பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு “ஆளை”, நஜிப் சாடினார்

 

பட்ஜெட் 2018: இன்று பட்ஜெட் 2018 ஐ தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் நஜிப் அவரது திறப்பு உரையில் பூகிஸ் சமூகத்தை அவமதித்த ஒரு “ஆளை” சாடினார்.

நாம் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த “ஆள்” எப்படி பூகிஸ் மூதாதையர் மரபை அவமதிக்கலாம் என்று நஜிப் வினவினார்.

ஆனால், அது ஓகே. எது முக்கியமானது என்றால் நாம் தொடர்ந்து பெருந்தன்மையுடையவர்களாக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற பாரிசான் நேசனல் உறுப்பினர்களின் ஆரவாரத்திற்கிடையே நஜிப் கூறினார்.

கெடா மாநில் கவிதை ஒன்றைக் குறிப்பிட்டு கெடா மக்கள் நல்லவர்கள், ஓரிருவரைத் தவிர்த்து, அவர்கள் சுலபமாக மறந்து விடுவார்கள் என்று நஜிப் மேலும் கூறினார்.

“ஆனால், பிஎன் அரசாங்கம் நேர்மையானது. அது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கிறது. நீங்கள் காத்துக் கொண்டிருந்த பட்ஜெட் இதுதான்”, என்றார் நஜிப்.

நஜிப் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் மகாதிரையும் அவர் முன்பு கூறியிருந்த “மூடா லூப்பா” என்ற சொற்களையும் சுட்டுகிறார் என்பது தெளிவாகும்.

கடந்த வாரம், கெடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் நஜிப்பின் மூதாதையர் பூகிஸ் கடற்கொள்ளைக்காரர்கள் வழிவந்தவர்கள் என்று மகாதிர் கூறினார்.