தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை நடிகை ராதிகா ஆப்தே புகார்


தென்னிந்திய பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை நடிகை ராதிகா ஆப்தே புகார்

மும்பை, சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ் பட உலகிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை சிலர் படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவும் தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே தமிழில் டோனி, வெற்றிச்செல்வன், கபாலி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பட உலகில் அதிக படங்கள் கைவசம் வைத்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படங்களில் அவர் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்னிந்திய பட உலகம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“தென்னிந்திய பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலைமைகள் உள்ளன. நான் ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். படம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தோம். அவர் திடீரென்று என்னை படுக்கைக்கு அழைத்தார். இதனால் அதிர்ச்சியானேன்.

நான் அந்த மாதிரி நிலைமைக்கு போகவில்லை. அப்படிப்பட்டவர்களை உதாசினம் செய்து விட்டேன். அதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் எனக்கு அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்று கருதுகிறேன்.”

-dailythanthi.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: