பிரபல தாதா ஸ்ரீதரின் உடல் சென்னை வந்தடைந்தது; பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட பிரபல காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் உடல் இன்று சென்னை வந்தது.  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பிரபல தாதாவும் காஞ்சிபுரம் சாராய வியாபாரியுமான ரவுடி ஸ்ரீதர்,  கொலை மற்றும் கொலைமுயச்சி, ஆட்கடத்தல், கொலைமிரட்டல் போன்ற 43 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்.  போலீசாரிடம் சிக்காமல் இருக்க போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் என மாறி மாறி சென்று கடைசியாக கம்போடியாவில் கடந்த நான்கு வருடங்களாக  தலைமறைவாக இருந்துவந்தான்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 4 -ஆம் தேதி தாதா ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதாக அவனது வழக்கறிஞர் புருஷோதமனுக்கு தகவல் வர, அந்த தகவலை காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி ஸ்ரீதர் உறுதி செய்தார், உடனே தனது வழக்கறிஞர்களுடன் கம்போடியா விரைந்த ஸ்ரீதரின் மகள் அங்கு மருத்துவமனையில் இருந்த ஸ்ரீதரின் உடலை அடையாளம் காட்டினார்.  ஸ்ரீதரின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவரமுடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. ஸ்ரீதர் தங்கியிருந்த அறையில் கம்போடியா போலீசார் கைபற்றிய பாஸ்போர்ட்டு இலங்கையை சேர்ந்த போலி பாஸ்போர்ட்டு என்பதால் அவன் உடலை சொந்த ஊரான காஞ்சிபுரம் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

ஸ்ரீதரின் உடலை கொண்டுவர அவனது அங்க அடையாளங்களையும் கைரேகையுடன் கொண்ட பிரேதபரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கை கடிதம் அனுப்பவேண்டும். அதை மாநிலஅரசு மத்திய வெளியுவுத்துறை பரிந்துரை முலம் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டுவர முடியும். ஆனால் மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி ஆகியோரின் கோரிக்கை கடிதம் இருவரும் மறுக்கவே உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரின் மகள் ரிட்மனு தாக்கல் செய்யவே,  கடந்த செய்வாய்கிழமை விசாரணைக்கு வந்த வழக்கில் உடனடியாக மத்திய, மாநில பரிந்துரை கடிதம் அளிக்கவும் நீதிபதி எம்.ரமேஷ் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஸ்ரீதரின் மகள் தக்க ஆவணங்களை கம்போடிய அரசிடம் ஒப்படைத்து இறந்து போனது காஞ்சிபுரம் ஸ்ரீதர் அவரது அப்பா என்பதை நிருபனம் செய்தபின் கம்போடிய அரசு ஸ்ரீதரின் உடலை ஒப்படைத்தது.

இதையடுத்து ஸ்ரீதரின் உடல் 15:10:2017 ஞாயற்றுகிழமை காலை 11 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. சர்வதேச சரக்ககத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில  ஆவணங்கள் கஷ்டம்சில் ஒப்படைக்கப்படாத காரணத்தால் இரவு 7 மணியளவில் அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டபின் பிணத்தை விமானநிலைய கார்கோ அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் உடலை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ பரிசோதனை செய்து முடிப்பதற்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.  பரிசோதனைகள் முடித்தபின் ஸ்ரீதரின் உடல்  குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.

ரவுடி ஸ்ரீதர் இரண்டு மாதகாலமாகவே தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வழக்கறிஞர் புருஷோத்தமனிடம் கூறிவந்ததாகவும், அதே போல கடந்த 4 ஆம் தேதியும் கூறியதால் சும்மா போதையில் உலறுவதாக நினைத்து போனை கட் செய்ய, பிறகு சற்று நேரம் கழித்து போன் செய்ததில் ஸ்ரீதரின் சமையல்காரன் தேவேந்திரன் போனை எடுத்ததாகவும், ஸ்ரீதர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும்  போலீசார்,  அமலாக்கத்துறையினர் தொடர்ந்து குடும்பாத்தாரிடம் துருவித்துருவி விசாரணை செய்துவந்ததால் ஸ்ரீதரை குடும்பத்தாரே சரண்டர் ஆக சொன்னதாகவும், மேலும் அமலாக்கத்துறையின் கணக்கில் சிக்காத சொத்துக்களும் உள்ளதாகவும் அதற்காக குடுப்பத்தாரே இந்த மரணத்திற்கு காரணமாகியிருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமையல்காரன் தேவேந்திரன் ஸ்ரீதர் விஷம் அறுந்தி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளார். அதே போல வழக்கறிஞர் புருஷோத்தமனிடம் தற்கொலை செய்து கொள்வதாக சொன்ன ஸ்ரீதரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் மாரடைப்பு என்று அறிக்கையில் கூறியுள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் காஞ்சிபுரம் பஸ்நிலையம் எதிரே பிரபல ஜவுலி நிறுவனத்துக்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கி தரும் டீலிங்கில் அமலாக்கத்துறை சீல் வைத்ததால் ஸ்ரீதருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாமோ ..!அல்லது மாரடைப்புக்கான காரணம் காஞ்சிபுரம்  துணிக்கடைக்கும் ஸ்ரீதருக்கும் இருந்த விவகாரமாக இருக்குமோ என்றும் அல்லது பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மனோவிடம் ஸ்ரீதர் பெரும்மதிப்புடைய சொத்துகளை ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அதன் காரணமாக இருக்கும்மோ என்று ஸ்ரீதரின் நெருங்கிய வட்டாரம் பேசுகிறது.

-அரவிந்த்

TAGS: