50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு பாரிசான் அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை, சுப்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்!


50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு பாரிசான் அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை, சுப்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்!

 

-மு. குலசேகரன். செப்டெம்பர் 26, 2017

dr subraநடந்து முடிந்த 71 ஆவது மஇகாவின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிரதமருக்கு நன்றி கூறுகையில் அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்: . அதாவது அப்துல் ரஹ்மன், அப்துல் ரசாக், ஹுசேன் ஓன், மகாதீர், படாவி ஆகிய முன்னாள் பிரதமர்களில் எவரும் இந்தியச் சமூகத்திற்கு செய்யத் தவறியதை பிரதமர் நஜிப் செய்துள்ளார். அவ்வாறு கூறியதன் வழி அதற்கு முன்பு இந்தியர்கள் நலனுக்கு வேறு எந்தப் பிரதமரும் பாடுபடவில்லை என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். 1957 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து பாரிசான் அரசாங்கம் இந்தியர்களை ஏமாற்றி விட்டது என்பதை தலைவர் சுப்ராவின் வாக்குமூலமே நமக்கு தெரியப்படுதுகிறது.

இதையேத்தான் எதிக்கட்சியைச் சேர்ந்த நாங்களும் பல முறை சொல்லி வருகிறோம். அதற்கு பதிலாக, ஆளும் கட்சியாகிய நீங்கள் எங்களைக் கண்டித்தும் வசைபாடியும் வந்துள்ளீர். இப்பொழுது மக்களுக்கு நீங்களே இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள். இது மஇகாவின் சாதனை என்றால் மிகையாகது.

ஒவ்வொரு மஇகா பேராளர் மாநாட்டிலும் அப்போதையப் பிரதமரை துதிபாடுவதே மஇகா தலைவர்களுக்கு ஒரு முக்கியமான கடமையாக போய்விட்டது. சாமிவேலு காலத்தில் அவர் மகாதீரையும் படாவியையும் இந்தியச் சமூகத்தின் ரட்சகர்கள் என்பது போல கூறி வந்துள்ளார். இந்த துதிபாடும் படலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படி என்ன இந்தியச் சமூகம் நஜிப் ஆட்சியில் வளர்ச்சி அடைந்து விட்டது? எந்த ஆய்வை வைத்து தலைவர் சுப்ரா இப்படி ஆணித்தரமாக கூறுகிறார்? 1960-70களில் இந்தியர்கள் அரசாங்க துறைகளில் 17% சதவிகிதம் இருந்தார்கள். இன்று அது 4% க்கும் குறைவு. இதுதான் வளர்ச்சியா?

அன்று கடற்படை தளபதியாக தனபால சிங்கம் என்று ஒருவர் இருந்தார். இன்று அது போல் யாரும் உள்ளனரா?

அன்று ராமா ஐயர் மலேசிய விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்தார். இப்பொழுது அது போன்ற வாய்ப்புகள் இந்திய வம்சாவளியினருக்கு கிடைக்குமா? 1970களில் போலிஸ் துறையில் உயர் அதிகாரிகளில் பலர் இந்தியர்களாக இருந்தார்கள். இன்று உள்ள அனைத்து இந்திய அதிகாரிகளும் “துணை” உயர் அதிகாரி என்கிற அடைப்பொழியுடன் ஓய்வு பெருகிறார்கள். இது என்ன இந்த சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கின்றதா?

எத்தனை பல்கலைக்கழகங்களில் இந்தியர்கள் அங்குள்ள பல்வேறு துறைகளுக்கு தலைமை தாங்குகிறார்கள் ? மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைக்கு பேராசிரியர் தனராஜ் 70களில் தலைவராக இருந்தார். அதன் பிறகு ஓர் இந்தியர்கூட அவ்விடத்தை நிரப்பத் தகுதி பெறவில்லையா?

அன்று எத்தனையோ இந்தியர்கள் பல்வேறு அமைச்சுகளில் தலைமை இயக்குனர்களாகவும் தலைமைச் செயலாளர்களாகவும் பெரிய பொறுப்புகளில் இருந்தார்கள். இன்று விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இந்தியர்களாக இருக்கின்றார்கள்.

சுங்க இலாகாவிற்கு தலைமை அதிகாரியாக ஓர் இந்தியரை நியமிக்க பல எதிர்புக்களுடன் போராட வேண்டி இருந்ததாக பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளார். இதன் வழி ஒரு குறிப்பிட்ட இனத்திற்குத்தான் மலேசிய அராசாங்கத் துறைகளில் வாய்ப்பு உள்ளது என்பதனை பிரதமரே சொல்லாமல் சொல்லுகிறார். திறமை, கல்வி அடைவு நிலை, அனுபவம் இங்கே பின்தள்ளப்படுவது கண்கூடு. சுகாதார அமைச்சராக நீங்கள் இருக்கும் அமைச்சிலேயே ஓர் இந்தியரை தலைமை இயக்குனராகவோ தலைமைச் செயலாளராகவோ நியமிக்க முடியவில்லையே? ஏன்?, ஏன்?, ஏன்? இதே போல, முன்பு சுகாதார அமைச்சில் பல இந்திய மருத்துவர்கள் உயர் பதவி வகித்து வந்துள்ளார்கள். அதைக்கூட உங்களால் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லையே? ஏன்? ஏன்? ஏன்?

இந்தச் சூழலில் இந்தியச் சமூகம் முன்னேறியுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும், இல்லையா?

இந்திய வியூகத் திட்டத்தைப் பற்றி பெருமையாக பேசும் சுப்ரா, அதனை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து அதற்கு வேண்டிய சட்டப் பாதுகாப்புக் கொடுக்க முயற்சித்திருக்கவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் நாளை வேறொருவர் பிரதமராக வந்தால் இந்த வியூகத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கட்டாயம் அவருக்கு இல்லை. இந்தியர்களின் பிரச்சனைகளை எதிர்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் அறிந்திருக்கும் போது, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெறுவதில் ஏன் தயக்கம்? ஏன்? ஏன்? ஏன்?

எந்தத் திட்டங்கள் போட்டாலும், எந்தப் பிரதமர் வந்து அதனை மஇகாவின் மாசபையில் அறிவித்தாலும் அவை அரசாங்கக் கொள்கைகளாக உருமாற்றம் காணாத வரையில், அத்திட்டங்கள் செயலாக்கம் காணப்போவதில்ல என்பது மட்டும் உறுதி. இதை மஇகா இன்னும் புரிந்துகொள்ளாதது ஏன்? ஏன்? ஏன்? .

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • TAPAH BALAJI wrote on 26 செப்டம்பர், 2017, 22:49

  “எந்தத் திட்டங்கள் போட்டாலும், எந்தப் பிரதமர் வந்து அதனை மஇகாவின் மாசபையில் அறிவித்தாலும் அவை அரசாங்கக் கொள்கைகளாக உருமாற்றம் காணாத வரையில், அத்திட்டங்கள் செயலாக்கம் காணப்போவதில்ல என்பது மட்டும் உறுதி. இதை மஇகா இன்னும் புரிந்துகொள்ளாதது ஏன்? ஏன்? ஏன்? ” ம.இ.கா காரனுங்களுக்கு அதுவெல்லாம் நன்றாகவே புரியும் மு.குலசேகரன் அவர்களே! ஆனால் அதைப்பற்றி தெரியாத சாமான்ய மக்களாகிய நம்மை ஏமாற்ற ம.இகா காரனுங்களின் நரித்தந்திரம் இது !!!

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 26 செப்டம்பர், 2017, 23:34

  எல்லா பிரதமர்ககளும் எல்லோரும் நிறைய செய்து இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை…பிறகு என்ன என்று கேட்கலாம்… இருந்த நமது தலைவர்கள் எவ்வளவு சுருட்ட முடியும் என்ற என்னதுடனே இருந்தார்களே தவிர நமக்காக செய்த நன்மைகள் என்றால் அது வெறும் கேள்வி குறியே. அதிகமாக வாய்முடி தலைவர்களவும், பிரதமரிடம் கேட்டுவிட்டேன், மந்திரி சபையில் கேட்டுவிட்டேன், நாடாளுமன்றதில் கேட்பேன் என்று சொல்லியே நம்மை கட்டி போட்டு வைத்தர்கள். நாமும் நமது தலைவர்கள் நமக்காக செய்வார்கள் என்று நினைத்து இருந்தோம். அனால் வான் உயர சென்று அவர்கள் சுகமாக வாழ்ந்தார்கள், அவர்களின் குடும்ப வாரிசுகள் சுகமாக வாழ்ந்தன. இன்றைய தலைவர் சுப்ரா என்ன செய்கிறார் எதை பற்றி பேசுகிறார் என்பன ஒன்றுமே தெரிய வில்லை. அனால் பிரதமர் நஜிப் இன்னும் சற்று உயரம் சென்று இந்தியர்களுக்கு அதிகம் செய்து வருகிறார். நன்றி

 • iraama thanneermalai wrote on 27 செப்டம்பர், 2017, 8:30

  இந்த அரசியல் மாநாடு என்பது ஒரு நாடகம் .அவ்வளவுதான் . இந்த மாநாடுகளில் கொடுக்கப்பட்ட எந்த உறுதிமொழியும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மை . மாற்றுவழியில் சிந்தித்து செயல்படுவோம் . அரசியலில் இல்லாத நம் இனத்தினர் ஒன்றுபட்டு சமுதாயத்தை முன்னெடுத்து செல்வோம் .இதற்கான வழிமுறைகளை ஆராய்வோம் .அரசையும் அரசியல்வாதிகளையும் மட்டுமே நாம் நம்பி இருப்போமானால் ஏமாற்றமே மிஞ்சும் .அரசியலும் வேண்டும் நம் சமுதாய ஒற்றுமையும் வேண்டும் .

 • TAPAH BALAJI wrote on 27 செப்டம்பர், 2017, 9:11

  ஜி.மோகன் -கிள்ளான் உண்மை சொன்னீர்கள்.நன்றி.

 • RAHIM A.S.S. wrote on 27 செப்டம்பர், 2017, 9:39

  நேற்று உணவகம் (WARUNG) ஒன்றில் மஇகா கிளை தலைவரும் அவருடைய நண்பருக்கிடையே நடைபெற்ற சுவராஸ்யமான உரையாடல், இந்த  தலைப்பு செய்திக்கு மென்மேலும் மெருகூட்டும்.
  இந்த உரையாடலில் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் கொச்சையாக/அசிங்கமாக இருந்தாலும், அர்த்தம் பொதிந்தது.
  மஇகா கிளை தலைவர் ( தமிழ் ஓசை நாளிதழை கையில் வைத்திருக்கும் தனது நண்பரை பார்த்து) :
  மகாதீர் பிரதமராக இருந்தபோது இந்தியர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, திடீரென்று இப்போ இந்தியர்கள் மீது பாசம் பிறந்திருக்கிறது. 
  மஇகா கிளை தலைவரின் நண்பர் : 
  எவன் பிரதமராக இருந்தாலும் அவன் பிரதமராக பதவி வகிக்கும் இறுதி நிமிடம்வரை அவன் சு……யை ஊம்புறது,
  அவன் பதவி விலகி மற்றொருவன் அப்பதவிக்கு வந்ததும், முன்னாள் பிரதமர் சு……. ஊம்புவதற்கு நல்லா இல்லை,
  புதுசா வந்த  பிரதமர் சு….. தான் ஊம்புவதற்கு நல்லாயிருக்குனு பல்லவி பாடுறதே ஒரு பொழைப்பா போச்சு உங்க மஇகா-வுக்கு.
  மஇகா கிளை தலைவர்  :
  என்னப்பா இப்படி அசிங்கமா பேசுறே   
  மஇகா கிளை தலைவரின் நண்பர் :
  அப்புறம் என்ன ? மகாதீர் அவருடைய 22 ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தவறியவர் என்பதை மறுக்கவில்லை. 
  ஆனால் எதோ கொஞ்சம் நஞ்சம் இந்திய சமுதாயத்திற்காக அவர் ஒதுக்கீடு செய்த TELEKOM/TNB/T3 பங்குகளாவது இந்திய சமுதாயத்தை சென்றடைந்தா ?  
  இந்நாட்டின் இந்திய சமுதாயம் என்றால் மஇகா மட்டும்தான் என எல்லா ஒதுக்கீட்டையும் ஊம்பி மவுடீச்சிட்டு இப்ப மகாதீரைகுற்றம்   சொல்ல வந்துடீங்க. இந்த பொழைப்பு பொழைக்கிறதைவிட வீட்டிலுள்ள பொம்பளைகளை கூட்டி கொடுத்து பொழைப்பு நடத்துவது BETTER.
  உணவகத்தில் இருந்த சில இந்தியர்கள் இவர்களின் உரையாடலை கவனித்து கொண்டிருந்த காரணத்தினால், மஇகா கிளை தலைவர் வெளிறிய முகத்தோடு உணவகத்தை விட்டு வெளியேறினார்.

 • abraham terah wrote on 27 செப்டம்பர், 2017, 10:21

  மகாதீர் காலத்தில் அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இப்போது எதிர்க்கட்சிகள் அவரை பிரதமராக்க முயற்சிக்கின்றனர். ஆக, இவர்கள் பதவிக்கு வந்தாலும் இந்தியர்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆனால் தெரிந்த பிசாசே பதவியில் இருந்துவிட்டுப் போகட்டுமே!

 • Siva wrote on 27 செப்டம்பர், 2017, 12:26

  அனைவருக்கும் அரசிய கல்வி, சட்ட கல்வி அவசியம் வேண்டும்… நமது உரிமை என்பது கேட்டு வருவது அன்று, நாமே எடுத்து கொள்வது… அரசியல் வாதிகளை குறை கூறும் நாம் அதே பொறுப்பை ஏற்று வாழ்ந்தால் தன தெரியும் அதன் கடினம்… ஆகவே அனைவரும் சேர்த்து பங்களிப்போம்.. நன்றி..

 • ka. kalaimany wrote on 27 செப்டம்பர், 2017, 12:29

  துதி பாடுவது மட்டுமே எங்கள் கொள்கை. கேள்வி கேட்டால் ஆள் வைத்து நொறுக்கி விடுவோம்

 • Dhilip 2 wrote on 27 செப்டம்பர், 2017, 16:14

  ஐயா அறிவு ஜீவிகளா, மகாதீர் இந்தியர்களுக்கும் இந்த நாட்டில் சொத்துடமை வேண்டும் என்பதற்காக TV3 SIME DERBY MCRP TNB அண்ட் TELEKOM பங்கு பரிவர்த்தனை பாகம் 150 மில்லியன் தந்ததை , சாமி வேலு மற்றவர்களிடம் விற்று , அப்படியே சோலையாக மா இ கா வில் தூக்கி போட்டு கொண்டதை மறந்தீர்களா ? இன்று 3 கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில் , அதுவும் சிறுபான்மை 7 % கொண்ட மக்களின் ஒரு கட்சி 1200 மில்லியன் மலேஷியா பணம் வைத்துள்ளது என்பது , வியப்பாக இல்லையா ?

 • s.maniam wrote on 27 செப்டம்பர், 2017, 18:22

  குலசேகர உனக்கு குறும்பு அதிகம் !! நாலு காசு பாக்கனும் ! குட்டியோடையும் ! புட்டியோடையும் சுகுசு காரில் நச்சத்திர ஹோட்டலில் என்ஜோய் பண்ணனும் என்று அரசியலுக்கு வருபவனை பார்த்து இது என்ன அசிங்கமான கேள்வி ! ஏன் ? ஏன் ? ஏன் ? நீர் கேட்க்கும் கேள்வியை நாங்களும் கேட்டால் உம்மை போல எதிர் கட்சியில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் ! எங்களுக்கு டத்தோ !டத்தோஸ்ரீ ! டான்ஸ்ரீ ! துன் ! எல்லாம் வேண்டும் ! மானியம் வேண்டும் ! பதவியில் இருக்கும் பிரதமருக்கு அடி வருடினாள் தான் அது கிடைக்கும் என்றால் ! வி ஆர் ரெடி போர் எவரிதிங் !! அன்று நாங்கள் இந்த நாட்டில் வெள்ளையனுக்கு ஜஞ்சி கூலிகள் ! இன்று ஆளும் அரசாங்கத்தின் அடிமைகள் ! பதவிக்கும் ,பணத்திற்கும் ! கேக் ஊட்டுஉம் ! கையை முத்தமிடுயோம் ! எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும் ! அமாம் நீர் என்ன MGR ரின் வாரிசா ! ஏன் ! ஏன் ! ஏன் ! இத்துணை ஏன் !

 • seliyan wrote on 30 செப்டம்பர், 2017, 20:47

  சுப்பனோ குப்பனோ யார் ஆட்சியில் இருந்தாலும் ஏமாந்த சமூகமாக இருக்க போவது இந்தியர்களே. 100 ஆண்டு ஆனாலும் இந்திய சமூகத்தின் தலை எழுத்து மாறப்போவது இல்லை உரிமையை அறியாதவறை.

 • gygfguijopkioj wrote on 11 அக்டோபர், 2017, 15:35

  நான் பேசித்தேன் பி ம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டார் என்று சொல்லியே தமிழ் மக்களை ஏமாத்திட்டிங்கை பாவிகளே n

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: