அமனாவின் காலிட் சமட் ஜோகூரில் போட்டி

14வது  பொதுத்   தேர்தலில்   அமனா   கட்சி    ஷா  ஆலம்  எம்பி  காலிட்  சமட்டை  ஜோகூரில்  களமிறக்க  முடிவு   செய்திருப்பதை    அக்கட்சித்  துணைத்    தலைவர்   சலாஹுடின்  ஆயுப்  இன்று  உறுதிப்படுத்தினார்.

காலிட்,   அவரின்  தமையனாரான   பெல்டா   தலைவர்  ஷாரிர்  சமட்டுக்கு    எதிராக    ஜோகூர்  பாரு  நாடாளுமன்றத்  தொகுதியில்   களமிறக்கப்படும்   வாய்ப்புள்ளதையும்   ஜோகூர்  பக்கத்தான்  ஹரபான்   தேர்தல்  இயக்குனரான  சலாஹுடின்  மறுக்கவில்லை.

“ஜோகூரில்  எங்கள்  வேட்பாளர்  பட்டியலை   வலுப்படுத்த    காலிட்  சமட்டை   ஜோகூருக்குக்   கொண்டுவரும்   நடவடிக்கையில்   ஈடுபட்டுள்ளதை   நான்  மறுக்கவில்லை.

“மற்ற  (ஹரபான்)  கட்சிகளும்  அவற்றின்   தலைவர்களை  ஜோகூரில்  களமிறக்குவது   தொடர்பில்   ஆலோசித்து   வருகின்றன”,  என்றும்   அவர்   தெரிவித்தார்.