ஸாகிட்: மியன்மாரின் விவகாரங்களில் தலையிடுவது மலேசியாவின் நோக்கமல்ல

 

ரோஹிஞா இன மக்களின் அவலநிலை குறித்து மலேசியா தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால், மலேசியாவுக்கு மியன்மாரின் உள்விவகாரங்களில் தலையிடும் நோக்கம் இருந்ததே இல்லை என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

மலேசியா அது குறித்து பேசிவதற்கான காரணம் சூழ்நிலை இப்போது ஒரு மனிதாபிமான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஸாகிட் கூறினார். பங்களதேஷ், கோக்ஸ் பஜாரிலுள்ள ரோஹிஞா அகதிகள் முகாமிற்கு அவர் மேற்கொண்ட வருகை இது ஒரு நிலைத்திருக்கிற பிரச்சனை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.

இப்பிரச்சனையை பங்களதேஷ் தனியாக கையாண்டிருக்க முடியாது. மலேசியா போன்ற நாடுகளின் தலையீடு அவசியமாகிறது. இந்த மனிதாபிமான பிரச்சனையை வட்டார நாடுகளின் ஒத்துழைப்பின் வழி தீர்க்கப்பட வேண்டும் என்று மலேசியா கருதுவதாக ஹமிடி கூறினார்.