக்கிறது. மக்கள் பிளவுப்பட்டுள்ளனர். இப்போது அதிகாரத்தில் இருப்பது ஒரு “மலாய் அரசாங்கம்”. மக்கள் அதை ஒரு “மலாய் அரசாங்கமாகப்” பார்க்கிறார்கள், அம்னோவாக அல்ல.

“அதன் காரணமாக, அவர்கள் இன்னும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், இது நிரந்தரமாக நடந்துகொண்டிருக்க முடியாது, ஏனென்றால் மக்கள் மடையர்கள் அல்ல”, என்று டயம் மேலும் கூறினார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 13 செப்டம்பர், 2017, 13:35

  தாங்கள் அமீநொவோடு சேர்ந்து இந்த நாட்டைச் சுரண்டிய பொழுது மக்கள் மடையர்களாத்தானே வாழ்ந்தார்?

 • Beeshman wrote on 13 செப்டம்பர், 2017, 17:46

  போக்கிரியெல்லாம் புத்தனாகிவிடுகிறான் ! என்னய்யா இந்த பூமியில் நடந்துகொண்டிருக்கிறது ? எவனெவனோ ஞானோவுபதேசம் செய்கிறான் ! அய்யகோ, தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்போல் தோணுகிறது…..!!!

 • en thaai thamizh wrote on 13 செப்டம்பர், 2017, 19:46

  மடையர்கள் மட்டும் இல்லை– சுயநல இன மதவாதிகள்- சிந்திப்பவர்கள் குறைவே.

 • seliyan wrote on 13 செப்டம்பர், 2017, 20:14

  காக்காதீர் காலத்தில் நடந்த ஊழல் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையோ? அன்று தொடங்கிய இன வேறுபாடு அரசியல் இன்றும் தொடர்வது வெட்ககேடு. உத்தம வேஷம் மக்கள் அறிவர்.

 • seliyan wrote on 13 செப்டம்பர், 2017, 20:28

  உங்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை மடயனாகியது இன்றும் அதன் தாக்கம் உள்ளது.தனைய இந்தியர் தலைவனை கைக்குள் வைத்து இந்தியர்களை பந்தாடியது மறக்க முடியாத ஒன்று.அணைத்து உரிமைகளையும் பிடுங்கி உங்கள் சமுத்ததிற்கு தாரை வார்த்தது இன்றும் தொடர்கிறது. குனிந்த சமுதாயம் நிமிர முடியாத நிலையாக்கப்பட்ட்து இனதுவேஷம்தான். உதாரணம் தென்னிந்தியர் தொழிலாளர் நிதி களைப்பு,தமிழன் விளையிட்டு அரங்கம் பறிப்பு,கல்வி,அரசு வேலை புறக்கணிப்பு,பொருளாதாரம் முடக்கம் மற்றும் எண்ணில் அடங்காத புறக்கணிப்புகள் உங்கள் காக்காதஹீர் காலத்தில் நடந்தது.

 • S.S.Rajulla wrote on 14 செப்டம்பர், 2017, 11:16

  யாண்டா கஸ்மாலம் , தொடப்பக்கட்ட, முள்ளமாரி , வேமானி ! நீயும் ஒரு கடத்தல் காரந்தாண்டா ! கொஞ்சம் மூடுறயா ??? 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: