ஏழூ ஆண்டுகளில் முதல்தடவையாக பிரிம் உதவித் தொகையில் ஏற்றம் இல்லை

 

பட்ஜெட் 2018: இன்று நாடாளுமன்றத்தில் 2018 பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர் நஜிப், பிரிம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரொக்கம் ரிம1,200 வரையிலான நிதி உதவி நிலைநிறுத்தப்படும் என்றார்.

பிரிம் மூலம் 7 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளனர். அதற்கு ரிம6.8 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

“ஆகவே, 2018 இல், அந்த 7 மில்லியன் மக்கள் இந்த உதவித் தொகையைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள். அதன் மிக உயர்ந்த அளவு ரிம1,200 ஆக இருக்கும்”, என்றாரவர்.

பிரிம் உதவித் தொகை கொள்கையைத் தொடர்ந்து விமர்சித்து வந்த எதிரணி இப்போது பல்டி அடித்திருப்பதாக நஜிப் கூறினார்.