வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு

northkதனது நாட்டின் மீது போர் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது.

அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களை சுட்டுத்தள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று வட கொரியா கூறியதையடுத்து, தேவையற்ற தூண்டுதல்களை நிறுத்துமாறு அந்நாட்டிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீற்றமான பேச்சு அபாயகரமான தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நாவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கொரிய பகுதியில் தற்செயலாக ஏற்படும் மோதல் திடிரென கட்டுப்பாட்டை மீறி செல்லலாம் என்று எச்சரித்துள்ள தென் கொரியா, வட கொரியாவுடன் ஒரு சுமூகமான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்”

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய வட கொரியா அமைச்சர் ரி யங்-ஹோ, தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள் வராவிட்டாலும் கூட இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா தொடர்பாக போர் பிரகடனம் என்ற வார்த்தையை வடகொரியா பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

வடகொரிய அதிபரும், ரியும் தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருந்தால், அவர்கள் நீண்ட காலம் நீடித்திருக்க மாட்டார்கள் என்று அதிபர் டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரிய அமைச்சர் பேசியுள்ளார்.

அமெரிக்காதான் முதலில் போரை அறிவித்திருக்கிறது என்பதை இந்த உலகம் தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ரி கூறியுள்ளார். -BBC_Tamil