வங்கதேச படகு விபத்தில் 63 மியான்மர் ரோஹிஞ்சாக்கள் பலி?

மியான்மர் நாட்டில் வன்முறைக்குள்ளான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சென்ற படகொன்று வங்கதேச கடற்பகுதியில் கடலில் மூழ்கியதில் 63 பேர் இறந்ததாக நம்பப்படுகிறது.

சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜோயல் மில்லமான், இருபத்தி மூன்று பேர் இறந்ததாகவும் மற்றும் நாற்பது பேர் காணாமல் போயுள்ளனர் என்று கருதப்படுவதாகவும் கூறினார்.

வங்கதேசத்திற்குள் நுழைய முயன்றபோது ஏற்கெனவே டஜன் கணக்கான ரோஹிஞ்சாக்கள் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா போராளிகள் காவல் சாவடிகளைத் தாக்கியதை அடுத்து அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்தது.

பெரும்பாலும் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் வெறுக்கப்பட்டு, குடியுரிமை மறுக்கப்பட்டதால் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வங்கதேசத்திற்கு புலம் பெயர்ந்துள்ளனர். -BBC_Tamil