50 வருட வளர்ச்சி ஒரே வாரத்தில் போச்சு, 2.5 லட்சம் மக்கள் ஓட்டம்! கதறடிக்கும் கலிபோர்னியா காட்டுத் தீ


50 வருட வளர்ச்சி ஒரே வாரத்தில் போச்சு, 2.5 லட்சம் மக்கள் ஓட்டம்! கதறடிக்கும் கலிபோர்னியா காட்டுத் தீ

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடரும் காட்டுத் தீ. மொத்த நகரத்தையே தீக்கு இரையாக்கியது.

சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய இந்தத் தீ நகரம் முழுக்க பரவியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, பத்து பேராக இருந்த மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகி அதிகரித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாகும். ஆனால் இது கலிபோர்னியா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரிய காட்டுத் தீ ஆகும்.

கலிபோர்னியாவில் காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது. வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது . முக்கியமாக கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் இது போன்ற காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இந்த முறை அங்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை அளிக்க ஒரு டிவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு வாரமாக இருக்கும் காட்டுத் தீ

ஒருவாரத்திற்கு முன்பு ஏற்பட்ட திடீர் காட்டுத் தீ அங்கு தொடர்ச்சியாக இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு வரை 14 காட்டுத் தீக்கள் அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது 25க்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி கலிபோர்னியா நகரம் மொத்தத்தையும் சூறையாடியுள்ளது. இதனால் ஒரு வாரத்தில் நகரத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் மொத்தமாக அழிந்துள்ளது.

கலிபோர்னியாவின் தற்போதைய நிலை

இந்த ஒரு வாரத்தில் இதுவரை லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ளது இந்தக் காட்டுத் தீ. நகரத்தில் இருக்கும் பல மருத்துவ மனைகளை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தையும் சூறையாடி உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை ஒன்றும் வெடித்தது. அந்த மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் டேங்குகளே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் கலிபோர்னியாவின் கடந்த 50 வருட வளர்ச்சியை ஒரே வாரத்தில் இந்தத் தீ அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்த மரணம்

இந்தத் தீ விபத்தால் இது வரை 2,50000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் 30 பேர் தீயிற்கு இரையாகி பலியாகியுள்ளனர். மேலும் 1000 கணக்கானோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதுவரை 800 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. கலிபோர்னியாவின் மொத்த செயல்படும் நின்று போய் உள்ளதால் இது குறித்த தகவல் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும்.

கலிபோர்னியாவின் நிலை மோசமாகும்

இந்த நிலையில் கலிபோர்னியாவின் தீயணைப்பு துறையும் , வானியல் துறையும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்க அரசாங்கத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதன்படி கலிபோரியாவில் ஏற்பட்ட தொடர் தீயால் தற்போதும் அவர்கள் மொத்த சூழநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைந்துள்ளதாம் , இதையடுத்து அந்தப் பகுதியில் பருவநிலை திடிரென்று மாறும் எனப்படுகிறது. இது ஏற்கனவே பாதிக்கபப்ட்டிருக்கும் கலிபோர்னியாவுக்கு நல்லதல்ல என கூறப்படுகிறது.

tamil.oneindia.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: