இந்தியர் வாக்குகள் பிஎன்னுக்குத் திரும்பாவிட்டால் அது நஜிப்பின் தவறல்ல- கேவியஸ்

மைபிபிபி   தலைவர்  எம்.கேவியஸ்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்  இந்திய    சமூகத்தின்   ஆதரவு   மீண்டும்   பிரதமர்   நஜிப்   அப்துல்    ரசாக்குக்குத்   திரும்பும்   என்று   நம்புகிறார்.

அது   நடக்கும்,    அப்படி   நடக்காவிட்டால்    அதற்கு   நஜிப்   காரணமாக  இருக்கமாட்டார்.  அவர்   இந்திய   சமூகத்துடன்  இணைந்து    பணியாற்றும்   பொறுப்பை   யாரிடம்   ஒப்படைத்தாரோ     அவர்களே   அதற்குக்   காரணமாக   இருப்பார்கள்   என்றாரவர்.

“இந்திய    சமூகம்    பிஎன்னுக்கு    முழு     ஆதரவை     அல்லது     இதற்குமுன்    அளித்ததைவிட     கூடுதல்    ஆதரவை    வழங்கும்   என்றே   நினைக்கிறேன்.   ஏனென்றால்,   நஜிப்   இந்திய    சமூகத்தின்மீது   முழுக்  கவனம்  செலுத்தி   வந்துள்ளதார்.

“அதற்கெல்லாம்  நல்ல  பலன்  இல்லையென்றால்   அது   அவரது(நஜிப்பின்)    தவறல்ல,    அவருக்குக்    கீழ்     உள்ளவர்கள்,    அவர்   யாரை    நம்பினாரோ     அவர்களின்   தவறு…..

“அவருக்காக   இந்தியர்கள்   முழு    ஆதரவைக்   கொடுப்பார்கள்…….ஏனென்றால்  முற்றிலும்   கைவிடப்பட்ட   நிலையில்   இருந்த   இந்தியர்களிடம்   கருணை   காட்டியவர்   அவர்”,  என  63-வயது    கேவியஸ்   மலேசியாகினி   நேர்காணல்  ஒன்றில்   கூறினார்.

ஆண்டுத்    தொடக்கத்தில்   நஜிப்,   மலேசிய   இந்தியர்    செயல்திட்டம் (எம்ஐபி)  ஒன்றைத்   தொடக்கினார்.

அச்செயல்  திட்டம்    இந்நாட்டு    இந்தியர்கள்   எதிர்நோக்கும்    சமூகப் பொருளாதார இன்னல்களுக்குத்  தீர்வு   காணும்  நோக்கம்   கொண்டது   என்று  கூறப்படுகிறது.

ஆனால்,  எதிர்க்கட்சிகளும்   மற்றும்   சில    தரப்பினரும்    அது   14வது   பொதுத்   தேர்தலுக்கான   ஒரு  பிரச்சாரக்   கருவி   எனக்  கூறுகின்றனர்.