ஹாடி: ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும் ஒரு வாக்காகும்

பாஸ் கட்சிக்கு அளிக்கும் ஒரு வாக்கு பிஎன்னுக்கு அளிக்கும் ஒரு வாக்காகும் என்று மகாதிர் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாக, ஹரப்பானுக்கு அளிக்கும் ஒரு வாக்கு மகாதிரின் கொடுமைக்கு அளிக்கும் வாக்காகும் என்று இஸ்லாமியக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சினார் ஹரியானிடம் கூறினார்.

மகாதிர் செய்த தவறுகளுக்காக இரங்க வேண்டும், ஏனென்றால் அவர் தேசிய அமைவுமுறைகளை சிதைத்து விட்டார், மலாய்-முஸ்லிம்கள் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாடு ஆகியவற்றின் உரிமைகளையும் அதிகாரங்களையும் குறைத்து விட்டார், கோணலான ஜனநாயக முறையைப் பின்பற்றினார் மற்றும் நாட்டை சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

அவர் இக்குற்றங்களை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேரவில்லை. மாறாக, தமது தவறான செயல்களை அவர் தற்காக்கிறார். இதிலிருந்து மலேசியாவைக் காப்பது என்பதில் அவர் நேர்மையாக இல்லை. .

“அவருக்கு வேண்டியதெல்லாம் நஜிப்பை வீழ்த்த வேண்டும். இதன் உண்மை, டிஎபி, பிகேஆர், அமனா அல்லது பெர்சத்துக்கு அளிக்கும் ஒரு வாக்கு, மகாதிரின் கொடுமைக்கு ஒப்புதல் அளிப்பதாகும் என்று ஹாடி மேலும் கூறினார்.