பீர் கொண்டாட்டம் கூடாது; ஆனால், இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் ஓகே!


பீர் கொண்டாட்டம் கூடாது; ஆனால், இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் ஓகே!

Beercelebrationசிறந்த பீர் விழா 2017 நடத்தப்படுவதற்கு டிபிகேஎல் தடை விதித்துள்ளது. இவ்விழா (Better Beer Festival 2017) எதிர்வரும் அக்டோபர் 6-7லில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாஸ் கட்சியின் உலாமா தகவல் பிரிவு தலைவர் முகமட் கைருடின் அமன் ரஸாலி இத்தடை விதிப்பை வரவேற்றுள்ளார்.

கடந்த காலத்தில் இந்த விழா அடைந்த வெற்றி 2017 ஆண்டு விழாவுக்கு வழிவகுத்துள்ளது என்று கூறிய அவர், சமூகம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதிருந்தால் எதிர்வரும் விழாவும் வெற்றி பெற்றிருக்கும் என்றார்.

இந்த விழா நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதில் அரசியல் உணர்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் டிபிகேஎல் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், மைபீர் (ம) செண்ட். பெர்ஹாட், தெரிவித்துள்ளது.

இத்தடை விதிப்புக்கு மசீசவும் டிஎபியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தடை விதிப்பை கடுமையாகச் சாடிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய டிஎபி உறுப்பினருமான ஸைட் இப்ராகிம், அவர்களுக்கு (பாஸ்காரர்களுக்கு) விழா வேண்டாம், பாடுதல் வேண்டாம் அல்லது மகிழ்வித்தல் வேண்டாம்.

ஆனால், அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் ஓகே, அதுவும் இளவயதினராக இருந்தால் இன்னும் நல்லது என்று அவர் இடித்துரைத்தார்.

அவர், மசீச என்ன செய்துகொண்டிருக்கிறது என்றும் வினவினார்.

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • TAPAH BALAJI wrote on 19 செப்டம்பர், 2017, 1:00

  நமது TOK GURU NIK AZIZ இறந்துவிட்ட பிறகு பாஸ் கட்சிக்காரனுங்களுக்கு ” காஞ்ச மாடு கம்புல உழுந்த” கதையா, புத்தி பேதழிச்சி ,ஒரு கொள்கை இல்லாமல், கட்சியை போனபோக்கில் திக்கு தெரியாமல் ஏதோ வாய்க்கு அரிசி கிடைத்தால் சரி என்று வண்டியை பாவகணக்கில் ஓட்டிக்கொண்டுபோறானுங்க.

 • மு.சுகுமாரன்  wrote on 19 செப்டம்பர், 2017, 8:54

  ம இ க !!!!!!!!!!!!!!!!!!!!!!!

 • singam wrote on 19 செப்டம்பர், 2017, 8:56

  TAPAH BALAJI சரியாக சொன்னார். அதுமட்டுமல்ல, இ….ய மத போதனை அநீதியான ஒன்று. ஆண்களுக்கு ஒரு நீதியாம், பெண்களுக்கு ஒரு நீதியாம். ஆண்கள் ரெண்டு, மூன்று, நான்கு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்ளலாமாம். ஆனால், பெண்களோ, ரெண்டு, மூணு, அல்லது நான்கு புருஷன்களை வைத்துக் கொள்ள கூடாதாம். இது அநியாயம், அநீதி. பெண்களுக்கும் சம உரிமை இ..த்தில் இல்லை. அல்தான்துயாவின் பெண்டாட்டி ரோசம்மா நம் நாட்டின் பிரதமராக வந்தால்தான், இதற்கு ஒரு தீர்வு பிறக்கும்….. 

 • en thaai thamizh wrote on 19 செப்டம்பர், 2017, 9:33

  இப்போது நடப்பதெல்லாம் ஆரம்பம் தான்– வரும் காலத்தில் அரைவேக்காடு கால் வேக்காடுகள் ஆகி பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்ட நிலையில் இந்த நாதாரிகள் இது போன்ற முட்டாள் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவர். நான் குடிகாரன் அல்ல-அதை தீவீரமாக எதிர்ப்பவனும் கூட– நம் இனம் கேடு கெட்ட குட்டிச்சுவர் ஆனதற்கு குடி ஒரு முக்கிய காரணம்– ஆனாலும் மற்றவர்களின் சுதந்திரத்தில் தலை இடுவது மக்கள் ஆட்சி முறை அல்ல– அதிலும் இந்த நாதாரிகள் பண்ணும் அநியாயத்திற்கு என்ன பதில்? தங்களின் மடத்தனத்தை மறைத்து மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர்.

 • RAHIM A.S.S. wrote on 19 செப்டம்பர், 2017, 10:01

  அதிகார துஷ்ப்பிரயோகம், லஞ்சம் வாங்குவதும் கடவுள் சித்தம் ;
  திருடுவதும், கொள்ளை அடிப்பதும் கடவுள் சித்தம் ;
  C4 வெடி வைத்து கொலை செய்வதும் கடவுள் சித்தம் ;
  தந்தை மகளை கற்பழிப்பதும் கடவுள் சித்தம் ;
  தனயன் தங்கையை கற்பழிப்பதும் கடவுள் சித்தம் ;
  தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் கடவுள் சித்தம் ;
  பீர் கொண்டாட்டம் கூடாது கடவுள் சித்தம் ;
  ஆனால் அதே பீரை மு..ம்கள் NIGHT CLUB-ல் குடிப்பதும் கடவுள் சித்தம் ;
  (அதாவது 4D MAGNUM-DA MA CAI -TOTO  போன்ற சூதாட்ட கடைகளில் இந்நாட்டின் மு..கள் பந்தயம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவதுபோல்) 
  ஒன்றுக்கு மேற்பட்ட பெண்டாட்டிகள் என்பதும் கடவுள் சித்தம் ;
  ஏனென்றால் சொர்க்கபுரிக்கு செல்லவேண்டுமாயின் இவைகளை கடைபிடிப்பது அவசியம்.
  எல்லாம்  கடவுள் சித்தம் !  கடவுள் சித்தம் !  கடவுள் சித்தம் ! 
  YA  A………. !
    

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 19 செப்டம்பர், 2017, 12:15

  இந்த பீர் விழாவை தடை விதிப்பது மிகவும் நல்லது. காரணம் ஒரு நாள் கூத்து என்று எடுத்து கொள்ளாமல் அது எந்த அளவு மற்ற இனத்தவர்களை பாதிக்கும் என்று எடுத்துக் கொள்வோம். சமிபத்தில் whatsapp பார்த்த ஒரு நிகழ்வு என்னவென்றால் சில இளைஞர்கள் பீர் குடித்து போதையில் ஒரு மதுபானம் கடையில் நாற்காலிகளை எடுத்து கொண்டு சண்டை போடுவதை பார்த்தேன். மனதிற்கு வருத்தமாக இருந்தது. நமது சமுதாயம் எங்கே செல்கிறது என்று….. அவர்களில் சிலர் குடி போதையில் கொச்சை பேசியது மனம் வருத்தமாக உள்ளது. இந்த பீர் நிறுவனங்கள் இந்த பீர் விழா கலாசாரத்தை விட்டு விட்டு வேறு விதமான நிகழ்வு நிகழ்ச்சிகள் அந்த நிறுவனங்கள் செய்தல் மக்களுக்கு சிற்ப்பாக இருக்கும். இந்த பீர் நிருவனங்ககள் தங்களின் வியாபாரம் பெருக்க இது போன்ற உக்திகள் கையாளுவது ஒன்று. இந்த பீர் விழாவில் அதிகமாக பங்கேற்க போவது நமது சமுதாயமே. சீனர்கள் மது அருந்துவார்கள் குடிப்பார்கள் இல்லை என்று சொல்லவில்லை. அனால் நம்மவர்கள் சற்று உணர்ச்சி படுபவர்கள். இதில் நாம் பாஸ் கட்சியை கொச்சை படுத்த வேண்டாம். அவர்கள் சொல்வது எல்லாம் நன்மைக்கே. நமது பிள்ளைகள் இப்போதே இந்த பீர் குடிக்கும் கலாச்சாரத்தில் அதிகமாக ஈடுபடுகின்றனர். அதுவும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் நாம் அதிகமாக பார்க்க முடிகிறது. அரசியல்வாதிகளே உங்களுக்கும் தெரியும் எது நன்மை தீமை என்று. நீங்களும் வாய் திறந்து எதாவது சொல்லலாமே. இந்த கலாச்சாரம் நான்கு சுவருக்குள் நைட்கிளப் போன்ற வற்றில் வைத்து கொண்டால் நன்மையே அது சிறப்பாகவும் இருக்கும். அனால் அது அருகாமையில் உள்ள அந்த நைட்கிளப் போன்ற அதுவும் தெரு ஓர உள்ள கடைகளில் இந்த பீர் விழாவை திறந்த வெளியில் வைப்பது சண்டை சச்சரவுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பது நன்மையே. ஒரு மூத்த அரசியல்வாதி ஸைட் இப்ராகிம் அதுவும் மக்கள் அவர் மீது நல்ல மதிப்பு வைத்து உள்ளனர். அவர் போய் இப்படி இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் என்று பேசியது ஒன்றுமே புரிய வில்லை. நன்றி

 • Beeshman wrote on 19 செப்டம்பர், 2017, 19:54

  ஜி.மோகன் அவர்களே, சிறப்பான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறீர்கள், நன்றி. நல்லவைகளை யார் மொழிந்தால் என்ன, ஏற்றுக்கொள்ளலாமே. மதுபானம் அருந்த தடையேதும் இல்லையே ? எதற்கெல்லாம் விழா எடுக்கவேண்டும் என்ற விவஸ்தை வேண்டாமா ?

 • RAHIM A.S.S. wrote on 20 செப்டம்பர், 2017, 10:20

  பீர் கொண்டாட்டம் கூடாது. ஓகே.
  மதத்தின் பெயரால் இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் அல்லது அதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பெண்டாட்டிகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும்  “பெண்டாட்டிகள் கொண்டாட்டம் 2017” நடத்தலாமே. 

 • கயவன் wrote on 20 செப்டம்பர், 2017, 18:09

  (மதத்தின் பெயரால் இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் அல்லது அதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பெண்டாட்டிகள் வைத்திருப்பவர்கள்).. இவர்கள் யாரும் விழா எடுப்பதில்லை. கயவன்

 • Beeshman wrote on 20 செப்டம்பர், 2017, 19:16

  மிக நன்றாக உரைத்திருக்கிறீர்கள் கயவன் அவர்களே ! எந்த விழாவானாலும் நன்மையே விளையுமாயின் நமக்கு மகிழ்ச்சியே. மதிகெட வைக்கும் போதைதரும் விழா அவசியமில்லையே. வாதத்தைவிடுத்து வாழ்க்கைக்குப் பயனானவற்றை சிந்திப்போமே.

 • RAHIM A.S.S. wrote on 21 செப்டம்பர், 2017, 11:26

  மதத்தின் பெயரால் இரண்டு அல்லது மூன்று பெண்டாட்டிகள் அல்லது அதற்கும் கூடுதலான எண்ணிக்கையில் பெண்டாட்டிகள் வைத்திருப்பவர்கள் இதுவரை விழா எடுத்ததில்லை. 
  “நாம் இருவர் நமக்கு இருவர்” என்பதை தகர்த்தெறிந்து 
  “நாம் நால்வர்  நமக்கு நாற்பது பேர்” என்ற மத சிந்தாந்ததோடு சாதனை படைத்து  இந்நாட்டில் வாழ்வோருக்கு  ”பெண்டாட்டிகள் கொண்டாட்டம்″ இல்லாதது பெரும் ஏமாற்றம் மட்டுமல்ல ‘MALAYSIA BOLEH” என்பதை கேலிக்குரியதாக்கி விட்டது.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: