ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: மஇகா பதில் சொல்ல வேண்டும்!


ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: மஇகா பதில் சொல்ல வேண்டும்!

2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கான காரணங்களை மஇகா தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, பிரதமர் நஜிப் அவர்கள் எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அறிவித்தார். அதன் வழி 2022 வாக்கில் மலேசிய இந்தியர்களின் கல்வி மற்றும் சமூக பொருளாதாரம் மேம்பாடடையும் என்றார்.

அதோடு,  கடந்த ஜூலை 11ஆம் தேதி, டெங்கிள் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் உரையாற்றிய பிரதமர் நஜிப், இத்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’.  மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல்திட்டம் இதுவாகும். சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்க எம்.ஐ.பி. ஒரு சிறந்த தளமாகும் என்று கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்புகள் இந்தியர்களிடையே ஒரு நம்பிக்கையை  ஏற்படுத்தியது. அதன் அடிப்டையில் 2018 பட்ஜெட்டில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.

இவை குறித்து கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் இயக்குனர் கா. ஆறுமுகம், தான் பலத்த ஏமாற்றத்தை அடைந்ததாகக் கூறினார். “எம்ஐபி வழி இந்தியர்களை, குறிப்பாக கீழ்மட்ட நாற்பது விழுக்காட்டினரை, 2022 க்குள் முன்னடைவு செய்ய வேண்டுமானால் கொள்கை அடிப்படையிலான திட்டங்கள் தேவை. அவை பற்றிய எந்தத் தகவலும் அவரது பட்ஜெட் உரையில் இல்லை”, என்றார்.

மேலும் விவரிக்கையில், “பட்ஜெட்டின்  மொத்த ஒதுக்கீடு ரிம280, 000 மில்லியன். அதில் ரிம46, 000  மில்லியன் மேம்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவை, தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம 50 மில்லியன், தெக்குன் திட்டத்தின் கீழ் ரிம 50 மில்லியன், செடிக் அமைப்புக்கு ரிம 50 மில்லியன் மற்றும் அமனா சகாம் 1 மலேசிய வழி 1,500 மில்லியன் யுனிட்கள் ஒதுக்கப்பட்டு அதில் பங்கு கொள்ள சிறப்பு கடனுதவியாக ரிம 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது”, என்றார்.

கடந்த கால பட்ஜெட்டை விட இது மோசமாக இருப்பதாக கூறிய வழக்கறிஞருமான ஆறுமுகம், அமனா சகாம் 1 மலேசிய யுனிட்களை வாங்கும் நிலையில் ஏழ்மையில் வாழும் இந்தியர்கள் இல்லை. எம்ஐபி அறிக்கையின்படி  கீழ்மட்ட 40 விழுக்காட்டு  இந்தியர்களின் சராசரி குடும்ப வருமானம் ரிம 2,672 மட்டுமே. இதில் 227,000  குடும்பங்கள் உள்ளனர். மேலும், இவர்களில் 82 விழுக்காட்டினர் கடனாளியாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களால் எப்படி இந்த முதலீட்டை செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். பணம் உள்ளவர்கள் மட்டும்தான் இதில் பயனடைய இயலும். இந்த ஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு என அவர் சாடினார்.

“எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அமலாக்கம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 2 விழுக்காட்டு  பட்ஜெட் தொகையையாவது, அதாவது ரிம 5,600 மில்லியனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதைவிடுத்து சுமார் வெறும் ரிம 150 மில்லியனை ‘இந்தியர்கள் என்ற அடையாளத்தில் தமிழ்ப்பள்ளிக்கும், தெக்குன் நிதிக்கும் செடிக்-க்கும் ஒதுக்கீடு செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது”, என்கிறார் ஆறுமுகம்.

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, ‘வெட்டி பேச்சோ’ அல்லது அர்த்தமற்றதோ அல்ல. இத்திட்டம் ‘நிஜம்’ , மலேசிய இந்திய சமூகத்தை மேம்படுத்த உருவான உண்மையான, முதல் செயல் திட்டம் என்றும், இது சக்தி வாய்ந்த, ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியர் சமூகத்தை உருவாக்கும் எனவும் நஜிப் கூறியதை, இந்தியர்களின் பிரதிநிதியாக இருக்கும் மஇகா, பிரதமரின் வாக்குறுதிக்கு ஏற்ற வகையில் என்ன ஒதுக்கீடுகள் கொள்கை அளவில் உள்ளன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

(சீரமைக்கப்பட்டது)

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • en thaai thamizh wrote on 28 அக்டோபர், 2017, 14:39

  ஐயா குலசேகரன் அவர்களே- MIC நாதாரிகளுக்கு எலும்பு துண்டுகள் கிடைத்திருக்கும் – அதிலும் நம்பிக்கை நாயகனின் அள்ளிவிட்டான் கதைகளை வேறு யார் நம்புவர்?

 • Dhilip 2 wrote on 28 அக்டோபர், 2017, 15:39

  மா இ கா ஒருபோதும் ஏழை மக்களை காப்பாற்றாது ! 50 ஆண்டுகளாக நம்மை சாமி வேலு போன்றா மண்டோர்களை கொண்டு , நம் ஓட்டுரிமையை செல்லா காசு ஆக்கி விட்ட்து ! நாம் 25 முதல் 30 லட்சம் என்றால் , அந்நியர்கள் 45 முதல் 60 லட்சம் வரை உள்ளனர் மலேசியாவில் ! எனவே ஓட்டுரிமையை வைத்து ஒரு ஆணியும் அடிக்க முடியாது ! மேலும் , வறுமையில் உள்ளவர்கள் அப்படியே தான் இருப்பர் ! BUDJET 2018 ல் எந்த ஒரு அம்சமும் இல்லை ஏழை இந்தியர்களுக்கு ! இதற்க்கு 30 லட்சம் விஷ பாட்டில் கொடுத்திருக்கலாம் ! ரோஹிண்யா மக்களை போல் நாமும் இல்லாமல் போயிருப்போம் !

 • iraama thanneermalai wrote on 28 அக்டோபர், 2017, 16:44

  இனியாவது அரசியலையும் அரசையும் முற்றிலும் சாராமல் மாற்றுவழியில் சிந்தித்து ஒன்றுபட்டு முன்னேறும் வழிகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும் .சமீபத்த்தில் ஆஸ்ட்ரோ வானவில்லில் காண்பித்த கண்ணாடி எனும் தொகுப்பு நல்ல உதாரணம் .நம் சமுதாயத்தினர் ஒன்றுபட்டு செயல்பட்டால் வறுமைப்பிடியிளிருந்து பல்லாயிரக்கனக்கானோரை விடுவிக்க முடியும் என்பதை தெளிவாக காண்பிக்கிறது .அதற்கான துவக்கம் நமது ஒற்றுமையில் இருக்கிறது .

 • வசந்த மோகன் wrote on 28 அக்டோபர், 2017, 22:34

  யானை பசி கொண்ட கிந்திய சமுதாயத்துக்கு துளியூண்டு சோளப்பொறி போட்டிருக்கிறார். இதை நம் ஊடகங்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றன.

  நிறைய கொடுத்த பின்னும் கொடுத்தது போதாது இன்னும் வேண்டும் என்று போராடும் சீன சமூக ஊடகங்கள் போதாது என்று கூவுகின்றன.

  அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர்களாகிய நாம் அந்தப் பழமொழியை மறந்து விட்டோம். எதற்கும் உதவாத போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனும் பழமொழியை கட்டி அழுகின்றோம்.

  இப்போது கொடுப்பதாக வாக்குறுதி அளித்ததில் கூட உண்மையில் எவ்வளவு கிடைக்கும் அன்பது நாச்சியப்பருக்கே வெளிச்சம். கிடைக்கும் சில துளிகள் கூட போய்ச் சேர வேண்டிய ஏழைகளுக்கும் தகுதி உடையோருக்கும் போய்ச்சேருமா அல்லது யார் யார் பாக்கெட்டுக்கள் நிரம்பும் என்பது கேள்விக்குறியே..

 • பெயரிலி wrote on 29 அக்டோபர், 2017, 0:09

  ம.இ.கா. வின் மாண்புமிகு தலைவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் பெறுவதற்கு ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துகிறார்கள் இதில் சமுதாயத்தைப் பற்றி கவலை இல்லை பிரதமர் அறிவித்த பட்ஜெட்டை பற்றியும் சிந்திக்க நேரம் எங்கையா இருக்கு….

 • maalathi wrote on 29 அக்டோபர், 2017, 6:39

  செடிக் அமைப்புக்கு 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை எதனால் குறிப்பிடவில்லை. மற்றபடி உங்கள் கருத்துக்கள் நன்றாக உள்ளன. ஒரு முழுமையான தீர்வு நமக்கு வேண்டும் அதை வுடுத்தி கொழிக்கு தீனி போடுவது போல் பிட்சி போடுவது நீண்ட கால பயனை அளிக்காது.

 • payasam paruppu mani kunjumani wrote on 29 அக்டோபர், 2017, 15:01

  MIC xxmbathaan layakku just put this

 • அலை ஓசை wrote on 29 அக்டோபர், 2017, 16:07

  குழப்போகுழுப்பு என்று குழப்பிய 
  குட்டையில் இந்தியர்களின் வாக்குகளை
  கவரும் பட்ஜெட்,ம,இ,க ஓட்டைபோட
  நாக்கை தொங்கப்போட்டு வலம்வரும்!

 • வெற்றிச்செல்வன் wrote on 30 அக்டோபர், 2017, 17:51

  கடந்த பட்ஜெட்டில் ‘நன்றி’ என்று அவர் சொன்னதைக் கேட்டு ஒரு பேமாணி உச்சி குளிர்ந்து விட்டது என்றான்.
  இந்த பட்ஜெட்டின் போது ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ சொன்னதும் பின்னர் ‘நாளை நமதே’ என்று சொன்னதும் இந்த மடையர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர்ந்து விட்டிருக்குமே..

 • அலை ஓசை wrote on 30 அக்டோபர், 2017, 18:42

  கேட்டதில் 90%சதவீதம் கிடைச்சிருச்சி
  என்றுவானத்திலிருந்து பூமிக்கு 
  குதிக்கிறார் ம இக தலை,அதில் தானைக்கும்
  எவ்வளவு போகுமோ ஆண்டவனுக்கே
  வெளிச்சம்!சிங்கத்துக்கு என்னாச்சி
  கர்ஜிக்க கானமே!

 • sunanmbu wrote on 31 அக்டோபர், 2017, 15:18

  BN arasu sirantha muraiyil indiarkku othukidu sithullathu

 • குடிமகன் wrote on 1 நவம்பர், 2017, 13:17

  இது போன்ற நிதிநிலை அறிக்கைகளை இந்தியர்காக தேசிய முன்ணனி அரசு பல ஆண்டுகள் செய்து வந்துள்ளது ஆனால் முறையான அமலாக்கம் செய்யவதில்லை தேர்தலுக்காகவே நடத்தும் நாடகமாகவே இவை இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: