ஜமால் சிலாங்கூர் செயலகத்துக்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கினார்


ஜமால் சிலாங்கூர் செயலகத்துக்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கினார்

சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்   மறுபடியும்   சிலாங்கூர்    அரசுக்கு     எதிராக  போர்க்  கொடி   தூக்கினார்.

இன்று  காலை   அவர்  சிலாங்கூர்  செயலகக்  கட்டிடடத்துக்கு    வெளியில்   பெட்டிகளில்   பீர்  போத்தல்களை  நிரப்பி  வைத்து   ஒரு  சம்மட்டியால்   அடித்து   நொறுக்கினார்.

“குடிக்க   விரும்பினால்,  (சிலாங்கூர்  மந்திரி   புசார்)  அஸ்மின்   அலியும்  அவரது   கூட்டமும்  எக்ஸ்கோக்களும்   அவர்களின்  அலுவலகங்களிலேயே  குடிக்கட்டும்,  குடித்து  மயங்கிப்   போதையாகட்டும்.

“ஆனால்   பீர்  விழாக்களில்  சிலாங்கூர்  மக்கள்  குடித்துக்  கூத்தடிப்பதற்கு   இடமளிக்கக்  கூடாது.

“சிலாங்கூர்  மக்கள்  குடித்துக்  கூத்தடிப்பதைத்தான்     எம்பி (மந்திரி  புசார்)   விரும்புகிறாரா? (விழாக்களை) இரத்துச்  செய்யுங்கள்”,  என்று  ஜமால்  கூறினார்.

கோலாலும்பூரிலும்   சிலாங்கூரிலும்   பீர்  விழாக்களுக்கு    எதிர்ப்பு  கிளம்பியுள்ளது.

கிள்ளான்  முனிசிபல்  மன்றம்   அண்மையில்,  கிள்ளானில்  ‘ஜெர்மன்  எப்&பி  விழா’  நடத்த   அனுமதி   அளித்தது.  அதில்   மதுபானமும்  உண்டு  எனத்   தெரிகிறது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • vin???vin??? wrote on 5 அக்டோபர், 2017, 13:14

  பொதுவிடத்தில் இவனின் அட்டகாசம் , நாட்டின் மைந்தன் என்ற கர்வம் , இது குண்டர்தனம் தானே . போலீஸ் இவனை தண்டிக்குமா ?

 • Beeshman wrote on 5 அக்டோபர், 2017, 13:41

  இந்தக் கோமாளி ஒரு விளம்பரப் பிரியன்.

 • s.maniam wrote on 5 அக்டோபர், 2017, 14:07

  பீர் போத்தலை உடைப்பதை நிறுத்தி விட்டு ! ஷா அலாமில் செயல் படும் கால்ஸ் பெர்க் பீர் தொழிற் சாலையை இழுத்து மூட சொல்லுங்கள் ! அது அறம் இல்லையா ! சுங்கை வேய் யில் உள்ள கின்னஸ் தொழிற் சாலையை மூடுங்கள் !! போங்கடா பொழப்பில்லாத முட்டாள் பசங்களா !

 • ஜி. மோகன்- கிள்ளான் wrote on 5 அக்டோபர், 2017, 15:34

  இது ஒரு மாநிலத்திற்கே சவால் விடும் செய்கை இது… இவர் செய்தது….. இதை இவர் தவிர்த்து இருக்கலாம். மக்களை இவர் இன்னும் முட்டாள் என நினைத்து இருக்கிறார் போலும். இவருக்கே தெரியவில்லை இவரின் கேவலமான முட்டாள் செயல் என்று
  . பல கேள்விகள் வருகின்றன. நம் நாட்டில் மது குடிப்பது தடை செய்ய பட்டு இருக்கிறதா?. இல்லையே… அது அவரவர் விருப்பம். உண்மையாக கூற வேண்டும் என்றால் அரசாங்க அனுமதியுடன் தான் மது கடைகள் இருக்கின்றன. அப்படி பார்த்தால் அரசாங்கம் அக் கடைகளை மூடி விடலாமே. நம் நாடிற்கு அது தேவை இல்லை என தெரியும் போது…… அடுத்து, மதுபான நிருவனங்ககள் அரசாங்க அனுமதியுடன் அந்த மதுபானங்களை தயாரிக்கின்றன. அதை குடிப்பவர்கள் மீது அத்து மீறி நடவடிக்கை எடுக்க சொல்வது இவர் யார். பொதுவாக சுதாட்ட மையங்கள் நம்பர் கடைகள் அரசாங்கம் ஒரு சில மற்ற
  மாநிங்களில் தடை விதித்துள்ளது. அங்கே, அந்த மாநிங்களில் மது கடைகள் இல்லை. என்னை கேட்டால் இதை தடை விதிப்பது நன்மையினும் குடிப்பது அவரவர் விருப்பம். நம்மவர்களிடம் இந்த
  பீர்
  விழாக்களில்
  போதையில் சண்டை சச்சரவுகள் வராமல் இருந்தால் சரி அது நன்மையே. நன்றி

 • seerian andy wrote on 5 அக்டோபர், 2017, 20:09

  உண்மையான அம்னோக்காரன் என்றால் அவன் தலைவன்களிடம் மதுபான தொழிற்சாலைகளை மூடச்சொல்லி மாநில சுல்தானிடம் மனு கொடுக்க வேண்டியதுதானே அதை விடுத்து இந்த தெரு பொறுக்கி பணத்துக்காக விளம்பரத்திற்காக செய்றான் அதையும் காவல் துறையும் கைகட்டி சிரிக்கிறது. தைரியம் இருந்தால் சுல்தானிடம் போய் சொலுங்கடா….

 • en thaai thamizh wrote on 5 அக்டோபர், 2017, 20:11

  இவனைப்போன்ற நாதாரிகள் இது போன்றவற்றை தான் செய்ய முடியும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நம்பிக்கை நாயகனின் 2 .6 பில்லியன் விளையாடுகிறது.

 • vethian wrote on 6 அக்டோபர், 2017, 9:31

  இந்த மட சாம்பிராணி இப்படி செய்தும் இவனுக்கு வக்காலத்து வாங்க சிலர் இருப்பது வேடிக்கை . ஆமாம் அங்கே உடைத்தது பீர் போத்தலா அல்லது வெறும் தண்ணீரா ? ஜமாலுக்கு பீர் பிடிக்காது ஆனால் பீர் வாசனை பிடிக்கும் போல் தெரிகிறது . பொது இடத்தில் இப்படி பீர் வாசனை வர முட்டாள் தனமான காரியம் செய்த இவன் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 • RAHIM A.S.S. wrote on 6 அக்டோபர், 2017, 11:06

  அம்னோ அழிவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது என்பதை ஜமால்-BELACHAN செய்கை உணர்த்துகிறது.

 • RAHIM A.S.S. wrote on 6 அக்டோபர், 2017, 11:41

  அட போங்கப்பா !
  நாட்டையே தேவடியா வீடுபோல ஆக்கிவிட்டார்கள்
  இந்த  லட்சணத்துல பீர் போத்தலை உடைச்சா என்ன ?
  குடிச்சா என்ன ? எல்லாம் ஒன்றுதான்.
  இந்த நாட்டுலதான் அதிசயமா பேசுறானுங்க,
  முஸ்லீம் நாடான துருக்கியிலே முஸ்லீம்கள் வெட்டவெளியிலே
  பீர் குடிக்கிறானுனுங்க,
  வீட்டுல நாய் வளர்க்குறானுங்க,
  அவ்வளவு ஏன் பன்றி இறைச்சியைக்கூட சாப்பிடுறானுங்க
  எவனும் பெரிசு படுத்துறதில்லை. 

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: